வெள்ளி, பிப்ரவரி 26, 2016

ஆசிரியனின் மரணம்

எழுத்தாளனின் மரணம் - ரோலண்ட் பார்த்
நிஜந்தன்
ஆசிரியனின் மரணம் 

பால்சாக் தன் கதையில் பெண்போல் நடிக்கும் காயடிக்கப்பட்ட ஒருவனை விவரிக்கும்போது கீழ்க்கண்டபடி எழுதுகிறார்:
'அவளுடைய திடீரென்ற பயங்கள்அவளுடைய தர்க்கமற்ற முரண்கள்அவளுடைய உள்ளுணர்வு தரும் வேதனைகள்அவளுடைய உள்ளார்ந்த துணிவுஅவளுடைய அலட்டல்கள்அவளுடைய இனிமையான நுண்ணுணர்வுகள்இவற்றுடன் அவள் ஒரு பெண்ணாகவே இருந்தாள்.'

இவ்வாறு பேசுவது யார்?
காயடிக்கப்பட்ட ஒருவன் பெண் தோற்றத்தின் பின்னால் மறைந்திருப்பதை அறியாத கதையின் நாயகனாபெண் என்ற தத்துவத்துடனான தனிப்பட்ட அனுபவம் கொண்ட பால்சாக் என்ற தனிமனிதராபெண்மை பற்றிய இலக்கியக் கருத்து கொண்ட பால்சாக் என்ற எழுத்தாளரா?

பிரபஞ்ச அறிவாமிகைப்படுத்தப்பட்ட உளவியலா?
நமக்குத் தெரியாது.
ஏனென்றால்எழுத்து என்பதுஒவ்வொரு குரலின் அழிப்புஒவ்வொரு மூலத்தின் அழிப்பு.
எழுத்து நடுநிலையானமுழுமையானசாய்வான தளம்இங்கு நம் பொருள் கைநழுவுகிறது.
எழுத்து எதிர்மறையானதுஇதில் எழுத்து வடிவத்தின் அடையாளம் உட்பட அனைத்து அடையாளங்களும் இழந்துபோகின்றன.
அது எப்போதும் அப்படித்தான் இருக்கிறது.
உண்மையின் மீது நேரடியாக அல்லாமல் எதிர்மறையாக வினையாற்றவும்குறியீட்டின் செயல்பாடு தவிர மற்ற செயல்பாடுகளின் வெளியே வினையாற்றவும் ஒரு உண்மை விவரிக்கப்படும்போது இந்தப் பிளவு நேர்கிறதுஅப்போது ஒரு குரல் அதன் மூலத்தை இழக்கிறதுஒரு எழுத்தாளன் தன் சொந்த மரணத்தை எதிர்கொள்கிறான்அப்போது எழுத்து துவங்குகிறது.
இது போன்ற இயக்கங்களின் உணர்வு பல நிலைகளில் வேறுபடுகிறது.பண்டைய சமூகங்களில் ஒரு விவரணைக்கான பொறுப்பு ஒரு தனிமனிதரிடம் இருப்பதில்லைஒரு இடைநிலையாளரிடம் அல்லது ஒரு தொடர்பாளரிடம் அல்லது அவருடைய விவரணைக் குறியீட்டிடம் அது இருந்துவிடுகிறதுஅந்த விவரணைக் குறியீடுதான் பாராட்டப்படுகிறது.அதற்கு உரியவரின் அறிவுத்திறன் பாராட்டப்படுவதில்லை.
ஒரு எழுத்தாளன் நவீன காலத்தின் உருவாக்கம்ஆங்கிலமயமான அறிவுத்தோற்றவியல்பிரெஞ்சு காரணியவாதம்மறுசீரமைப்பின் தனிப்பட்ட நம்பிக்கை கொண்ட இடைக்காலத்தில் உருவானது அது.

'மனிதாபிமான மனிதனின்மதிப்பை அது கண்டடைந்தது.

முதலாளித்துவ உச்சமான இந்த நம்பிக்கைவாதம்தான் இலக்கியத்தில் எழுத்தாளனுக்குள் இருக்கும் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
இலக்கிய வரலாறுகளிலும்எழுத்தாளர்களின் வாழ்க்கைக் குறிப்புகளிலும்,பேட்டிகளிலும் எழுத்தாளன் ஆட்சி செலுத்துகிறான்தங்கள் நாட்குறிப்பேட்டிலும் நினைவுக் குறிப்புகளிலும் தங்கள் ஆளுமையையும் தங்கள் பணியையும் இணைக்கும் படித்தவர்களின் பிரக்ஞை போல் இது இருந்துவிடுகிறது.

