ஞாயிறு, ஜனவரி 01, 2012

ஷோபா சக்தியுடன் முசுப்பாத்தியா பேசுதல்


வெப்புசாரம் புடிச்சுப்போன தோழருக்காக ஒரு மீள்பதிவு.

எனது உரையாடலை இங்கிருந்துதான் தொடரப்போகிறேன்.

இலக்கியம்,அல்இலக்கியம்,அர்த்தம்,மற்றும் எனது கருத்து




கடந்த காலங்களில் மதிப்பிடுதல், அளவிடுதல், தரப்படுத்தல் போன்ற சொற்கள்கொண்டிருப்பதாக கருதத்தக்க நிலைப்பாடுகளை கலைத்துப் போடுவதில்கவனம் செலுத்தி வருவதை சொல்லத் தேவையில்லை. அதற்கு மாற்றாகத்தான்வாசிப்புப் பிரதி என்ற சொல்லாக்கத்தை முதன்மைப்படுத்தினோம். வாசிப்புப்பிரதி என்ற மாற்றுச் சொல்லாடல் கூட தரப்படுத்தும், மதிப்பீடு செய்யும்செயற்பாடுகளுக்கு ஈவிரக்கமின்றி, எதுவித கவனமுமின்றிபயன்படுத்தப்படுவதை கவலையோடு சொல்ல வேண்டியவர்களாகஇருக்கிறோம்.
மதிப்பீடு என்பது நமது இரத்தத்தில் ஊறிப்போன ஒரு அம்சத்தைப் போலதோன்றுவதற்கு காரணமாகும் நவீனத்துவத்தின் முக்கிய கருத்தாக்கம் என்றநிலையிலுள்ள பகுத்தறிவின் ஆளுமைஎன்ற நிலைப்பாட்டை இங்கு நினைவுகூருதல் அவசியம் என கருதலாம். மதிப்பீடு என்பது வளர்ச்சிபோன்றநிலைப்பாடுகளை செழுமைப்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டது என பிலாந்தைப்போல நவீனத்துவம் அறிவித்துக் கொண்டாலும்; அதன் நிமித்தம்மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள், புறமொதுக்குதல்கள், இழி நிலைகள், புகழ்ச்சிகளின் அடியாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் என ஒரு தொகைவிளைவுகளை மனித குலம் அனுபவித்துவிட்டது அனுபவித்துக்கொண்டிருக்கிறது. அறிவொளிக் காலத்தின் கொடையாக கருதப்படும்பகுத்தறிவின் முக்கியத்துவம் என்பது இன்னும் சிலாகிக்கப்படுவதும், அதுவேஎல்லாவற்றுக்குமான முற்று முழுதான நிவாரணி போன்ற கதைகளையும்நாமறிவோம். பகுத்தறிவு என்பது ஒரு குறிப்பிட்ட வகை பகுத்தறிவாககுறுக்கப்பட்டிருப்பதையும் நாமறிவோம். மற்றதை அறிந்து கொள்வதற்குபதிலாக தனக்கு பொருந்தி வருவதை மட்டும் தேர்வு செய்வதையும்நாமறிவோம்.
