றியாஸ் குரானா
"இந்த எழுத்துக்களுக்கும் தலைப்பக்கும் தொடரபில்லை.
நன்றாக இருந்தது வைத்துவிட்டேன்.
அவரின் வலைத்தளத்தில் ஒரு பதிவை வாசித்ததும் உடனடியாக
எழுதவேண்டும் என்ற எண்ணம் தோண்றியது அதனால்
தொழிலகத்தில் வைத்தே எழுதுகிறேன்."
விமர்சனப்பார்வை,கோட்பாடு போன்றவை இடைக்கிடையே மேலெழுந்து
கவன ஈர்ப்பைச் செய்கின்ற ஒரு நிலதான் தமிழ்மொழிக்கு பழக்கமான விசயம்.
அது தொடர்சியான செயற்பாட்டையோ இயங்குதலையோ இங்கு கொண்டிருப்பதில்லை.
தமிழில் இலக்கிய வாதிகளாக நம்பிக்கொண்டிருப்பவர்களின் சோர்வும்.
திடீரென ஏற்படும் ஞானயோதயமும் இதன் பிரதான காரணங்களாக நம்ப இடமுண்டு.
ஏதாவதொன்றை காலகட்டங்களாக பிரித்துப் பேசுவது ஒரு வசதிகருதித்தான்.
அது சிலநேரங்களின் பேசனாகவும் பழக்கப்பட்டுப்போகிறது.
நமது ஜெமோ ''ஏற்புக்கோட்பாடு'' என்ற ஒன்றை பற்றி பேச முற்படுகிறார்போல் தெரிகிறது.
அதுவும் வாசகர்களை முன்னிலைப்படுத்துவதால் ''.வழமைபோல இலக்கியப் புனிதம் கெட்டுவிடும்''
என்ற அச்சத்தோடு.
விமர்சனமுறைகளுக்கு ஏற்ப பிரதிகள் உருவாக்கப்படுவதில்லை.
அதுமட்டுமல்ல, குறித்த விமர்சன முறையை வைத்துக்கொண்டு எல்லாப்பிரதிகளோடும்
போராடவேண்டுமென்ற அவசியமும் இல்லை.
குறித்த பிரதிகளை வாசிப்பதற்காகவே விமர்சன முறைகள் கண்டடையப்பட்டன
என்பதையும் அவர் புரிந்து கொள்வது நல்லது.
எல்லா விமர்சன முறைகளும் தமிழில் பாவிக்கப்பட்டிருக்கிறதா என்றால்
இல்லை என்றதான் சொல்ல முடியும்.
இலக்கியத்தை புனிதப்படுத்த உதவும் விமர்சனமுறைகள் எல்லாம்
இன்றைய நிலையில் கலகலத்துப்போய்விட்டன.ஆயினும் அதன் பயன்பாட்டையும் நான்
மறுக்கவில்லை.
என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு இலக்கிய பிரதியை சந்திப்பதற்கு ஏதுவாக
வாசிக்க முற்படும் எந்த விமர்சனமுறையும் அவசியமானதே.
இலக்கியமாக பாவிக்கப்படும் எழுத்துக்களின் செயற்பாடுகளையும்,
அவை தவிர்ந்த எழுத்துக்களையும் பிரித்துவைப்பதின் போலித்தனம் இன்று செயலற்றுப்போய்விட்டிருக்கிறது.
இலக்கியப் பிரதிகளாக நாம்பாவிக்கும் எழுத்துக்கள் என்ன செய்கின்றன என்பதை
சொல்ல முயற்சிப்பதே முக்கியமானது.
அது தமது இலக்காக எதை அறிவித்து பாசாங்கு செய்கின்றன என்பதை
பல திசகளிலிருந்து தெளிவுபடுத்துவதே விமர்சன முறையின் வேலையாக இருக்கவேண்டும்.
இலக்கியமாக பாவித்த பிரதிகளை பனிதமாக கட்டிக்கொண்டு அழுதது போதும் என்றேபடுகிறது.
சமுக ஒழுங்குகளை,பொதுப்புத்தியை கொண்டாடுவதை, முட்டாள்தனமானது எனக்கருதுவதை,
ஜனரஞ்சகம் என அடையாளப்படுத்தப்படுவதை, இலக்கியமே அல்ல எனத்தூரம் வீசி எறியப்பட்ட எழுத்துக்கள் எல்லாமே இலக்கியமாகப் பாவிக்கப்பட்டவைகள்தான். அதேநேரம் கலாச்சாரத்தை,பொது மனத்தை ,உடைப்பவைகளும்,
அதிசிறப்பு பிரதிகளாக காட்டப்படுபவைகளும் இலக்கியமாக பாவிக்கப்படும் எழுத்துக்கள்தான்.
இன்னவகையான எழுத்துக்களைத்தான் இலக்கியமாக பாவிக்கமுடியும் என்றோ பாவிக்கவேண்டும் என்றோ இன்னும் பேசிக்கொண்டிருப்பதிலுள்ள வன்முறையை நீக்கவேண்டும்.
ஏதோவொன்றை புறமொதுக்குவதற்கான காரணங்கள் தெளிந்தகோடுகளால் பிரிக்கமுடியாத
வகையில் இலக்கியமாக பாவிக்கப்படும் எழுத்துக்கள் இருக்கின்றன.
இங்கே விமர்சனமுறைகள் இலக்கியத்தை சிறுமைப்படுத்திவிடும் என்று கூச்சலிடுவது கேலிக்குரியது.
குறித்த எழுத்துக்களை இலக்கியமாக பாவிப்பதற்கு என்ன வகையான விசயங்கள் நம்மை தூண்டுகின்றன, அல்லது ஏன் இவ்வளவு இயலாமையாக குறித்த எழுத்துக்களை இலக்கியமாக
நம்பிக்கிடக்கிறோம்?