சாதாரண பண்பாடுகளில் ஒரு இலக்கியத்தின் பிம்பம்ஒரு எழுத்தாளனையும் அவனுடைய ஆளுமைவாழ்க்கைரசனைகள்,விருப்பங்கள் ஆகியவற்றையும் சுற்றியே இருக்கிறது.
ஆனால் விமர்சனம் என்பதுபுதலேரின் எழுத்து புதலேர் என்ற மனிதனின் தோல்விவான்கோவின் படைப்பு வான்கோவின் மனச்சிதைவின் தோல்வி,சைகாவ்ஸ்கியின் படைப்பு அவருடைய தவறின் தோல்வி என்று சொல்லும் வகையில் உள்ளது.
ஒரு படைப்பை உருவாக்கிய மனிதரிடமிருந்து எப்போதும் விளக்கம் கோரப்படுகிறதுஒரு தனிமனிதனாகிய ஒரு எழுத்தாளனின் குரல் நம்மிடம்ஒரு படைப்பின் உருவகம் மூலம் ஏதோ உரைப்பதாகக் கருதப்படுகிறது.
ஒரு எழுத்தாளனின் முறுக்குசக்தி வாய்ந்ததாக இருக்கிறதுநவீன விமர்சனம் அதற்கு மேலும் சக்தி கொடுத்திருக்கிறதுசில எழுத்தாளர்கள் இந்த முறுக்கைக் கொஞ்சம் தளர்த்த முயன்றிருக்கிறார்கள்.
பிரான்சில்எழுத்தாளர் மல்லார்மேதான்எழுத்தின் உரிமையாளராக இருந்த எழுத்தாளனுக்குப் பதிலாக மொழியை முன்னிறுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்.
மொழிதான் பேசுகிறதுஎழுத்தாளர் அல்லமல்லார்மே இதை உணர்ந்தார்.நாமும் உணர்கிறோம்எழுதுவது என்பது, 'நான்செயல்படாமல்மொழி செயல்படும்இயங்கும் நிலையை அடைவதாகும்.
யதார்த்த நாவலாசிரியர்களின் காயடிக்கப்பட்ட புறவயத்துடன் இதைக் குழப்பிக்கொள்ளக் கூடாது.
எழுத்தின் நலன் கருதி எழுத்தாளனை அழுத்துவதாகத்தான் மல்லார்மேயின் கவித்துவம் இருந்திருக்கிறதுவாசகனின் இடத்தை மறுநிர்மாணிப்பதே இதன் நோக்கமாக இருந்திருக்கிறது.
உளவியலின் ஈகோ என்ற கருத்தால் பாதிக்கப்பட்ட வாலரிமல்லாமேயின் கருத்துக்களைக் கணிசமாக நீர்த்துப்போக வைத்துவிட்டார்ஆனால் செவ்வியல் மீதான அவருடைய ஆர்வம்ஒரே விஷயம் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதின் மீது கவனம் கொள்ள வைத்தது.எழுத்தாளன் என்ற நிலையை அவர் கேள்விக்குட்படுத்திஅந்த நிலையைத் தடுமாற வைத்தார்.
தன்னுடைய மொழியியல் மற்றும் ஆபத்தான இயக்கம் பற்றி அவர் அழுத்தம் கொடுத்தார்அவருடைய உரைநடைகளில் அவர் இலக்கியத்தின் மொழி சார்ந்த போக்கிற்கு சார்பாகப் போராடினார்எழுத்தாளனின் உள்ளீடு சார்ந்த போக்குகள் அனைத்தும் அவருக்கு மூட நம்பிக்கைகளாகத் தெரிந்தன.
எழுத்தாளனுக்கும் அவனுடைய பாத்திரங்களுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தி அயராமல் மங்கவைக்கும் போக்கு குறித்து,உளவியல் அலசல் கட்டுரைகளாகக் கருதப்படும் பிரதிகளில்ப்ரூஸ்ட்கவலை தெரிவிக்கிறார்.
கண்டவற்றைஉணர்ந்தவற்றை எழுதும் எழுத்தாளனை அல்லாமல்,எதையும் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளனை அல்லாமல்எழுதப் போகும் எழுத்தாளனை வடித்ததன் மூலம் ப்ரூஸ்ட் புது முயற்சி மேற்கொண்டார் (நாவலில் வரும் இளைஞன்  ஆனால் உண்மையில்,அவனுக்கு என்ன வயதுஅவன் யார்? - எழுத நினைப்பதுஆனால் முடியவில்லைஎழுத்து சாத்தியம் ஆகும்போது நாவல் முடிந்துவிடுகிறது).
