செவ்வாய், மார்ச் 29, 2011

என்னால் கோமாளியாக்கப்பட்டதாக சாருநிவேதிதா ஏற்றுக்கொண்டார்


நான் செய்யும் ஒரே தவறு, எழுதுவதுதான். ஞாநியெல்லாம் என்ன பாடு பட்டிருப்பார் என்று இப்போது புரிகிறது. இந்த நிலையில் சும்மா என்னை நக்கல் பண்ணிக் கொண்டிருந்தால் அவர்களை பட்டியலிலிருந்து நீக்கி விடுவேன். i am facing a direct blackmail
-சாரு நிவேதிதா-

மனம் நொந்து வேனைப் பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் தன்னை நக்கல் பண்ணுபவர்களை நான் நான் பட்டியலிருந்து நீக்கிவிடுவேன் என்று அறிவித்துவிட்டு அவர் யாரையாவது நீக்கியுள்ளாரா என அறியும் ஆவல் உங்களுக்கு இருக்கலாம். அல்லது யாரையாவது நீக்கிவிடுவதற்காக இப்படியான அறிவித்தலை அவர் வெளியிட்டிருக்கலாம். ஆம் அப்படித்தான் நடந்தது. என்னைத்தான் அவரை நக்கல் பண்ணுபவராக சாரு அறிவித்திருக்கிறார்.

தனது நண்பர் பகுதியிலிருந்து என்னை நீக்கியிருக்கிறார்.
ஒரு வேளை எதிரியின் பட்டியலில் இணைத்திருக்கலாம்.
சாரு ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்......?
உரையாட முடியாமல் உங்களுக்கென்ன திண்டாட்டம்..?
இப்படி நான் கேட்கப்போவதில்லை.

அவர் நக்கல் பண்ணியதாக என்மீது அவதூறு (சும்மா) அல்லது குற்றச்சாட்டு(சும்மா) சொல்லும் காரணத்தை நீங்கள் படிக்க இங்கே இணைப்புத்தருகிறேன். சரி...நக்கல் என்பது ஒரு புறமிருக்க........
சீரியசாக அவரோடு விவாதிக்க நான் தயாராகவே உள்ளேன்.இலக்கியம் அதன் கருத்தியல் என உரையாடலாம் சாரு நீங்கள் தயாராக உள்ளீர்களா..?


இதற்க்கு உங்களிடமிருந்து என்ன பதில் வரும்..? நான் பிசியாக உள்ளேன்.பலருக்கு எழுதிக்கொண்டிருப்பதால் இந்த வெட்டி வேலைகளில் நேரம் கழிக்க என்னால் முடியாது.
வேலையற்ற யாராவது இருப்பார்கள் அவர்களிடம் போய் கேளுங்கள். நான் உலகத்தரமான 10 எழுத்தளர்களை எடுத்தால் அதற்குள் நான் வருவேன் நீயார்? இப்படியும் பதில் அமையலாம்.
இப்படிச் சொல்லுவதில் பல உண்மைகள் இருக்கலாம்.


நான் உங்களை அழைப்பது பொட்டிக்கடை கணக்கு வழக்கு பார்ப்பதற்கல்ல....
இலக்கியம் தொடர்பான ஒரு உரையாடலுக்குத்தான்.....
இதுவும் நக்கலாக உங்களுக்குப்பட்டால் நாம் பேசுவது சாத்தியமே இல்லை.
இப்படிச் சொல்லுவதைவிட... ஒரு மஹா எழுத்தாளனுடைய இலக்கிய விவாத்தை
தழிழுலகமே இழந்துவிடும் என்றால்தான் ஒரு வேளை உங்களுக்கு சந்தோசமாக இருக்கும்
என கருதுகிறேன்.


''நக்கல்'' என்பது ஒரு பின்நவீன எழுத்தாளனுக்கு உவப்பானதாக இருக்கும் என்பதெல்லாம்
என் நினைப்பு...அது மட்டுமல்ல நீங்கள்கூட '' நக்கல் நல்லதம்பி'' என்று பட்டம் வாங்குமளவு
கடந்த காலங்களில் நக்கல் பண்ணியிருக்கிறீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா?
நக்கலைப் பார்த்து ஓடி ஒளிந்துகொள்ளவும், நக்கலடிப்பவர்களை பதில் சொல்லாமல் துண்டித்துவிடவும்
எத்தனிக்கும் நீங்கள்.... மூச்சுவிடாமல் பலரை நக்கலடித்துக்கொண்டிருப்பதன் ரகசியம்தான் என்ன.?
நீங்கள் மட்டும்தான் நக்கல் அடிப்பவராக இருக்க வேண்டும் மற்றவர்கள் எல்லோரும் நக்கல் அடிக்கப்படுகிற தன்னிலைகளாக (ஆக்களாக) எப்போதும் இருக்க வேண்டுமா?


உண்மையில் தன்னை நக்கலடிப்பவர்களை ஒவ்வொன்றாக நீக்கத்தொடங்கினால்
கடைசியல் சாரு மட்டும்தான் மிஞ்ச வேண்டும். சில வேளை அதுவும் இல்லாமல் போய்விடலாம்.
ஏதோ ஒரு சந்தர்பத்தில் எல்லோரும் எல்லோரையும் நக்கல் பண்ணித்தானே இருப்பார்கள்.
பின்நவீன விமர்சனம் என்டுகூட நக்கலைச் சொல்லலாம்.....


வாசியுங்கள்

நான் சாருவை கோமாளி என்று சொன்னேன்.
அவர் உண்மையில் கோமாளி இல்லாவிட்டால் ஏன் கோபம் வரவேண்டும்.?
நான் சொல்வதால் அவர் கோமாளியாகிவிடுவாரா..?
ஆம் ஆகிவிடுவார் என்றால் நான் சரியாகத்தானே சொல்லியிருக்கிறேன்.
இல்லை ஆகிவிடமாட்டார் என்றால் அவருக்கு என்ன பிரச்சினை
ஒன்றுமில்லைதானே......