ஞாயிறு, மார்ச் 20, 2011

சசியின் நூல் வெளியீடு


கவலை தந்த ஈழத்து நவீன எழுத்தாளர்களின் இலக்கியப் பரிட்சயம்

உமா வரதராஜன்

சண்முகம் சிவலிங்கம் அவர்களின் '' சிதைந்து போன தேசமும் தூர்ந்துபோன மனக் குகையும்'' என்ற நூல் வெளியீட்டுக்கு நேற்றுப்போகக் கிடைத்தது.ஈழத்தின் நவீன எழுத்தாளர்கள் என்று பேசப்பட்ட பலரை ஒரே இடத்தில் சந்திக்கவும் முடிந்தது.எஸ்.எல்.எம்.ஹனிபாவைத் தவிர மற்றவர்களின் இலக்கிய மேடைகளை இதுவரை நான் சந்தித்திருக்கவில்லை.அதனால் ஏற்ப்பட்ட ஆர்வம் பெரிது. அவர்கள் என்ன பேசுவார்கள்?அவர்களின் இலக்கியப் பரீட்சயம் எப்படியிருக்கும்? என்ற கேள்விகளுக்கு ஒரு புதிய பதிலை இங்கு கண்டுகொள்ள முடியும் என்ற ஆர்வம் என்னிடம் மிகிந்திருந்தது.ஏனென்றால், இதுவரை இவர்களோடு இலக்கியம் தொடர்பான உரையாடலுக்கு எனக்கு வாய்ப்பிருக்கவில்லை.பல முறை இவர்களை சந்தித்து இருந்தபோதும் இலக்கியப்பேச்சுக்கள் சாத்தியமில்லாமலே அந்தச் சந்திப்புக்கள் முடிந்திருக்கின்றன.

உமா வரதராஜன்
சோலைக்கிளி
எஸ்.எல்.எம்.ஹனிபா
கல்லுரன்
மௌனகுரு

இவர்களோடு
அன்புடீன்
பாலமுனை பாறூக்
இராசரெத்தினம்
றமீஸ் அப்துல்லாஹ்

இதுபோல புதிய தலைமுறைகளான..
ஜெமீல்
நபீல்
அபார்
விஜிலி
என எனக்குத் தெரிந்தவர்களும்
இன்னும் தெரியாத பல முகங்களும்
கலந்துகொண்டிருந்தனர்.

நவீன இலக்கியவாதிகள் எல்லோருமே
ஒரு விசயத்தில் உறுதியாக இருப்பதாகப்பட்டது.
அவர்களுக்குள் எழுதப்படாத ஒரு விதியாக
கடைப்பிடிக்கும் விடயமொன்றை அனைவரும் பேசியது
ஆச்சரியமாக இருந்தது.
விருதுகள்,பட்டங்கள்,பொன்னாடைகள், போன்றவற்றுக்காக அலைதல் மோசமானது என்றும்
அதை தவிர்ப்பது அவர்களின் தலையாய கடமை என்றும் விளங்கியது.

சசியின் புத்தக வெளியீட்டு விழாவா அல்லது அவருக்கான பாராட்டுவிழாவா என்ற சந்தேகமும் ஏற்பபட்டது. ஈழத்து நவீன இலக்கியவாதிகள் இப்படித்தான் பேசுவார்களா....அவர்களின் இலக்கியம் தொடர்பான அறிதல்கள் இதுதானா என்றும் எண்ணத்தோண்றியது.80பதுகளில் இருந்த, நான் கேள்விப்பட்ட அதே சங்கதிகள்தான் மீண்டும் மீண்டும் பேசப்பட்டன...
ஈழத்தில் என்ன நடக்கிறது?

சசி கடைசியாகப் பேசும்போது அகம்-புறம் எனக் கவிதைகளை வகைப்படுத்தும்போது இந்த விழாவுக்காக வந்ததை நினைத்து உண்மையில் துக்கப்பட்டேன். கவிதையின் அர்த்தத்தை வாசகன்தான் தீர்மானிப்பதாக அவர் சொல்லும்போது அவரை பரிதாபத்தோடு பார்த்தேன். ஒரு பிரதியில் அர்தத்தை கண்டுபிடிப்பதற்கு வாசகனின் பங்களிப்பு என்பது ஒரு அம்சம்தான்.அதுபோல பலஅம்சங்கள், பிரதியில் அர்த்தத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பங்களிப்பு செய்யக்கூடியன....

உரையாடல்கள் தேவை.....
சரி ஒரு துயரச் சம்பவம் என நான் சொல்லும்போது அது பலரின் மனதை காயப்படுத்தலாம்....
ஈழத்து நவீன எழுத்தாளர்களின் இலக்கிய கூட்டமொன்றை எனது காலத்தில் இப்படித்தான் சந்தித்தேன்.

 எஸ்.எல்.எம்.ஹனிபா

 மௌனகுரு
 கல்லுரன்
 சோலைக்கிளி
சண்முகம் சிவலிங்கம்