றியாஸ் குரானா
MIM. RAUF
எண்பதுகளில் ஒரு கதைசொல்லியாக தனது இலக்கியச்
செயற்பாட்டை ஆரம்பித்தவர்.தொடர்ச்சியான வாசிப்புகளும்,அதனூடான தேடல்களுமாக தமிழின் சமகால இலக்கியப்போக்குகள்வரை
அறிந்து செயற்பட்டவர். '' கனவும் மனிதன் '' என்ற இவரின் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்திருக்கிறது.
90 களின் பிற்கூற்றில் அல் புனைவுகளின் மீது தனது
கவனத்தை திருப்பிக்கொண்டார்.
ஈழத்து இலக்கியப்போக்குகளின் செல்நெறிகளோடு ஒத்துப்போக மறுத்து,
புதிய திசைகள் மற்றும் போக்குகள் பற்றி சிந்திக்கவும் எழுதவும் செய்தார்.
தமிமொழிச் சமூகங்களுக்கிடையிலான முரணும் முரணினைவும் தொடர்பில் மு.பொன்னம்பலத்தின் பிரதிகளை வாசித்துக்காட்டினார்.
எம்.ஏ.நுஃமானை முன்னிறுத்தி - தமிழ் புலமைத்துவத்திலிருந்து பிரிந்து செல்லும் முஸ்லிம் புலமைத்துவம் என்ற அரசியல் பிரதி ஆய்வை செய்துகாட்டியவர்.
அத்தோடு சுந்தர ராமசாமியின் நாவல்களை கவிதையியலாக
வாசிக்க முற்பட்டவர்.இந்த ஒவ்வொரு வாசிப்புப் புள்ளியும் தமிழ் இலக்கியப்போக்ககளை உடைத்து,மறுத்து புதிய விவாதங்களை எழுப்பக்கூடியவை. அவை தொடரப்படாமலே போய்விட்டது.
எம்.ஐ.எம்.றஊப் ஒரு மறுத்தோடிதான். வாழ்வையும் மறுத்து சுயமாகவே தனது வாழ்விற்கான முடிவைத் தேர்வுசெய்தவர்.
றஊபின் புனைவுகள் மற்றும் அல் புனைவுகள் தொகுக்கப்படவேண்டும்.
அவரின் எழுத்துக்கள் தொடர்பாக விரிவாக மிக விரைவில் எழுத
உத்தேசமுள்ளது.
எம்.ஐ.எம். றஊப் அவர்களின் '' கனவும் மனிதன்'' புத்தகத்தை இங்கு வாசிக்கலாம்
உத்தேசமுள்ளது.
எம்.ஐ.எம். றஊப் அவர்களின் '' கனவும் மனிதன்'' புத்தகத்தை இங்கு வாசிக்கலாம்