ஞாயிறு, மார்ச் 07, 2010

கடவுளைக் கொல்லும் ஆயுதமாக நடிகை ரஞ்சிதாவின் உடல்


.எழுத நினைக்கும்போது குறுக்கிடும்- ஜெயமோகன்,சாருநிவேதிதா,மனுஷ்யபுத்திரன்.

றியாஸ் குரானா

நித்யானந்தா சுவமிகளின் லீலைகள் தமிழின் பொதுக்களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தமிழின் நவீன எழுத்தாளர்கள் செயலாற்றும் ஒதுக்குப்புறமான ஒரு வெளியில் வேறுவித அசைவுகளை உண்டுபண்ணியிருக்கிறது. நான் இது பற்றிப்பேசப் போவதில்லை. ஆன்மீகம் தொடர்பான இரண்டுவகை தன்மைகொண்ட பக்தர்களாகவும்,கலாச்சார காவலர்களாகவும் தம்மை அப்பாவித்தனமாக வெளிப்படுத்திக் கொண்டவர்களாக ஜெயமோகனையும்,சாருநிவேதிதாவையும் நாம் அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது.
இந்துத்துவ தத்துவத்தின் மேன்மையையும்,புனிதங்களையும் என்றென்றைக்குமானது என்ற ஒரு நிலையில்வைத்து புரிந்துகொள்பவர் ஜெயமோகன். அது மனிதகுல மேன்மைக்குரிய ஒரேவழி என்று சிந்திப்பவர்.அதற்காக அதன் வன்முறையைக்கூட மவுனமாகவும்,வெளிப்படையாகவும் ஆதரிப்பவர். அதனூடான ஆர்வமேலீட்டால் எழுத்துக்களை உற்பத்திப்பவர். இலக்கியச் செயற்பாடுகளைக்கூட இந்துத்துவ வெளிச்சத்தில் வைத்தே புரிந்துகொள்ளவும், எழுதவும் பிரயாசைப்படுபவர்.
இந்தவகைப் புரிதலுக்கு மாற்றமாக,சாகசங்கள்,அற்புதங்கள் மற்றும் உளவியலின் ஆழமற்ற காரணங்களால் தன்னை ஒப்புக்கொடுக்கும் புரிதலை நிகழ்த்துபவர் சாருநிவேதிதா. இலகுவில் ஏதாவதொன்றின் மீது தனது சிந்தனையை சரணடைய வைப்பவர்.இனம்புரியாத கவரச்சியில் நின்று உழல்பவர்.அல்லது அந்தத் திசையில் மட்டும் நின்று சிந்திக்க முற்படுபவர்.வேறொருவரின் எழுத்துக்களையும் தனதாக மாற்றிக்கொண்டவர் என்ற கதைகளும் கடந்த காலங்களில் சுமத்தப்பட்டவர்.அதை உண்மையாக மாற்றும் பெருமுயற்ச்சியை இவரின் பிற எழுத்துக்கள் செய்து கொண்டிருக்கின்றன.பாடப்புத்தகங்களுக்குள்ளோ அல்லது மறைவான இடங்களிலோ ஒழித்துவைத்து வாசிக்கக்கூடிய எழுத்துக்களை அதிகம் உற்பத்திக்க விரும்பும் எழுத்துச் செயற்பாடு இவருடையது.
இந்த தனிமனித பக்தவாதமும்,தத்துவார்த்த பக்தவாதமும் தமிழின் முக்கிய எழுத்தாளர்களாக கருதப்படும்  ஜெயமோகனுக்கும்,சாருநிவேதாவுக்குமான அடையாளங்களாகும்.இந்த அடையாளம் அவர்கள் மீது திணிக்கப்பட்டது என்று கருதத்தேவையில்லை.அது அவர்களாகவே விரும்பி ஏற்றுக்கொண்ட அடையாளம் என்பது அவர்களின் எழுத்துக்களில் ஒரு கொண்டாட்டமாகவே வெளிப்படுகின்றது.