அதாவது, அறிவு என்பது தனக்குத் தெரியாத, முற்றிலும் தனக்கு மாற்றாகஇருக்கின்ற ஒன்றை புரிந்து கொள்வதை விட்டுவிட்டு தனக்குப்பொருந்திவருகின்றவற்றை மாத்திரம் எடுத்துக்கொண்டு புரிந்து கொள்ளமுடியாதவை என்ற ஒரு தொகுதியை தவிர்த்துவிடுகிறது. புறத்தே தூக்கிவீசிவிடுகிறது. அறிவு அறியப்பட வேண்டியவை என்றும் பொருந்தி வருவதும்தான்என்ற விதிகளை தன்வசம் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அறியும்முறையை தெரிந்து கொள்பவரே அறிஞர் என்ற நிலைப்பாட்டைஉருவாக்குவதையும் கவனிக்கலாம். (உதாரணம் : பூமி தட்டையானதுஎன்றிருந்தால் இதற்குப் பொருந்திவருகின்ற கருத்தாக்கங்களெல்லாம்அறியப்பட்டதாகவும், அதுவே அறிவாகவும் மாறுவதோடு, பூமி பற்றிய ஏனையகருத்தாக்கங்கள் அறிவல்ல என்றும் பிழையானது, புறமொதுக்கப்படக் கூடியதுஎன்ற வகையில் பகுத்தறிவு தன்னை வடிவமைத்துக் கொண்டதை நாமறிவோம்.) தெரிந்தவொன்றை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே அறிவு பயன்படுவதையும்தெரியாத அல்லது மற்றமையை அறியாமலே விட்டுவிடுவதற்குபயன்படுவதையும் அவதானிக்கலாம். இதனால் அறியப்படாத பெரும்பகுதி நம்முன் விரிந்து கிடக்கின்றது. அதுமட்டுமல்ல அவை அறியப்படத் தேவையற்றதுபோன்ற இழிவுகளும் ஏற்றப்படுவதை கவனிக்கலாம். இதைத்தான்பின்நவீனத்துவம் பகுத்தறிவின் பயங்கரம் என உடைவில் நிர்மாணம் செய்துகாட்டியது.
அறிதல் முறையை அனுசரிக்கக்கூடியவைகள், தனது விதிகளுக்கு பொருந்திவருபவைகள்தான் அறிவு என்ற நவீனத்துவத்தின் கருத்தாக்கத்தை உடைத்துவீசுவதை பெருங் கொண்டாட்டமாக வரித்துக் கொண்டது பின்நவீனத்துவம். விதிகளுக்கு பொருந்தி வருவதல்ல அதை மறுத்தெழுவதே அறிவு எனபின்நவீனத்துவம் முழங்கிற்று. பூமி தட்டையானது என்பதற்குபொருந்திவருகின்ற கருத்தாக்கங்களையே நம்பியிருந்தால் பூமிகோளவடிவமானது என்பது பிறந்திருக்காது. விதிகளை ஏதோ ஒரு கணத்தில்மீறியதே அறிவாக இருந்திருக்கிறது என்பது புலப்படும். மரத்திலிருந்து பழம்விழுவது இயற்கையானது என்றிருந்தால் புவியீர்ப்பு விதி நமக்குகிடைத்திருக்காது என பின்நவீனத்துவம் பகுத்தறிவின் தரப்படுத்தல் மற்றும்மதிப்பீடு போன்ற நிலைப்பாடுகளுக்கு உதவுகிற, பொருந்திவருதல் என்பதைகாலைக்கடனைப் போல கழித்து வெகுநாளாகிற்று.
ஆனால் நமது சூழலில் இன்னும் மதிப்பிடுதல் என்ற பிரதி வாசிப்பு முறை மிகமுக்கிய அம்சமாக கருதப்படுவதைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும். பிரதி சார்ந்துதான் கொண்டிருக்கும் நிலைப்பாடுகளுக்கு பொருந்தி வருபவைகளை புகழ்வதும், அவை மீது அக்கறை கொள்வதும், மற்றமையாய் வெளிப்பட்டு நிற்பவை மீதுசீறிப்பாய்வதும், ஓலமிடுவதும் மதிப்பீட்டு விமர்சன முறையின் முக்கியகடமையாகும். பொருந்தி வருபவை ஆபத்தற்றது என்றும் மீறிக் கொண்டுவெளியே தலைகாட்டுபவை ஆபத்தானது எனவும் மதிப்பீட்டின் விதிகள்பரிந்துரைக்கின்றன. பிரதி தொடர்பில் வாசிக்க முற்படுகையில்; என்னநடந்திருக்கக்கூடும்? என்ற ஊகங்களை விட்டுவிட்டு இதுதான் நடந்திருக்கிறதுஎன்ற சட்டாம்பியாரின் தீர்வுகளோடு மதிப்பீடுபிரதிகளின் வெளி எங்கும்கோபத்தோடு அலையத் தொடங்கிவிடும். மதிப்பீடு எப்போதும் ஒரு முனையைசெயலூக்கமுள்ள முற்றும் தெரிந்த முழுமை என்றும், மறுமுனைசெயலூக்கமற்ற பயன்படுத்தத்தக்க பொருள் என்றும் கருதுகிறது. அதன் நிமித்தம்தண்டிக்கவும், பரிசுவழங்கவுமான நிலைப்பாட்டோடு பிரதி இருப்பதாகவும்கருதுகிறது. திருத்தப்பட வேண்டிய நிலைப்பாட்டில் உள்ள ஒன்றாகவும்பிரதியை கருதும்படி வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது. அது மட்டுமன்றிமதிப்பீடு செய்பவர் அவர் சார்ந்த நலன்களுக்கு தக்கவாறு சுதந்திரம் எனகருதத்தக்க நிலையில் செயலாற்றவும் தோதாக அமைந்து விடுகிறது.
