சண்முகம் சிவலிங்கம் நினைக்கப்படுகிறார். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சண்முகம் சிவலிங்கம் நினைக்கப்படுகிறார். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஏப்ரல் 19, 2015

சண்முகம் சிவலிங்கம் நினைக்கப்படுகிறார்.

மறைந்த கவிஞர் எழுத்தளர் சண்முகம் சிவலிங்கத்தின் சிதைந்து போன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் என்ற கவிதை நூல் பற்றி அவரது மறைவை நினைவுறுத்தி இவ்வாக்கம் இடம்பெறுகிறது. 2012-04-20 அன்று மறைந்தார்.

கல்லூரன்

மிகவும் நேர்த்தியான வடிவத்தில் வெளி வந்திருக்கும்  சிதைந்து போன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் ' என்ற சண்முகம் சிவலிங்கத்தின் இக்கவிதைத் தொகுப்பை வாசித்த ; பொழுது எனக்குள் ஏற்பட்ட முதல்  உணர்வு இதுதான் . இவை சிதைந்து போன தேசத்தைப்பற்றி பேச வில்லை இவை தூர்ந்து போன மனக்குகை பற்றிப் பேசவில்லை. மாறாக தூர்ந்து போகாத மனக்குகையிலிருந்து எழும்  சிதைந்து போகாத தேசத்தைப்பற்றிப் பேசுகின்றன என்று தான் எனக்குத் தோன்றுகின்றது. வெறும் மன விரக்தியின் வெளிப்பாடல்ல இக்கவிதைகள். நம்பிக்கைகளின் மின்னல் கீற்றுகள் இக் கவிதைகள். மன உழச்சல்களை, வேதனைகளை காட்சிப்படுத்துவன இக்கவிதைகள். அதே வேளை   உறுதியான மனக்குகையிலிருந்து எழும் அபாரமான அதிர்வுகள் இக்கவிதைகள் என்று எனக்குத்தோன்றுகின்றது.
போருக்குப் போன மகனை இழந்தது பற்றி இவ்வாறு காட்சிப்படுத்துகிறார்;:

'வானில் பனையின் வைர ஓலைகளில்
கூடுகள் நெய்தால் குண்டர்கள் உன்னைக் கொல்வர் என
பூமிக்கடியில் பொந்து கிண்டி
உன்னை என் தோலுக்குள் போர்த்திய
தூக்கணாம் குருவி நான்.
என் துணையையும் மீறி போனாய் நீ
போருக்கு போனாய் போ.'

என்று கூறிவிட்டு,

'வெண்பஞ்சுத் துளிகள் - உன் முயல்கள்
வெளியில் வந்து
துள்ளி முன் பாதங்கள் தூக்கி
செங்கண் முகத்தைத் திருப்பி
எங்கே எனத்தான் இன்னும் தேடுவன
எவர் உன்போல் அடம்பன் துளிர் ஊட்டுவார் அவர்க்கு ?
பப்பி திரிகிறது
நாலுகால் பாய்ச்சலில்
எறிந்த பந்தை எடுத்து வந்து
என்னிடம் தராதாம்
உன்னையே தேடி ஓட்டமாய் திரிகிறது.

இத்தனையும் விட்டு
எப்படி நீ
துப்பாக்கியோடு
வாழ்வைத் தொடர்கிறாய் மகனே'

என்று கூறுகிறார்.
மேலும்,

ஒருத்தன் அல்ல என் மகன்
ஒருத்தன் அல்ல என் மாவீரன்
உலகின் மிகப்பரந்த மலைச்சரிவுகளிலும்
வனங்களிலும் கடைத்தெருக்களிலும்
கவனிப்பார் அற்ற சதுப்புகளிலும் சமுத்திரங்களிலும்
வயல்களிலும் வனப்பு மிகு நதிகளிலும்
ஒடுக்கு முறைக்கு எதிராக உயிர் கொடுக்கும்
அனைத்து மாவீரர்களும்
எனது அன்பு புதல்வர்களே, புதல்விகளே”

எனக் கூறுவதன் மூலம் கொல்லப்பட்ட தன் மகனை ஒரு வெறும் சவப் பெட்டிக்குள் அவர் அடக்க வில்லை.