இந்துத் தத்துவம் மிகச் சரியாகவே இருக்கிறது.அதைப் பயன்படுத்துபவர்கள் பிழையான மனிதர்கள் என்றும் மதத்தைப் பின்பற்றுபவர்களின் செயற்பாடுகளால் மத்தின் புனிதத்தன்மை கெட்டுவிடுவதில்லை  என்றும் தனது மத அபிமானத்திற்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன். அதேநேரம் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாக புலம்பிக்கொண்டிருப்பதோடு, தனது முன்னாள் ஆதர்ச கடவுளின் பிரதிநிதி அயோக்கியன் என்றும் இரட்டிப்பு பழிவாங்கல் என்றவகையில் பலமுறை தூக்கிலப்படவேண்டும் என்ற அறிவிப்புக்களை தமத ஆதரவாளரகளை நோக்கி வெளியிட்டபடி இருக்கிறார் சாருநிவேதிதா.இவைதான் தமிழின் முக்கிய எழுத்தாளர்களாக கருதப்படுபவர்களின் புரிதல்.
என்னமா வளர்ந்திருக்கிறது தமிழ் எழுத்துச் செயற்பாடு?
எப்போதோ சாமியாக மாறிவிட்ட சாருநிவேதிதாவின் சல்லாப நெடிமாத்திரம் வீசும் எழுத்துக்களும், சாமித்தன்மையை மாத்திரம் அவாவும் உளவியலை முதன்மைப்படுத்தும் ஜெயமோகனின் எழுத்துக்களும் பெரும் வியாபாரப்பொருளாக தமிழ்சூழலை நிரப்பிக்கொண்டிருப்பதுதான் தமிழின் பிரதானமான கூத்து. சிறுபத்திரிகைகளும்,பதிப்பகங்களும் இந்தக்கூத்துக்கு ஆடுபவர்களாக தம்மை மாற்றியமைத்துக்கொள்ள முயற்சிப்பதை ஓரத்தில் நின்றபடி பரிதாபத்தோடு பலர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
உடல் வேட்கையை கடந்துவிட்ட நிலையில் ஒரு அதிமனிதனை கண்டுபிடித்துவிட்டதாக பெருமிதம் கொள்ளும் பிறழ் உளவியல் எழுத்துக்களை சாருவும்,உடல் வேட்கையை கடந்துவிடக்கூடிய அதிமனிதனை உருவாக்கும் திறன் இந்துத் தத்துவத்திற்கு உண்டு என்ற உளவியல் சார் புpரிதலை எழுத்தாக்கும் ஜெயமோகனும் தமிழின் விரிந்த பரப்பில் இன்றைய நிலையில் காலாவதியாகிப்போனதும் மறைமுக வன்முறை ஆதரவாளர்களாகவும் அன்றி வேறு புலத்திலிருந்து நோக்கப்பட முடியாதவர்கள். இந்த பரிதாபகரமான நிலையை அவர்கள் விரும்பி ஏற்றுக்கொள்வதுதான் அதிசயமானது.
வன்முறையை மறைவில் அவாவிநிற்கிற இவர்களுடைய எழுத்துக்களை உலகின் எல்லைகளை கடந்துவிட்ட பிரதிகளாக பெருமூச்சுகளோடும், பிரமிப்புகளோடும் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் இலக்கியம் பற்றிய மூடநம்பிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டிய ஒன்று.
நித்தியானந்தா சுவாமி அவர்களை எழுத்துப்புரிதல்களுக்காக எப்படி அறிமுகப்படுத்தலாம் என்று யோசிக்கும்போது ஒரு அம்சத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாமென்று தோண்றுகிறது.