இங்கொன்றை இடையீடு செய்வது பொருத்தம் என்று நினைக்கிறேன். எனதுகணிப்பு, எனது கருத்து போன்ற கருத்தடைவுகள் பெரும்பாலும் என்ன வகையில்செயற்படுகின்றன என்பதை அவதானிக்கும் போது; எந்தவொரு கருத்தையும்ஒருத்தர் தெரிவு செய்யவும், பின்பற்றவும் உரிமை இருக்கிறது. எனவே அதுஅவருடைய கருத்து என பயன்படுத்தப்படுகின்றது. தெரிவு செய்ய இருக்கும்உரிமை என்ற வகையில் குறித்த கருத்தாக்கத்தை எதற்கும் பயன்படுத்தமுற்படுவதையும், பயன்படுத்திக் கொண்டிருப்பதையும் நாமறிவோம். எனதுகருத்து என்ற சொல்லாடல் மிக மிக ரகசியமாக மதிப்பீட்டு விமர்சனமுறைமைக்கு சோரம் போவதையும் நாமறிவோம். எந்தவகைக் கருத்தையும்தேர்வு செய்வதற்கான உரிமை என்ற நிலையில் ஒரு முனையில் வசிக்கும்என்னுடைய கருத்து என்பது மறுமுனையின் மீது எந்தக் குற்ற உணர்வும் இன்றிபிரயோகிக்கப்படுவதை நாமறிவோம். மேலும் விபரிப்பதெனில் தேர்வு செய்யும்உரிமை என்ற நிலையில் உள்ள எனது கருத்துஎன்பது பாசிசமாக இருந்தாலும்கூட ஏற்றுக்கொள்ளப்படுவதை நாமறிவோம். எனது கருத்து என்பதைஉரையாடலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக பகுத்தறிவு முன்மொழிவதற்கு-கருத்தைத் தேர்வு செய்யும் உரிமை என்ற நிலைப்பாட்டை துணைக்களைப்பதைஅவதானிக்கலாம். மதிப்பீடுதன்னிடம் கொண்டிருக்கும் விதிகளின்இயங்குதிறன் மழுங்கிப் போகும் நிலையில் பிரதி தொடர்பான வாசிப்பைமுன்வைப்பதற்கு எனது கருத்துஎன்பதை பயன்படுத்துகிறது.
எனது கருத்துஎன்ற கருத்தடைவு தொடர்பில் மேலும் சில அவதானங்களைமுன்வைப்போமானால்; தேர்வு செய்யும் உரிமை என்ற நிலையின் எனது கருத்துஎன்பதற்குள் எதுவும் இருக்க முடியும் என்றாகிறது. எனதுஎன்பதற்கு மாற்றாகஉனதுஎன்பதும் சம்மந்தப்படும் போது இரு முனைகள் உருவாவதைஅவதானிக்கலாம். இப்போது பிரச்சினை உருவாகிறது. எனதுஎன்பதுமறுமுனையில் இருக்கும் உனதுஎன்பதை எதிர்கொள்ளும் பொழுதுவன்முறையை கையாள வேண்டி வருவதை அவதானிக்கலாம். மற்றமையைஅங்கீகரிக்காத, மற்றமை என்பது அறியப்படத் தேவையற்ற, மற்றமை என்பதுசெயலூக்கமற்றது என கருதிவந்த பகுத்தறிவின் அறிதல்முறை எனதுஎன்பதன்பயன்பாட்டுக்குரியதாய் மற்றமையாகிய உனதுஎன்பதை புரிந்துகொண்டுசெயலாற்றுவதே அறிவு என்றாகிறது.