'நாம் கல்லாகிப் போனவர்கள்
கல்லாகப் போனதெங்கள்
கண்களும் உதடுகளும்
அச்சமும் பயமும் அற்றே போயின
மிஞ்சியிருப்பது வெந்தணல் மாத்திரம்
வெளிவரக் கனன்றுகொண்டிருக்கும்
தீப்பிழம்பு. (என்ற அதிர்வை ஏற்படுத்தி, )

அந்தப் பாறைகளின் மீதான
எங்கள் பசும் சோலைகளும் உருவாகும்

அதுவரையில்
கடல்கள் பிளக்கும்
நிலங்கள் வெடிக்கும்
வானம் கிழியும்
நட்சத்திரங்கள் உடையும்
இவற்றிடையே
நிமிர்ந்து நிற்போம், கல்லாக.'

என்று உறுதியுடன் கூறுகிறார்

இருப்பின் வன்மம் என்ற கவிதையில் இவ்வாறு கூறுகிறார்

' நான் மறைந்து விடுவேன்
நான் இருந்தேன் என்பதற்கு
எந்தத் தடயமும் இருக்காது
ஆனால்,
எனது இருப்பு
காற்றுக்குள் ஊதியிருக்கும்
அதை நீங்கள் காண மாட்டீர்கள்
எனது இருப்பின் வன்மம்
அவலங்களின் சின்னமாக இருக்கும்
அதை நீங்கள் அறிய மாட்டீர்கள்

தொலைக்காட்சியில்
வானொலியில்
புகைப்படத்தில்
அல்லது ஒரு பாராட்டுக்கூட்டத்தில்
என்னை மலினப்படுத்தமுடியாது.
ஒன்றுமிலாமைக்குள்
எனது ஒரு கண்
என்றுமம்ம்ம்........ சிவப்பாய்இருக்கும் ' என்று கூறுகிறார்

ஒரு கலைப்படைப்பு அது கவிதையாயினும் சிறுகதையாயினும் அல்லது நாவல் ஆயினும் அது அதற்கேயான பரிமாணங்களுடனும்  வடிவங்களுடனும் வெளிப்படுத்தப்படுபவையாகும். இந்தப் பரிமாணங்களும் வடிவங்களும் படைப்பாளியின் சிந்தனை ஓட்டங்களுக்கு ஏற்ப உருவாகின்றன என்பது ஒரு பொதுவான உண்மையாகும் அத்துடன் அவை சொந்த அனுபவமாக இருக்கும் பொழுது மிகவும் உயிரோட்டமானதாகவும் அமைiயும். புதுக்கவிதை என்ற பெயரில் வெறும் வாக்கியங்களை அடுக்கி சிதைத்து இன்னமும் பலர் கவிதை என்று எதையெதையோ எழுதுகிறார்கள். கவிதை என்பது சசி கூறுவது போல அது ஒரு சிந்தனைச் சிதறல் அல்லது ஒரு கண மின்னல் கீற்று என்றும் கொள்ளலாம். ஒரு கவிதையில் அவர் கூறும் பொழுது,
நண்ப, கற்றூண் போல உன் கவிதைகளை அடுக்காதே /தென்றலாய் வீசு / திரைச் சீலையாய் அசை / இளங்கொடியாயின்  ஒல்லியாய் ஆடு / சல்லி வேர் அளவே சதை பிடிக்கட்டும் /வற்று மணற்படுக்கையில் நெழிந்து நீளுமே ஒற்றைக் கீற்று நீரிழை / அதுபோல் பட்டும் படாமலும் படரட்டும் உன் வரிகள் என்று கூறுகிறார். ஆம்  கவிதை  என்பது வெறுமனே வரிகளை அடுக்குவதல்ல. அது தென்றலாக வீச வேண்டும் திரைச்சீலையாய் அசைய வேண்டும்
ஆம் திரு  சிவலிங்கத்தின் கவிதைகளில் தென்றல் வீசுகிறது திரைச்சீலை அசைகிறது. அங்கே கட்புலன் மூலம் மெல்லிய ஓசையையும் கேட்கமுடிகிறது.