சாருவின் எழுத்துக்களில் மிக மலிவாகவும்,கவனமற்றும் கிடக்கும் உடலும்,உடல் சார்ந்த வேட்கைகளையும்,ஜெயமோகனின் எழுத்துக்களில் வேராக இருக்கும் இந்துத்தத்துவ அமைப்புசார் புனிதமனதையும் கலந்து சமூகவெளியில் பரிசோதித்துப் பார்க்கிறார் சுவாமி.தனித்தனியாக இயங்கிய இருவரையும் அல்லது இருவகைப்புரிதல்களையும் ஒன்றாக்கி சமூகவெளிக்கு கொண்டுவந்ததுதான் நித்தியானந்தா சுவாமி என்ற ஒரு அம்சம்.
அண்மையில் நடந்தேறிய முக்கியமான இன்னொரு விடயம் இந்த இருவருக்குமிடையில் மனுஷ்ய புத்திரன் மாட்டிக்டி கொண்டதுதான். பொம்மையொன்றைப்போல மனுஷ்ய புத்திரனின் கவிதைப்பிரதிகள் இரண்டுபேராலும் பந்தாடப்பட்டது. பாப்லோ நெருடாவின்- மய்யநீரோட்டத்திற்கென (பொதுமக்கள் பரப்பு) தயாரிக்கப்பட்ட கவிதைகளின் தொடர்சியாகவும்,உணர்வெழுச்சிகளைக் கையாளுதல் போன்ற (மதங்களின்); அடிப்படை வினைப்பாடுகளுக்குமிடையிலான கவிதையியலாக கருதி ம.புத்திரனின் பிரதிகளை பேசுபொருளாக்கிக்கொள்ள ஜெயமோகன் முனைந்ததும், அதனோடு சுகுமாரனின் கவிதைப்பிரதிகளுக்குள் மறைந்துவிடக்கூடிய கவிதைத் தன்மையைத்தான் ம.புத்திரனின் கவிதைகள் கொண்டிருப்பதாக நிறுவமற்பட்டதையும் நாமறிவோம்.அதோடு நின்றுவிடாது உடல் அவாவுதலும் அதன் இயலாமைகளால் உருப்பெறும் சிந்தனைகள் அதன் தீவிர ஆரப்பரிப்பு போன்றவைகள், ம.புத்திரனின் கவிதைப்பிரதிகளில் பெரும் ஓலத்தைப்போல் கட்டமைக்கப் பட்டிருப்பதாகவும், அந்த ஓலத்தின்மீது கழிவிரக்கத்தை உருவாக்கும் கவனஈர்ப்பை ஏற்படுத்த இவரின் கவிதைப் பிரதிகள் முயற்சிப்பதாகவும் ஜெயமோகன் நேரடியாகவும்.மறைமுகமாகவும் நிறுவிச்செல்கிறார்.சுகுமாரனின் கவிதைக்குள் மறைந்துவிடக்கூடியவை ம.புத்திரனின் கவிதைகள் என்பது கவிதைபற்றிய நவீனபுரிதலின் அரிச்சுவடிகூட தெரியாது என்பதையே காட்டுகிறது.(உதாரணமாக-கவிதையின் கீழ் பெயர் இல்லாது போனால் சுகுமாரனுடையது என்றுதான் உணரமுடியும் என்ற வகை கருத்துக்கள்.)