இதற்குப்பின்னால் இயங்கும் அரசியல் மிகத்தந்திரமாக எனது கருத்துஎன்பதைவைத்துக் கொண்டு தனது விருப்பத்தை (வன்முறை ஆசையைக் கூட) நிறைவேற்றுவதை அவதானிக்கலாம். அப்படியென்றால் எனது கருத்து, மதிப்பீடுஇவைகளின் இடத்தில் மாற்றாக எதைத்தான் முன்வைக்க முடியும்? அறிதல் முறைமையையே கலைத்துப் போடுவதன் மூலம் மாற்றாக எதனைமுன்வைக்க முயற்சிக்கிறேன் போன்ற கேள்விகள் எழலாம். இனி அவைதொடர்பில் சில முயற்சிகள்.
மொழிச்செயற்பாடுகளில் ஒரு பகுதியை இலக்கியம் என்ற குடும்பத்துக்குள்வரையறுப்பதை நாமறிவோம். கவிதை, சிறுகதை, நாவல், போன்றவரைப்படுத்தலுக்குள் மொழி இடமாற்றப்படும் போது இலக்கியம் என்றநிலைப்பாட்டை இலகுவில் அடைந்துவிடுகிறது. இது கடந்த 25 நூற்றாண்டுகளாக மொழி குறித்த ஒரு நிலைப்பாட்டிற்கு தள்ளிவிடுவதைநம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. மொழியின் பிற செயற்பாடுகளானஇலக்கியமற்றது என கருதப்படுபவை) வற்றிலிருந்து இலக்கியம்வேறுபடுத்தப்படுவதற்கான காரணங்களை அறிய முற்படும் வாசிப்புக்கள்இல்லாமலே போயிற்று. இலக்கியம் என்பது எல்லோருக்கும் தெரிந்தஒன்றாகவும், இதுதான் இலக்கியம் என்று முற்று முழுதான அர்த்தம்கிடைத்துவிட்டதுமான ஒரு நிலை பாதுகாக்கப்படுவதை அவதானிக்கலாம். இலக்கிய குடும்பத்துக்குள் வரைப்படுத்;தப்படுகின்ற அல்லது தள்ளப்படுகின்றகவிதை, சிறுகதை, நாவல் போன்றவற்றுக்கும் இந்நிலையே பெரிதும்பராமரிக்கப்படுகின்றது. மேற்குறித்தவைகளுக்கான அர்த்தங்கள்கேள்விக்குட்படுத்தப்படுவதற்கு எங்கோ அப்பாலிருக்கிறது எனக்கருதப்படுகிறது. அவை நிலையான அர்த்தங்களை அல்லது மோட்ச நிலையைஎட்டிவிட்டது என்றும் கருதப்படுகிறது. இலக்கியம் என்ற குடும்பத்துக்குள்ளேகண்டுணரும் மரபுக்கவிதை, புதுக்கவிதை, நவீன கவிதை, பின்நவீனகவிதைஇதுபோல சிறுகதை, நாவல் போன்றவற்றை பொருத்திப் பார்க்கவும்) போன்றகருத்தாடல்களை பொருள் கொள்வதற்கும் பரிசீலிப்பதற்கும்; ஆட்படக்கூடியவை என்ற நிலைப்பாடுகளை நோக்கியே அதிகம் அக்கறைஏற்படுத்தப்படுவதை அறிவோம்.