உணர்வுகளை அனுபவங்களை கலையுணர்வோடு வெளிப்படுத்தும் பொழுது அவற்றை கவிதைகள் என்றும் சிறுகதைகள் என்றும் நாவல் என்றும் நாம் வகைப்படுத்திப் பழகிவிட்டோம். இந்த வகைப்படுத்தலையும் மீறிய ஒரு புதிய வடிவத்தை திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்களின் 'காலடி' அறிமுகம் செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. காலடி என்ற அவரது படைப்பு கவிதைக்கு கவிதையாகவும் சிறுகதைக்கு சிறுகதையாகவும் நாவலுக்கு நாவலாகவும் உள்ளது என நான் நினைக்கிறேன்.

கவிதை உள்ளடங்கலான ஒரு கலைப்படைப்பானது இரண்டு வகைக்குள் அடக்கமுடியும். என நான் நினைக்கிறேன்  ஒன்று, வாழ்க்கை சார்ந்த அனுபவங்களை கனவுத்தளத்தில் காட்சிப்படுத்தல் அவ்வாறு காட்சிப்படுத்தும் பொழுது, புராண இதிகாச தொன்மக் குறியீடுகளால் அதனை அதிரச் செய்தல் மாயா யதார்த்தவாதப் படைப்புகளாகவும் (Magical Realism) இவை அமையலாம். இரண்டாவது, தன்னிலை சார்ந்த காட்சிப்படுத்தலைக் குறிப்பிடலாம் (Personal  )
இவரது பெரும்பாலான கவிதைகள் கனவுத்தளத்திலிருந்து எழுதப்பட்டவை என்பது எனது கருத்தாகும்.' கடலும் பிணமும்' , 'உள் - வெளி' 'பாம்புச்சட்டை' நீக்கல்கள்' 'பறக்கும் கட்டில்' , 'படுக்கை' 'வீழ்ந்து கொண்டே' போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம்

தன்னிலை சார்ந்த இவரது கவிதைகளில்  ஒன்றில் ஒருவன் வாழ்வின் அந்திமக்காலத்தில் படும் அவஸ்தைகள் பற்றி 'சடுகுடு ஆட்டம்' என்ற கவிதையில் வெளிப்படுத்தப்படுகிறது.

மாலை ஏழு இருந்து எட்டுவரையும்
அவள்
தொலைக்காட்சியில தனிமை தொலைப்பாள்
அவன்,
படிப்பகத்தில் பாரம் குறைப்பான்
அவள்
எட்டு இருந்து எட்டரைவரையும்
சமையல் கட்டில் சடுகுடு செய்வாள்
அவன்
தொலைக்காட்சியில் தொங்கிக் கொள்வான்.
ஏட்டரை இருந்து ஒன்பது வரையும்
அவள் மீண்டும்
தொலைக்காட்சியில் துணை தேடுகையில்
அவன் இரவு உணவு முடிந்து
வாசல் மணலில் மனதைப் புதைப்பான.;
ஒன்பது மணிக்கு அவள்
தனத அறையி;ல்
விளக்கணைத்து துயிலும் வேளையில்
அவன் படிப்பகத்தில் அமர்ந்து
பன்னிரண்டு வரையும் தீக்கோழியாகி
பின் துயிலும் அறையில்
விளக்கணைத்து கனவுகளில் மேய்வான்

இடைக்கிடை
விடியும் வரை
இரண்டு அறைகளிலும் கேட்கும்
பெருமூச்சுகள் .........    என்று கூறுகிறார்.