இதற்கு வெளியே,சாரு ம.புத்திரனின் கவிதைகள் தொடர்பாக தனது கண்டுபிடிப்புக்களை தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.சொற்களைக்கொண்டு ஒரு பிரதி, எப்படி தன்னை கவிதையாக நிகழ்த்திக்காட்டுகிறது என்று துளியளவும் எனக்குத்தெரிய பேசாதவர் சாரு. நான்கு அல்லது அய்ந்து வரிகளில் ம.புத்திரனின் கவிதைப்பிரதிகள் உலகத்தரத்துக்கு ஒப்பானவை.உடனடியாக ஆங்கில மொழிக்கு மாற்றப்படவேண்டும். பல இலட்சம் பேர்கள் வாசிக்கின்ற களத்துக்கு ம.புத்திரனின் கவிதைப்பிரதிகளை கொண்டுசேர்க்கவேண்டும் என்ற அதிரடி அறிவிப்புக்களைச் செய்து தனது கோமாளித்தனத்தை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இந்த அறிவிப்புக்கள் தன்னை பெரும் கவிதை வாசிப்பாளனாக வெளிப்படுத்தும் என்று நினைத்திருந்தால் நித்தியானந்தாவை கடவுள் என புரிந்து கொண்டதைப்போல்தான் இருக்கும். எப்போதும் தனது எதிர்வுகூறல் மிக முக்கியமான தீரக்கதரிசனம் போல்தான் சாரு அறிவிப்பார்.இவ்விரண்டு பேரும் கோழிச் சண்டை போட்டுக்கொள்ளவும்,அல்லது தான்தான் மகா எழுத்தாளன் என நிறுவிக்கொள்ளவும் ம.புத்திரனின் கவிதைப்பிரதிகள் பயன்படுத்தப்பட்டன.
உணர்வுகளை அதன் பரபரப்பற்ற தன்மைகளை புரியும் எத்தனத்தில் எழுத்துக்களாக மாற்றி அதன் நிதானமான விசாரணையில், நேரனயாகவும் எளிமையாகவும் கவிதை செய்வதாகச் சொல்லப்படும் வேலைகளை தனது பிரதிகளின் மூலம் நிகழ்த்த முற்படுவதே ம.புத்திரனின் பிரதிகள். இது ஒருவகையில் கவிதையைக் கடந்துவிடும் எத்தனத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் பிரதிகள்தான். இ;ந்றைய தமிழ் சூழலில் கவிதைகள் எனக்கருதப்பட்டவைகள் இல்லை என்றே கூறலாம். கவிதை என்ற கதைகள் காலாவதியாகிப்போய்விட்டது.கவிதையைக் கடந்துவிட முயற்சிக்கும் பிரதிகள்தான் எழுதப்படுகின்றன. கவிதை என்ற பழம்பேச்சு தழித்திறனாய்வுகளில் மாத்திரம்தான் உயிர் வாழ்கிறது.  திறனாய்வுகளை  புதிப்பிக்கும்போது கவிதை தன்னைக் கடந்து சென்றுவிட்டதை அதிர்ச்சியோடு ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
உண்மையில் எனக்கு கவிதை கவிதையற்றது ஏன் இலக்கியம் இலக்கியமற்றது போன்ற வகைப்படுத்தல்கள்,வரையறைகள் உவப்பானவையாகத் தென்படவில்லை. இந்த வகைப்படுத்தல்களின் மீது புதிய வாசிப்புக்கள் அவசியம் என்றே தெளிவாச்சொல்லுகிறேன். இந்த வகைப்படுத்தல்கள் இறுகிப்போன ஒரு நித்தியப்புரிதலை உருவாக்கியிருக்கிறது. அதைச்சுற்றி எழுத்து அரசியல்களும் நிறவப்பட்டவிட்டுது. இலக்கியம் விமர்சனத்துக்கு அப்பாலுள்ள ஒன்றாகவும் கடவுளின் இடத்துக்கு மாற்றீடாவும் கருதப்படும் நிலையில் இருக்கிறது. இலக்கியம் அல்இலக்கியம் என்பதற்கிடையில் தெளிவான எல்லைக்கோடுகள் சாத்தியமில்லை.பரிசோதனைக்கூட அமைப்பின் உள்ளக ஒழுங்குபோன்று ஒன்றில் ஒன்று தாக்கமுறாவண்ணம் பாதுகாப்பது சாத்தியமில்லை. அப்படி பாதுகாக்கும் முயற்சியில் பெரும் புறக்கணிப்புக்கள் நிகழ்ந்தபடி இருக்கின்றன.