நிலையான பொருளை எட்டிவிட்ட அல்லது அர்த்தத்தை மாற்றமற்ற நிலைக்குகொண்டு சென்று முழுமையை எய்திவிட்ட கருத்தடைவுகளுக்கு கீழேஇலக்கியம்) நிரற்படுத்தப்படும் கருத்தாடல்களை மாத்திரமே கவனிப்புக்குள்நடமாட விட வேண்டும் என்ற இந்த நிலையை இன்னும் என்னவென்றுபேசுவோம்? இலக்கியமற்றது என்ற பகுதிக்குள் இனங்காணும் மொழிச்செயற்பாடுகளுக்கும் இலக்கியம் என அடையாளப்படுத்தும் மொழிச்செயற்பாடுகளுக் குமிடையே பரிந்துரைக்கப்படும் வேறுபாடுகளைகவனித்தோமானால் அவை இரண்டு பகுதிக்குள்ளும் அப்பாவித்தனமாகபல்லிளித்துக் கொண்டிருப்பதை அறிவது சிரமமல்ல. ஒரு சிறு விளம்பரத்தில்கூட இலக்கியத் தன்மையை கண்டுகொண்ட பின்நவீன சிந்தனையாளர்கள்அதிரடியாக அறிவித்த ஒரு அறிவிப்புத்தான் பிரதிஎன்பதாகும். இலக்கியம்என்று பொதுவாக உணரக்கூடிய பண்புகளின் கட்டமைப்பை தெரிந்துகொள்வதாகஅறிவிக்கும் போது இலக்கியம் என்பது தமக்குத் தெரிந்த ஒன்றாகமாறிவிடுவதை கட்டுடைத்துக் காட்டினார்கள். ஏற்கனவே நன்றாக அறிந்துள்ளஇலக்கியம் என்ற பொருளின் பொது இயல்பைப் பற்றிய ஒருபகிர்ந்துகொள்ளலாக இருக்கலாம். இலக்கியமற்றதாக கருதப்பட்டவற்றில்இலக்கியத்தன்மைகண்டுபிடிக்கப்பட்டுவிட்டதிலிருந்து இலக்கியம் என்றகருத்தாக்கம் இன்னும் சிக்கல் நிறைந்ததாகவும், கடும் மூளை உழைப்பைக்கோருவதாகவும் மாற்றம் பெறுவதோடு ஏற்கனவே இலக்கியம் என்று புரிந்துகொள்ளப்பட்ட பண்புகளினதும், நிலையான அர்த்தமுடையது போன்றகட்டுக்கதைகளினதும் சிதைவையும் அறிவிக்கிறது என்பதை புரிந்துகொள்வோம்.
இலக்கியம் என்பது மைய நீரோட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்டகுறிப்பீடுகளுக்கான அர்த்தத்தை புதுப்பிக்கும் மொழிச் செயற்பாடு எனக்கருதிவந்ததையும் சிதைத்து விடுவதையும் அவதானிக்கலாம்.