நவீன எழுத்திற்கு இதிகாசத்தன்மையை ப்ரூஸ்ட் அளித்தார்வழக்கமாக இருந்தது போல்தன்னுடைய வாழ்வை நாவலில் அவர் இடவில்லை.மாறாகதன் வாழ்வால் ஒரு படைப்பை அவர் உருவாக்கினார்அதற்கு அவருடைய நூலே மாதிரியாக இருக்கிறது.
நவீனத்திற்கு முந்தைய வரலாறான சர்ரியலிசம்மொழிக்கு மிக உயர்ந்த இடத்தை வழங்காவிட்டாலும்எழுத்தாளனின் பிம்பத்தை புனிதமற்றதாக்கப் பயன்பட்டது.
மொழி ஒரு அமைப்பு என்ற நிலையில் சர்ரியலிச இயக்கத்தின் இலக்கு அதன் குறியீடுகளைத் தகர்ப்பதாகும்இது மிகையான உணர்வு ஆகும்.இது மாயை ஆகும்ஒரு குறியீடு தகர்க்கப்பட முடியாததுஅதை வைத்து'விளையாட்டு'தான் காட்ட முடியும்.
ஒரு அர்த்தத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றம் தரக்கூடியது என்று சொல்லி சர்ரியலிசம் அதிர்வு கொடுத்தது.
தலைக்குத் தெரியாமல் எழுதும் வேலையை சர்ரியலிசம் கைக்குக் கொடுத்ததுதானாக எழுதுவது என்ற போக்கை இது கொடுத்ததுபலர் ஒன்றாக எழுதுவது என்ற அனுபவத்தையும் கொள்கையையும் இது ஏற்றுக்கொள்ள வைத்தது.
இலக்கியம் என்ற கூறை இங்கு விட்டுவிடலாம்இது போன்ற வேறுபாடுகள் மதிப்பில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.
மொழியியல் எழுத்தாளனை சமீபத்தில் தகர்த்துவிட்டதுஉயர்வான அலசல் வரைமுறைகளை அது முன் வைத்தது.
மொழிதல் என்பது உள்ளீடற்ற செயல்பாடு என்று மொழியியல் கூறுகிறது.மொழிபவர்களின் ஆளுமையை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அது காட்டுகிறது.
மொழியியல் பார்வையில்ஒரு எழுத்தாளன் எழுத்தைவிட மேலானவன் இல்லைநான் என்பது நான் என்று சொல்லும் கணத்தைவிட வேறானது இல்லை.
மொழி ஒரு மனிதனை அறியவில்லைஅது கருவை அறிகிறதுஇந்தக் கருஅதை வரையறுக்கும் மொழிதலின் வெளியே காலியாக இருக்கிறது.மொழியை அது ஒன்றாக வைக்கிறதுஅதை முழுக்கத் தீர்க்கவும் செய்கிறது.
எழுத்தாளனை நீக்குவது என்பது இலக்கிய மேடையில் ஒரு எழுத்தாளன் ஒரு சிலையாகக் குறைந்துபோவதைப் பற்றியும்ப்ரெக்டின் எழுத்தாள விலக்கலைப் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும்ஒரு வரலாற்று உண்மை அல்லது எழுதும் ஒரு இயக்கம்அது மட்டும் அல்ல.அது ஒரு நவீனப் பிரதியை உருமாற்றுகிறது.
அனைத்து மட்டங்களிலும் எழுத்தாளன் இல்லாமல் போகும்படி இனி பிரதிகள் உருவாக்கப்படும்எழுதப்படும்.
காலம் என்பது வேறானதுஒரு எழுத்தாளன் இருக்கிறான் என்று நம்பும்போது அவன் அவனுடைய நூலின் கடந்த காலம் போல் கருதப்படுகிறான்நூலும் எழுத்தாளனும்முன்பு பின்பு என்ற ஒரு பிரிக்கப்படும் ஒற்றைக்கோட்டால் பிரிக்கப்படுகிறார்கள்.