ஒரு பிரதி பன்மையான வேலைகளைச் செய்யக்கூடியது. கவிதை, நாவல்,சிறுகதை,கட்டுரை போன்றவை குறித்த அடையாளத்தின் வேலையாக கருதி பேணப்படும் செயற்பாடுகளை மாத்திரம்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளைகள் இனி பிரதிகளின் முன் செல்லுபடியாகாது. இவைகளில் ஏதாவதொரு அம்சம் தூக்கலாக வெளிப்பட்டாலும், தூக்கலாக வெளித்தெரியும் அம்சத்தை முன்னிறுத்தி ஒரு பிரதியை புரிந்துகொள்ள முடியாது. இலக்கியம் அல்இலக்கியம் என வகைப்படுத்தி பிரித்துவைக்கப்பட்ட அனைத்துப் பிரிவுகளின் செயற்பாடுகளும் ஊடாடவும், இயங்கவுமான ஒரு இடமாக பிரதி இருக்கும். இந்த பரிதல்களுக்கு தமிழ் பிரதிகள் நகர்ந்த விட்டது. நமது பெரும் திறனாய்வாளர்கள் தமது கையிலிருக்கும் பிரதிவாசிப்பு ஆயுதங்களை மாற்றிவிடவில்லை. இது தொடர்பான விவாத்திற்கு நான் தயாராகவே இருக்கிறேன். ஆனால் நேரமில்லை. இது ஒரு வெட்டிப்பேச்சு. யாரென்றே தெரியாத இவருக்கெல்லாம் பதில் சொல்லுவதா போன்ற வார்த்தைகளால் தங்களின் இயலாமைகளை சிலரும்., உவப்போடு விவாதிக்க சிலரும் தமத காதகளை இந்தப்பக்கம் திருப்பலாம்.
என்ன தலைப்புச் சொல்லும் என நீங்கள் கருதிய விசயத்தைவிட்டுவிட்டு வேறு எதையோ பேசுவதுபோல் உணருகிறீர்களா? இல்லை. நான் ஜெயமோகனும் சாருவும் இதுவரை எப்படி தமது புரிதல்களை சாத்திப்படுத்தினார்கள் என சுருக்கமாக பேச நினைத்தேன். இதற்கு உதவியாய் நித்தியானந்தா சுவாமியின் சல்லாபத்தையும், மனிஷ்ய புத்திரனின் கவிதைப்பிரதி பற்றிய எழுத்தக்களையும் தொட்டுப்பார்த்தேன்.
சரி அதுபற்றியும் பேசித்தானாக வேண்டும்.
நித்தியானந்தா சுவாமி அவர்களும், திரைப்பட நடிகை ரஞ்சிதா அவர்களும் உடல்களால் புரிந்துகொள்ள முயற்சிக்கும் காணொளிகள்,பல ஊடகங்களில் வலம் வந்தபடி இருக்கின்றன. இது ஒரு ஒழுக்கக் கேடான விடயம் என்ற புலத்திலிருந்து பொழியப்படும் வசவுகளும்,அவதூறுகளும் பெருகியபடியே இருக்கின்றன. இந்நிலையில் நடிகை ரஞ்சிதா ஒரு பெண் என்ற அடிப்படையில் எதிர் கொள்ளக்கூடிய அசவ்கரிகங்களையும்,புறமொதுக்கல்களையும் எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
புனிதம்,கடவுள்குடியிருக்குமிடம்,கடவுள், அதிஉன்னதம் போன்ற மேன்மைகளை நித்தியானந்தா சுவாமி மீது ஏற்றிப் பல்லாயிரம்பேர் புரிந்து கொண்டாலும்,அவரை வெறும் உடலாக நடிகை ரஞ்சிதா கருதியது மிக முக்கியமான கவனஈர்பாகும்.நித்தியானந்தாவின் ஞானக்கண்களிணுடாக பக்திப்பரவசத்திலும், அவர்வழி கடவுளின் முன்னிலையையும் தரிசித்து பல இலட்சம் மக்கள் மோட்சம் பெற்ற உணர்வில் திளைத்துக்கொண்டிருக்கம்போது, அதே ஞானக் கண்ணின் வழியே சுவாமியின் பற்றி எரிந்துகொண்டிருந்த உடலின் அவாவுதலை மிகச்சரியாக அடையாளம் கண்டுகொண்டது ரஞ்சிதாவின் தெளிவு ஆகும். இந்தத் தெளிவினூடாக துறவறம் என்ற பெரும் புனிதத்தை ரஞ்சிதாவால் அசைத்துப்பார்க்க முடிந்திருக்கிறது. பல வருடப் பரிதல்களாலும், சிந்தனைகளாலும் கட்டமைக்கப்பட்ட சாருவின் எழுத்துக்களை, ஒரு பெண் தனது உடல்மொழியால் குப்பைக்குடையின் பக்கம் வீசியெறிந்திருக்கிறாள்.
