திங்கள், ஜனவரி 10, 2011

இலக்கியக் காரணின் மனிதம் இதுவா


கேள்வி - எனது முதலாவது கேள்வியும் விடயமும். இலக்கியத்தில் மனிதம் என்றால் என்ன? என நீண்ட நாட்களாக என்னுள் உராய்ந்துகொண்டிருக்கும் கேள்வியை தற்போதைக்கு விடுகிறேன். எனது 'குரோட்டன் அழகி'யில் வெளியான கவிதைகள் பல தேசிய பத்திரிகைகளில் வெளிவந்தவைகளாகும். அக்காலம் உமாவரதராஜன் போன்ற நல்லுள்ளங்கள் அந்தக் கவிதைகள்;வாயிலாக அறிமுகமானார்கள். ஆத்மாநாம்இ பசுவையாஇ விக்கிரமாதித்யன்இ மீராஇ ஞானக்கூத்தன் என பலரை அறிமுகப்படுத்தி என்னை மேலும் எழுதச் செய்தவர் உமா என்னறால் மிகையில்லை. அது ஒருபுறம் இருக்க. (1984) எனது எல்லாக் கவிதைகளையும் தொகுத்து நூலாக்க எண்ணியிருந்த சமயம் அதற்கொரு பெயரும் இட்டுஇ அட்டையும் வரையவேண்டியிருந்தது. பெயரை காற்று-மழை-நான் என வைத்துக்கொண்டேன். அட்டையை வரைய வேண்டும். பிரபலமான ஓவியர்களிடம் சென்றேன். முடியாதுபோக ஓவியத்தில் பரிச்சயம் இல்லாத ஒருவர் ஒப்பெடுத்துக்கொண்டு வரைந்தார். ஆவர் விமர்சகர்இ சிறுகதை ஆசிரியர். கறுப்பும்இ வெள்ளையுமாக நனைந்த காகம் மாதிரி ஆக்கித்தாந்தார். எனது மனசுக்குப் பிடிக்கவில்லை. மிகவும் நாசூக்காக கதைத்தேன். அட்டைப்படம் என் கையில் இருந்தது. அவர் வாங்கி எடுத்துக்கொண்டார். திரும்பிப் பார்ப்பதற்கிடையில் பலவாறு கிழித்து என்முகத்தில் தூக்கி வீசிவிட்டார். (உண்மையாக முகத்தில் பட்டுக் கலைந்தது) போ... என்றார். போ... வெளியே என்றார். பிற்காலத்தில் அவருடன் உறவாகவே இருந்தேன்.
சொல்லுங்கள் இது என்னஇ இல்கியக்காரரின் மனிதம் இதுவா?
(ஈழத்து நவீன கவிஞர்களுள் ஒருவரான டீன் கபூர்)

பதில்- இலக்கியத்தில் மனிதத்தை தேடுவது 80களோடு கவனிப்பற்றுப்போய்விட்டது.
''மனிதம்'' என்று பொதுப்படையான பார்வை காலாவதியான ஒன்று.
எல்லா மனிதர்களுக்குமான பொதுப்புரில்கள் உண்டு என்ற நிலையைக் கடந்து
இலக்கியச் செயற்பாடுகளும் வந்துவிட்டன.ஒன்றுக்கு மேற்பட்ட மனிதம் பற்றிய
கருத்துக்கள் இருக்கமுடியும்.அதுபோல் எல்லாக் கருத்துக்களும் இணைந்தும் மறுத்தும்
செயற்படும் இடமாகவே இலக்கியம் இருக்கும்.(கொலை செய்வதுகூட மனிதாபிமான விசயமாக
பாவிக்கப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்) இன்று யாரும் இலக்கியத்தில் மனிதத்தின் இடம் என்ன
என்ற வகையில் இலக்கியப்பிரதிகளை அனுகுவதில்லை.
உங்கள் விசயத்திற்கு வருகிறேன்.

''பிரபலமான ஓவியர்களிடம் சென்றேன். முடியாதுபோக ஓவியத்தில் பரிச்சயம் இல்லாத ஒருவர் ஒப்பெடுத்துக்கொண்டு வரைந்தார். ''

பிரபலமான ஓவியர்கள் மறுத்த அல்லது கவனிக்காதபோது
ஒங்களுக்கு உதவ முன்வந்தார் என்பதை நினைவுபடுத்துகிறீர்கள்.
அத்தோடு ஓவியத்தடன் பரிச்சயம் இல்லாத ஒருவர் என்று தெரிந்திருந்தும் அதை ஏற்றுக்கொண்டுதான்
அவரிடம் கொடுத்தீர்கள். பின் ஏன் விரும்பாமல் போனீர்கள்? சரி பிடிக்கவில்லை.
உங்களுக்காக அவர் பரிச்சயம் இல்லாதபோதும் உதவ முயற்சித்ததற்கு
அவருக்கு நீங்கள் என்னவகை நன்றிகளை தெரிவித்தீர்கள்?
ஓவியத்தை வரையச்சொல்லிவிட்டு பின் பிடிக்கவில்லை என்று அவமதித்தது
இலக்கிய மனிதம் நிறைந்த ஒன்றா?
இவை எல்லாவற்றிக்கும் மேலாக ஒன்றுள்ளது.
தனக்கு உதவுகிறவர்களை சிலாகிப்பதைப்போல்இ தான் எதிர்நிலையில் நிறுத்துபவர்களையும்
யாரென்று சுட்டிக்காட்டும் துணிச்சல் எழுத்தாளனுக்கு அடிப்படையானது.
அவர் யாரெண்டு மறைப்பதினூடாக இ அவரின் பக்கநியாயங்களை நாங்கள்
அறியமுடியாதபடி தடுக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
உங்களுடைய விசயங்களை மட்டுமே வைத்துக்கொண்டு இந்தச் சம்பவத்தை
புரிந்துகொள்வதென்றால் சாத்திரம்தான் பார்க்கவேண்டும்.
சரி..நீங்கள் குறிப்பிடுவது யாரெண்று இனியாவது வெளிப்படுத்துங்கள்.
அவர் பக்க கருத்துக்களையும் கேட்போம்.
அவருக்கு -அவரே நீங்கள் கிழித்திருக்கக்கூடாது. பிடிக்காமல் எப்படி
ஒரு புத்தகத்தின் அட்டைப்படமாக அதை ஏற்றுக்கொள்ள முடியும்.
ஆசிரியரின் விருப்பங்களுக்கும் நீங்கள் மதிப்பளித்திருக்கலாம்.
''நீங்கள் சொல்லும் குறித்த கவிதைத்தொகுப்பு வெளிவந்ததா?
இனம் தெரியாத அவரின் கிழித்தெறிதல் சம்பவத்தால்
கவிதைநூல் வெளிவராமல்போய்விட்டதா?
ஏன் தோழர் 26 வருடங்களுக்குபிறகு இதைப்பேசுகிறீர்கள்?
ஏதாவது பிரத்தியேக காரணங்கள் பின்னால் உண்டா?
சொல்லுங்கள் தோழர்?