ஒரு எழுத்தாளன் ஒரு நூலுக்கு உணவு தருகிறான் என்று நம்பப்படுகிறது.அப்போதுஅவன் நூலுக்கு முன்பே இருக்கிறான்சிந்திக்கிறான்,அல்லலுறுகிறான்அதற்காக வாழ்கிறான்ஒரு குழந்தைக்குத் தந்தை இருப்பது போல்ஒரு நூலுக்கு முன்பான நிலையை அவன் கொண்டிருக்கிறான் என்று ஆகிப் போகிறது.
ஒரு நவீனப் பிரதியாளன் பிரதியுடன் பிறக்கிறான்எழுத்துக்கு முன்போ பின்போ அவன் இருப்பதில்லைஅவன் நூலின் படர்க்கை போல் தன்மையாகவும் இல்லாமல் இருக்கிறான்.
மொழிகின்ற 'நேரம்தவிர வேறு எந்த 'நேரமும்பிரதியில் இருப்பதில்லை.ஒவ்வொரு பிரதியும் அந்தக் கணத்தில்அப்போதே எழுதப்படுகிறது.
கட்டமைப்பதைபிரதிநிதித்துவப்படுத்துவதை, (செவ்வியல்வாதிகள் கூறுவதுபோல்பதிவு செய்வதைஎழுத்து என்பது பொறுப்பாக்குவதில்லை என்பது உண்மை (அல்லது அப்படி கடைப்பிடிக்கப்படுகிறது).
ஆக்ஸ்போர்ட் தத்துவத்தின்படி மொழியியல்வாதிகள் கூறுவது போல் எழுத்து என்பது ஒரு அரிதான நிகழ்நிலை செயல்பாட்டைச் செய்கிறதுஇது தன்னிலையிலோ,நிகழ்காலத்திலோ செயலாகிறது.
இதில்மொழியப்படுதலைத் தவிர மொழிதலுக்கு வேறு ஒரு உட்பொருளோ இலக்கோ இல்லை.நான் என்பது அரசர்களைப் பற்றி அறிவிப்பது போலவோநான் என்பது பழங்கால கவிஞர்களைப் பாடுவது போலவோ இது இருக்கிறது.
எழுத்தாளனைப் புதைத்த பின்னால்பரிதாபத்திற்குரிய தன் முன்னோர் நினைத்தபடி ஒரு நவீன பிரதியாளன்தன் கைதன் எண்ணத்திற்கும் விருப்பத்திற்கும் இணையான வேகம் கொண்டது இல்லை என்பதை நம்ப இயல்வதில்லை.
இந்தத் தாமதத்தை ஒரு தேவைப்படி கவனத்தில் கொண்டுஎப்போதும் தன் திறனை மெருகூட்ட வேண்டும் அவன்.
அதற்கு மாறாக அவனுக்குப் பாவனையின்றிவடித்தல் மட்டுமே முக்கியமாக இருக்ககுரலிலிருந்து துண்டிக்கப்பட்ட கை ஆதி இல்லாத ஒரு பரப்பைத் தேடுகிறது.
கடவுளின்எழுத்தாளனின் செய்தி என்பது போல்ஒரு குறிப்பிட்ட ஆன்மீகச் செய்தியை மட்டுமே ஒரு பிரதி கொடுப்பதில்லை என்பதை நாம் அறிவோம்ஆனால்பன்முகத் தன்மை கொண்ட பிரதியில்அசல் இல்லாதபல வகையான எழுத்துக்கள் பிணைகின்றனமோதுகின்றன.
பிரதி என்பதுபண்பாட்டின் எண்ணிலடங்கா மையங்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்களின் திசு ஆகும்.
கஸ்தவ் ஃப்ளாபாரின் நாவல் பாத்திரங்களான போவாவும் பெசுசேவும் அறிவார்ந்தவையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கின்றனஎழுத்தின் உண்மையை அவை வெளிப்படுத்துகின்றன.
ஒரு எழுத்தாளன் அசலாக இருக்க முடியாதுமுன்பே நிகழ்ந்தஅசலாக இல்லாத ஒரு பாவனையை அவன் போலியாக்கத்தான் முடியும்.
எழுத்துக்களைக் கலப்பதும்அவற்றில் எதனுடனும் சார்பு கொள்ளாத வகையில்அவற்றை ஒன்றோடொன்று மோத விடுவதும்ஒரு எழுத்தாளனின் ஒரே அதிகாரம் ஆகும்.
