புதன், டிசம்பர் 19, 2012

நான் லீனியர் (Non Linear)

றியாஸ் குரானா

1. புலி இயற்கையின் ஒரு ஆடம்பரமான தயாரிப்பு அல்ல.
2. பூனைகளின் பிறந்த நாள் நமக்கு தெரிவதில்லை.
3. தவறுதலாக ஒரு தோட்டத்தில் இரண்டும் சந்திக்க நேர்ந்தது.
4. ஒன்றையொன்று அறியாதபடி நடந்துகொண்டன.
5. தலைப்புக்கேற்ப கவனமாக செயல்பட்டன.
6. தொந்தரவின்றி வாசித்து முடித்தேன்.
7. அவன் எழுத்தில், கட்டளைப்படி இயங்குகின்றன.
8. புனைவும் ஒரு சிறைதான்.
9. யாரும் அங்கு செல்ல வழிகள் இல்லை.
10. பார்வையிடலாம்.
11. வாசிப்பவர்களின் நினைவில் ஏறி தப்பிக்க முயற்சித்தாலும் முடிவதில்லை.
12. அதே துயரோடு, வாசிக்கின்ற அனைவரிடமும்
ஒரு புலியும், ஒரு பூனையும் பெருகிவிடுகின்றன.