உ+ம்: இலக்கியம் சார்ந்த மற்றும் வரலாற்று விவரணைகளுக்குத் தனித்தன்மையை அளிக்கும் பட்சத்தில் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளை காட்டுவது அவசியமில்லை. அதே போலவே, உருவகம் போன்ற அணிவகைக் கருவிகள் இலக்கியத்துக்கு இன்றியமையாதவை என்றும் ஆனால் பிற சொல்லாடல் வகைகளுக்கு அவை வெறும் அலங்காரம் என்றும் பெரும்பாலும் கருதப்பட்டுவந்தன. அவை இப்போது இலக்கியம் சாராத பிரதிகளில் (இவை பிராய்ட்டின் உளப்பகுப்பாய்வு விபரிப்புக்களானாலும் சரி அல்லது தத்துவ விவாதங்கள் சார்ந்த படைப்புக்களானாலும் சரி) இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை பின்நவீன சிந்தனையாளர்கள் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். பின்நவீன சிந்தனையாளர்கள் பிற சொல்லாடல்களிலும் அணிவகைகள் எவ்வாறு சிந்தனையை உருவகைக்கின்றன என்று காட்டுவதன் மூலம் ஆற்றல் வாய்ந்த ஒரு இலக்கியத் தன்மையை இலக்கியம் சாராத பிரதிகள் எனக் கருதப்படுபனவற்றிலும் செயற் படுவதை அவர்கள் நிரூபித்துக்காட்டுகின்றார்கள்
குறிப்பீடுகள் பிறப்பிக்கும் சிந்தனைக்கான புதிய அர்த்தங்களின் உருவாக்கம் என்பது இலக்கியம் மற்றும் அது சாராத பிரதிகளிலும் உருவாகிக் கொண்டிருப்பதோடு இரண்டுக்குமிடையிலான எல்லைக்கோடுகளை இரக்கமற்று அழித்துக் கொண்டிருப்பதன் மீது நமது அக்கறையைக் கோருகிறது. இதிலிருந்து சிலவற்றை இப்படித் தொகுக்கலாம் எனத் தெரிகிறது. ஏனைய கண்டுபிடிப்புக்களான கருத்தாக்கங்களைப் போலவே இலக்கியமும் கட்டமைக்கப்படுகிறது. பொதுவான ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவுகள் என்ற அடிப்படையில் அர்த்தம் பெற முயற்சிக்கப்படுகிறது. ஏற்றுக் கொள்ளத்தக்கஎன்பதன் உள்ளீடாக மக்கள் இருப்பதாக பரிந்துரைக்கிறது. மக்களால் பொதுஎன்ற நிலைப்பாட்டைக் கொள்ளத்தக்க பண்புகள் வடிவமைக்கப்படுகிறது. இவை நிகழுவதற்கான குறித்த காலங்களில் அவை கொண்டிருப்பதாக அறியப்படும் அர்த்தங்கள் அதற்குள் இணைக்கப்படுகிறது. அதுவே எக்காலத்துக்குமானதாகவும், எல்லா மக்களுக்குமான உண்மை என்ற இடத்தில் அர்த்தப்படுகிறது. உண்மை என்ற எல்லையை அடையும் போது உண்மையை மாற்றுவதா உண்மை மீது கேள்விகளை முன்வைப்பதா? போன்ற வாசிப்புக்களினால் பாதுகாக்க முயற்சிக்கப்படுகிறது. ஆனால் பொதுவான, எல்லோருக்குமான உண்மை போன்ற கதையாடல்களின் முன் குறுக்கீடு செய்யும் அறிவுச் செயற்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. எல்லோருக்குமானஎன்பதற்குள் விளிக்கப்படும் எல்லோர் என்றால் யார்? இது போன்ற கேள்விகளால் கலைந்து கொண்டு போவதை நம் கண்முன்னே அவதானிக்கலாம்.
இலக்கியம் என்றால் இன்னதுதான் என்ற தீர்மானங்களுடன் இருந்த நிலை மாறி என்னவாக இருக்கக்கூடும் என்பதன் பால் அக்கறையை திருப்பிவிடுவதை தனது செயலாக கொண்டிருக்கிறது. இதுதான் இலக்கியம், இதுதான் இலக்கியமற்றது போன்றவற்றின் பின் அலைந்துதிரிவதை விட்டுவிட்டு என்னவாக இருக்கக்கூடும் என்பதை அறிய முயற்சிக்கும் அழைப்பாக மாறிவிட்டது. தனித்த ஒருத்தரின் கருத்தோ, ஒரு குழுவின் கருத்தோ அல்லது ஒரு நிறுவனத்தின் கருத்தோ இலக்கியம் என்பது இதுதான் என்பதைத் தீர்மானிப்பதற்குப் பதிலாக எல்லோருமே அதைப்புரிந்துகொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக அறிவிக்கிறது. ஏதொரு கருத்தும் நடு நாயகமாக நின்று கட்டளையிடுவதையும், அதற்குச் சார்பான அறிவாளர்களை உற்பத்தி செய்வதையும் தடுத்துவிடுகிறது. குறித்த ஒரு கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள்தான் இலக்கியச் செயற்பாட்டாளர்கள் என்றும் பிறர் அதிலிருந்து கழித்து வைக்கப்படவேண்டியவர்கள் என்ற வன்முறையையும் தவிர்க்கிறது. இலக்கியம் என்பதை அறிந்து கொள்வதில் பங்காற்றுபவர்களாக எல்லோரையும் முன்னிறுத்துகிறது. ஒன்றை அறிந்து கொள்ளும் முயற்சியில் பங்கேற்பவர்களாக எல்லோரையும் பார்க்கிறது. தகைமைகள் தரப்படுத்துதல்கள் போன்றவற்றுக்கு அப்பால் எல்லோரின் உழைப்பையும் பெறுமதிமிக்கதாக உருவாக்குகிறது. (இது பின்நவீன நிலவரம் எனில் அதற்கு முன்பான நிலவரத்தை எல்லோரும் அறிவோம் என்ற அடிப்படையில் அதிகம் விபரிக்கவில்லை. அதுபற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றவர்களுக்கு இது இடமல்ல என்பதால் அவைகளை விட்டுவிடுகிறேன்.)