ஒரு எழுத்தாளன் தன்னை வெளிப்படுத்த நினைக்கும்போதுஅவன் மொழிமாற்ற நினைக்கும் உள் அம்சம் என்பது தயார் நிலையில் இருக்கும் ஒரு அகராதி என்பதையும்முடிவில்லாதபடி அதன் சொற்கள் வேறு சொற்களால் விவரிக்கப்பட வேண்டியவை என்பதையும் அவன் உணர வேண்டும்.
கிரேக்க மொழியில் வல்லவரான இளம் தாமஸ் டி க்வென்சிஇறந்துபோன அந்த மொழியில் அதி நவீன எண்ணங்களையும் பிம்பங்களையும் மொழியாக்க முயன்றபோது, (பாரடைஸ் ஆர்டிஃபிஷியல்ஸில்புதலேர் கூறுவது போல், 'முழுக்க முழுக்க இலக்கியக் கருக்களின் சாதாரண பொறுமைகளில் வெளிப்படுவதைவிட விரிவானசிக்கலான ஒரு அகராதியை அவருக்காக அவர் கண்டடைந்தார்.'
எழுத்தாளனை வென்ற பிறகுஒரு பிரதியாளனிடம் உணர்வுகளோ,பாதிப்புகளோ இருப்பதில்லைமாறாக அவனிடம்எல்லையில்லாத எழுத்து உருவாகும் இந்த அகராதிதான் இருந்துவிடுகிறதுவாழ்க்கை,நூலைப் போலி செய்வதைவிட எதுவும் செய்வதில்லைஅந்த நூல் எல்லையற்று ஒத்திப்போடப்பட்ட குறியீடுகளின் திசு ஆகும்.
ஒரு எழுத்தாளன் நீக்கப்பட்ட பிறகுஒரு பிரதியின் பொருள் அறியும் முயற்சி தோற்கிறதுஒரு எழுத்தாளனுக்கு ஒரு பிரதியைக் கொடுப்பது என்பதுஅந்தப் பிரதியை எல்லைக்குட்படுத்துவதுஅதற்கு ஒரு குறிப்பீடைக் கொடுப்பதுஅதன் மூலம் எழுத்தை முடித்துவிடுவது ஆகும்.
இது போன்ற எண்ணப்போக்கு விமர்சனத்திற்குப் பொருந்தும்இது எழுத்தின் பின்னால் இருக்கும் ஒரு எழுத்தாளனை (அல்லது அதன் அடிப்படையான சமூகம்வரலாறுஉளவியல்விடுதலை போன்றவற்றை)கண்டுபிடிக்கும் முக்கிய முயற்சியை மேற்கொள்கிறதுஒரு எழுத்தாளன் கண்டுபிடிக்கப்படும்போதுபிரதி 'விளக்கப்படுகிறது' - இது விமர்சகனுக்குக் கிடைக்கும் வெற்றி ஆகும்.
வரலாற்றுப்பூர்வமாகஒரு எழுத்தாளனின் ஆளுகைஒரு விமர்சகனின் ஆளுகையாகவும் இருந்திருக்கிறதுஇப்போது எழுத்தாளனுடன் விமர்சகனும் பிரித்தறியப்படுகிறான்.
எழுத்தின் பன்முகத்தன்மையில்ஒவ்வொன்றும் பிரிக்கப்பட வேண்டும்.அறியப்பட வேண்டியதில்லைஒரு அமைப்பு பின்தொடரப்படலாம்ஒரு காலுறையின் நூல் போல் ஒவ்வொரு புள்ளியிலும் ஒவ்வொரு நிலையிலும் நகர்த்தப்படலாம்ஆனால் எழுத்தின் கீழே எதுவும் இல்லை.எழுத்தின் பரப்பு வீச்சுக்குட்பட்டதுஅது துளைக்கப்பட வேண்டியது இல்லைபொருளைத் திட்டமிட்டு விலக்கும் அதே நேரம்எழுத்து,பொருளைத் திணித்துபொருளை ஆவியாக்குகிறது.
இந்த வகையில் இலக்கியம் இனி இதனைஎழுத்து என்று சொல்லலாம்),ஒரு பிரதிக்கு (உலகுக்கு ஒரு பிரதியாக)ஒரு பொருளைஒரு ரகசியத்தைக் கொடுக்க மறுப்பதன் மூலம் எதிர்-தெய்வீக நடவடிக்கையைக் கட்டவிழ்க்கிறதுஇந்த நடவடிக்கை புரட்சிகரமானதுஏனெனில்பொருள் கொடுப்பதை மறுப்பதுகடவுளையும்அதன் கருதுகோள்களான காரணம்,அறிவியல், சட்டம் ஆகியவற்றையும் மறுப்பது ஆகும்.
