புதன், அக்டோபர் 16, 2013

தொடங்குவதும் முடிப்பதும்

-கல்லூரன் (பொன்னையா கணேசன்)

தொடங்குவதும் முடிப்பதுமாகத்தான்
நமது வாழ்வு நகர்ந்துகொண்டிருக்கிறது.
மரணம் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் மரணம் நம்மை துரத்தவிடலாகாது
அதனை தழுவிக் கொள்ள வேண்டும்
எனச் சொல்லிச் சென்றிருக்கிறார்
நம் சண்முகம் சிவலிங்கம்.

மரணம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற
ஒரு வரைவிலக்கணத்தைச் சொல்லித்
தூங்கும் இந்த மாபெரும்
மனிதனுடன் ஒரு கவிஞனுடன் ஒரு எழுத்தாளருடன்
அவரது இறுதிக்காலத்தில் பழகும்  பாக்கியம் பெற்ற
ஒரு சிறு பிரகிருதியின் குரல் இது.

சண்முகம் சிவலிங்கம்
மரணத்தைப்பற்றி நான் பேசும் பொழுதெல்லாம்
அது வாழ்வின் இருப்பு என்று கூறுவார்.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்ஞோம் என்ற உனது குரல்
இன்னும் என் செவிகளில் ஒலிக்;;;;;கிறது.
சாவதும் காலமாவதும் வௌ;வேறுபட்டவை
என நான் கருதுகிறேன்.

சண்முகம் சிவலிங்கம் அவர்கள் சாகவில்லை
அவர் காலமாகி இருக்கிறார்.
அவர் இல்லாத வெறுமை என் இதயத்தைப் பிழிகிறது
நான் சிருஸ்டித்து வைத்திருந்த என் சிந்தனையில்
எத்தனை மாற்றங்களை உண்டாக்கியவன்
என் சிறுமைகளை உடைத்;;து வீசியவன்

பனித் துளிகளாய் வந்தோம்
காற்றைப் போல் போகிறோம்
உறவுகள் என நாம் சிருஸ்டித்திருக்கும் தோப்பில்
நாம் ஒவ்வொருவரும் தனித்த மரங்கள் தான்
என்று மரணம் வந்து சொல்லி விட்டுப்போகிறது.
நீ நடக்கத் தொடங்கிய சில காலடியிலிருந்து
உனது இருப்பு ஒரு சுடராக Nஐhலிக்கிறது
என் இதயத்தின் ஒவ்வொரு மூலையிலும்.

உனது வெறுமை எது வரையில்
நான் இருக்கும் வரை
எத்தனையோ சத்தங்களுக்கு மத்தியில்
இந்தப் பிரகிருதியின் குரலைக் கேட்பதற்கு
உன்னிடம் ஒரு செவி இருக்கிறது
என்ற நம்பிக்கையில் இது எனது சமர்ப்பணம்.
ஏனெனில் ஒரு புல்லிலும் அதன் முழுமையை உரைத்தவன் நீ

உனது ஆத்மா சாந்தி அடைவதாக
தூங்குவது போலும்  இறப்பு என சொல்லி
தூங்கிக் கொண்டிருக்கிறாய்
ஆயினும் நீ தூங்கி விழித்திருக்கிறாய்
என் இதயத்துள் எப்போதும்
உன் வாழ்வின் இருப்பில் எப்போதும்