கனி மொழி - கவிதைச் சம்பவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனி மொழி - கவிதைச் சம்பவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 29, 2012

கனி மொழி - கவிதைச் சம்பவம்


கனி மொழி

ஒரு சிறு மணற்பரப்பில் அமர்ந்திருந்தேன்
எங்கெங்கோ உலவிக் கொண்டிருந்த சிந்தனை
இறுதியில் கீழிருந்த ஒரு குறுஞ்செடியிடம் வந்திறங்கிறது
இப்போது
அச்செடியினும் சின்னவளாகி
அதை பெருமரமாய் சுற்றி வருகிறேன்
ஏறவும் முயற்சி செய்கிறேன்
அருகிருந்த சிறு கல்லை பெரும்பாறையாக்கி,
சாய்ந்து இளைப்பாறினேன்.
திடும்மென ஒரு அழைப்பில்,
உதறி விட்டு எழுகிறேன்
அதே வேகத்தில் கல்லும் குறுஞ்செடியும்
என் உயரம் வரை வளர முயன்று சரிந்து விழுகின்றன.