காதல் வயப்படுவது மனிதனுக்குரிய ஒரு முக்கிய சுபாவம் இந்த வகையில் கவிஞரின் சில காதல் கவிதைகளும் இத்தொகுதியில் காணப்படுகின்றன. ஆனால் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான் பாலியல் உந்துதலை அடிப்படையாகக் கொள்ளாத காதலும் உண்டு இதனை 'Pடயவழniஉ டுழஎந 'என்று கூறுவார்கள். 'துருவப் பறவைகள்' என்ற படைப்பில் வரும் பாத்திரங்கள் மற்றும் 'துஷானா' என்ற கவிதையும் 'Pடயவழniஉ டுழஎந ' பற்றிப் பேசுவதாக எனக்குத் தென்படுகிறது. ஒரு ஆசிரியருக்கும் மாணவிக்கும் ஏற்படும் ஒரு அற்புதப் பாசப்பிணைப்பும் இந்த வகையில் அடங்கும்
' துருவப் பறவைகள் தொடர்ந்து இருப்பதில்லையே, பருவ காலத்துப் பறவைகள் பறந்துவிடுமல்லவா, துயரக்காலம் மீண்டும் சூழ்ந்தது, விலகிச் செல்லும் மையங்கள் ,மேலும் நகர்ந்தன'  எனக்கூறிவிட்டு ஆங்கிலத்தில் இவ்வாறு கூறுகிறார்

My heart is a nest
Where the arctic bird dwells.
Her innocence
Her joy
Her illuminating ivory face
Fringed by a veil, a scarf, a fardha

The immaculate  arctic snow

'அவன் குரு, இவள் சிஸ்யை என
யுகாந்திரங்களின் கால முகட்டில்
ஏறி உலவிய நம் இனிய பொழுதுகள் மறைந்தனவே
என என் ஞான புத்திரி துஷானாவின் ஞாபகத்தில் எழுதிய நாட்களும்
மெல்ல நகர்ந்து போயின. என்று கூறுகிறார்
மேலும், ' உறவும் நினைவும் ஒரு பாலைவனத்தின் குரலும்' என்ற கவிதையில் காணப்படும் வரிகள் ஒரு மகத்தான நட்பு பற்றிப் பேசுகின்றன.
'உன்னைப் பற்றியே  உன்னைப் பற்றியே
இன்னமும் இந்தப் பாலை வனத்தின் குரல் ' எனத் தொங்கும் இக்கவிதை, ' எனனைச் சகித்து, என் ஊஞ்சல் கயிறுகள் தொய்யவும், உயரத்துக்கு உந்தி, உலகப் பரப்பின் ஒவ்வொரு கணமும் காட்டி , வொல்கா இருந்து கங்கைவரை சென்று கங்கையிலிருந்து  நாசாவரை கடந்து என்னை ஆகர்சித்த அதிமானிடன் என்கிறார் அந்த நணபர் நீர் வளையங்களில் அவர் விளிப்பதும் இவரைத்தான் இரு தும்பியாய் வரும் அந்த இரண்டாவது தும்பி. அவர்தான் திரு. நுஃமான் என்று நினைக்கிறேன்.

'என் ஆசானும் அன்பனும் என்னில் அளவற்ற நேசத்தைப் பொழிந்த நிமலனும் ஆன என் தாடிவாலா, என்னை உருவாக்கியவன் அன்பின் உயிர் மூச்சைத்தந்தவன் என்று எழுதும் வரிகளும் அந்த 'Pடயவழniஉ டுழஎந 'ஐ வெளிப்படுத்துவதாக அமைகிறது எனலாம்.

சுருங்கச் சொன்னால் திரு சண்முகம் சிவலிங்கம் அவர்கள் சமமானவர்களில் முதன்மையானவராக விளங்குகிறார். ர்ந ளை வாந  கசைளவ யஅழபெ வாந நஙரயட.  இவரது இந்தக்கவிதை நூல் அவரது வாழ்க்கைக் காலத்துள் நிகழ்ந்த அரசியல் சமுகம் சார்ந்த பல்வேறுபட்ட அனுபவங்களை கலாரூபமாக காட்சிப்படுத்தும் பதிவுகளின் தொகுப்பாக பரிமணித்துள்ளது என்றால் அது மிகையாகாது.