கடவுளை தனது உடலால் அர்த்தப்படுத்திக்கொள்ள முயற்சித்ததோடு மட்டுமன்ற கடவுளைக் கலங்கடிப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்தியிருப்பது தவறே அல்ல.கடவுளின் உடலை பழக்கப்படுத்திக் கொள்ளுதல் என்பது மிகமுக்கியமான ஆரம்பம்.பக்திக்கவிதைகளில் கடவுளின் ஆன்மாவோடு தம்மை இணைவுறச் செய்யும் தேடலை இன்னும் கொண்டிருப்பதுதான் தமிழ் தொன்மம்.துறவறம் என்ற இந்துத்துவ அதிமனிதக் குறியீடு ரஞ்சிதாவின் உடல் மொழிக்குள் நுழையும்போது அர்த்தமற்று செயலிழந்து போயிருக்கிறது. வற்புறுதர்தலின்றி தனது உடலின் வேட்கையை வெளிப்படுத்தவும் அனுபவிக்கவும் எவருக்கும் உரிமை இருக்கிறது. அதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது வன்மையாக கண்டிக்கப்படவேண்டடிய ஒன்று.சுவாமிக்கும் ரஞ்சிதாவுக்கும் இpடையிலான இந்த உடல் இணக்கம் பிரச்சினையானதோ அல்லது பிழையானதோ அல்ல. தனது உடலின் வேட்கையை கடந்து வந்துவிட்டதாகவும்,கடவுள் தன்னூடாக வெளிப்பட்டு தரிசிக்கிறார் என்ற பொய்களாலும்,வதந்திகளாலும் பல்லாயிரம் மக்களை நம்பவைத்து மோசடி செய்திருப்பதுதான் தண்டணைக்குரிய குற்றம். எழுதப்படாத ஒப்பந்தந்களினூடாக பல்லாயிரம் மக்கள் நம்பவைக்கப்பட்டு பல ஆண்டுகளாக சுரண்டப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வந்திருப்பது குறித்து நித்தியானந்தா சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டியவர்.
எழுத்து என்பது புரிந்து கொள்ள முயற்சிப்பதற்கான ஒரு விசாரணை என்ற வகையில் சாருநிவேதிதாவும், ஜெயமோகனும் எழுத்தைக் கருதவில்லை. தங்களால் நம்பப்படுகின்ற ஒன்றை பரப்புதல் என்றவகையில் செயற்படுபவர்கள். இந்தப் பரப்புதல்களினூடாக கொழுத்த இலாபத்தை நோக்கி தம்மை நகர்த்திக் கொண்டிருப்பவர்கள். வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடி செய்யும் வியாபாரிகள். சுவாமியவர்கள் ஆன்மீகத்தை வைத்து செய்ததும் இதுதான்.ஆயினும் மிக கேவலமான முறையில் தனது கடவுளினால் தோற்கடிக்கப்பட்டிருப்பவர் இப்போதைக்கு சாருநிவேதிதாதான்.