எதுவுமல்ல எதுவும்
கவிதைத் தொகுதி
(2006-2008 காலப்பகுதிக்குள் எழுதப்பட்டவை.)
கருணாகரன்
மகிழ் வெளியீடு 2010 டிசெம்பர்
விலை : 200 ரூபா
"திறக்க முடியாத பூட்டாகத்
தொடரும் மௌனத்தக்கு வெளியே
நிறுத்தப்பட்டிருக்கிறேன்."
போரினால் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக அகதியாக அலைந்து கொண்டிருக்கிறார்.
ஒரு பொழுதுக்கு காத்திருத்தல்
ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்
பலியாடு
என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
''மறுபடியும் மறுபடியும் எல்லாவற்றையும் சொல்லவும் திருமபத்திரும்ப எல்லாவற்றையும் செய்யவும்
வேண்டிய மனித நிலை எல்லா அறிவியலையும் கேள்வியின் முன்னே நிறுத்துகிறது. இந்தக் கவிதைப்பிரதிகள் சாட்சி, எதிர்ப்பு , விலகல் என்ற நிலைகளில் இயங்கிய ஒரு எழுத்துச் செயலின் வாசிப்பக்களாக அமைகின்றன.
இந்தக் பிரதிகளை கவிதைகளாக மாற்ற இவர் ஈழத்தின் அரசியல் நிலைகளை மாத்திரம் உபபிரதிகளாகக் கொண்டிருக்கவில்லை. அவை கடந்த நுண்வெளிகளையும் தமது கவிதையியலின் இழைகளாகப் பின்னிச் செல்வது மிக முக்கியமாகவே எனக்குப் படுகிறது.
ஈழத்து கவிதைகளின் மீது அரசியலை ஏற்றி வாசிக்காமல் போனால் அவை கவிதைகளாகாமல் கலைந்து போய்விடக்கூடிய பலவீனமான நிலையிலேயே அதிகமும் இருக்கின்றன.
பலர் கவிஞர்களாக இன்னும் இருப்பதற்கு அந்த அரசியல் வாசிப்பே பெரிதும் உதவுகின்றது.
இவை கடந்த நிலையில் கவிதையை உருவாக்கும் விரிந்த தளங்களை நோக்கி தனது எழுத்துச் செயலை கண்டடைந்திருப்பது இவருக்கான தனித்த இடத்தை உருவாக்குகிறது எனலாம்.
புத்தகம் தேவைப்படுவோர் -+94770871681 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.