பால்சாக் கூறியதைத் திரும்ப நினைவுகூருவோம்யாரும்எந்த மனிதரும் இப்படிச் சொல்வதில்லைஎழுத்தின் உண்மையான இடம் அதன் குரல்,அதன் ஆதி என்பன அல்லஎழுத்தின் உண்மையான இடம் வாசித்தல் ஆகும்.
இதற்கு ஒரு உதாரணம் தரலாம்ஜே.பிவெர்னன்டின் ஆய்வுகிரேக்க துன்பியல் படைப்புகளின் தெளிவற்ற நிலை பற்றிக் கூறுகிறதுஅந்தப் படைப்பின் பிரதி இரட்டைப் பொருள்களால் பிணைக்கப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு பாத்திரமும் பொருளைத் தானாகப் புரிந்துகொள்கிறதுஇந்தத் தவறான புரிந்துகொள்ளல் துன்பியலானது.
ஆனால் ஒவ்வொரு சொல்லின் இரட்டைத்தன்மையையும் புரிந்துகொள்பவர் ஒருவர் இருக்கிறார்அவருக்கு முன்னால் பேசும் பாத்திரங்களின் கேளாத்தன்மைக்கு அவர் செவிமடுக்கிறார்அவர்தான் வாசகர் அல்லது கேட்பவர்.
இப்படித்தான் எழுத்தின் முழு இருப்பு காட்டப்படுகிறதுஒரு பிரதி பல பண்பாடுகளின் மூலம் பெறப்பட்ட பன்முக எழுத்துக்களால் ஆனது.வசனம்பகடிபோட்டி என்று பரஸ்பர உறவுகளில் நுழைவது.
ஒரு இடத்தை இந்தப் பன்முகத்தன்மை நோக்குகிறதுஅந்த இடம் எழுத்தாளன் அல்லஅந்த இடம் வாசகன் ஆகும்.
எந்த இழப்பும் இல்லாமல் ஒரு எழுத்தை உருவாக்கும் அனைத்து வடிவங்களும் வடிக்கப்படும் இடம் வாசகன்தான்ஒரு பிரதியின் ஒருமை அதன் ஆதியில் அல்லாமல் அதன் இலக்கிலேயே இருக்கிறது.
இந்த இலக்கு இனி தனிப்பட்டதாக இருக்க முடியாதுவாசகனுக்கு வரலாறு இல்லைவாழ்க்கைக்குறிப்பு இல்லைஉளவியல் இல்லை.எழுத்துப் பிரதியை உருவாக்கும் அனைத்து சிதிலங்களையும் ஒரு பரப்பில் ஒன்றிணைக்கும் ஒருவர்தான் வாசகர்.
வாசகருக்கான உரிமைக்குப் போராடும் இரட்டை வேடம் கொண்ட மனிதாபிமான போராளி என்று நவீன எழுத்தைக் கண்டிப்பது சிரிக்கத்தக்கதாகும்.
செவ்வியல் விமர்சனங்கள் வாசகனைக் கவனத்தில் கொள்ளவில்லை.அவற்றிற்கு இலக்கியத்தில் எழுத்தாளன்தான் ஒரே மனிதன்.
தான் புறந்தள்ளும்ஒதுக்கும்அழிக்கும்ஒரு பொருளுக்குச் சார்பான ஒரு நற்சமூகத்தின் சொல்சார்ந்த எதிர்ப்புகளால் நாம் இனி முட்டாளக்கப்பட முடியாது என்ற நிலையை அடைந்துகொண்டிருக்கிறோம்.
எழுத்திற்கு எதிர்காலம் கொடுக்க வேண்டுமானால் புராணிகத்தைத் தூக்கி எறிய வேண்டும்.
எழுத்தாளனின் மரணத்தில்தான் வாசகனின் பிறப்பு சாத்தியப்படும்.

******

ரோலாண்ட் பார்த் எழுதிய இந்தக் கட்டுரை, 'இமேஜ்ம்யுசிக்டெக்ஸ்ட்' (1977)என்ற நூலில் இடம்பெற்றுள்ளதுஇந்தக் கட்டுரையை ப்ரெஞ்சிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தவர் ரிச்சர்ட் ஹோவர்ட்.

மொழிபெயர்பு - நிஜந்தன் தோழர். அவரின் அனுமதியின்றியே இங்கு பதிவிடப்படுகிறது. ஈழத்து தோழர்கள் சிலரின் வேண்டுகோளிற்கிணங்க. மிக்க அன்பு.