நாம் இப்போது இலக்கியம் குறித்த வாசிப்பை விரிவுபடுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்ற வகையில் இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். அதாவது இலக்கியம் குறித்து அர்த்தப்படுத்தும் அதிகூடிய செயற்பாட்டில் பாதுகாக்கப்பட்ட ஒரு கூட்டுக் கொள்கையை கடைப்பிடித்து வந்திருப்பதை வரலாற்றில் நெடுக சந்தித்திருக்கின்றோம் என்பதே அது. அப்படியெனில் இலக்கியமற்றது மற்றும் இலக்கிய குடும்பத்துள் வரைப்படுத்தப்படுபனவற்றில் அர்த்தத்தை எப்படிப் பெறுகிறோம் என்ற கேள்வி நம்முன்னே பிரசன்னமாவதை தவிர்க்க முடியாது. அர்த்தப்படுத்தல் எனும் போது இலக்கியம் சாராதவைகள் என்பதற்கும் இலக்கியம் சார்ந்தவைகள் என்பதற்கும் குறிப்பிட்ட சில முறைகளையே பயன்படுத்துவதை கண்டுபிடித்ததில் பின்நவீன சிந்தனையாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அர்த்தம் என்பது இயல்பானது என்ற நிலைமாறி கண்டுபிடிக்கப்படுபவைதான் என்றாகிறது. எனவே அவை பற்றி மேலோட்டமாகவேனும் நோக்குவது இந்த இடத்தில் அவசியமானதே.
ஒரு பிரதிக்கு பெயர் சூட்டுவதற்கான முயற்சியில் நாம் சந்திப்பதே அர்த்தம். அர்த்தம் என்பது பெயர்சூட்டுதல்என்ற அளவில்தான் அறிவியல் வரலாற்றில் பயன்படுத்தப்படுகிறது. நமது சூழலில் பெயர் சூட்டுதல் என்பது மிகவும் வேறான நிலையைக் கொண்டிருப்பதால் அதை கட்டுரைப் போக்கில் தவிர்த்துவிட்டு அர்த்தத்தை கண்டடைதல்என்று நமக்கிடையில் நிலவும் சொல்லாடலையே பயன்படுத்துகிறேன்.
பிரதி அர்த்தத்தை கொண்டிருக்கிறதுXஅர்த்தம் பிரதியிலிருந்து உருவாகிறது. போன்றளவிலேயே பெரிதும் நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் பிரதி ஒரு அர்த்தத்தை கொண்டிருக்கிறது என்ற சமிஞ்சையை நமக்கு காட்டுகிறது. நமது அறிதலுக்கு மிக நெருங்கி வருவது போன்ற ஒரு பாவனை காட்டிக்கொண்டு அமர்ந்திருக்கிறது. இந்த சமிஞ்சை என்பது பிரதியால் தூண்டப்படுகிற வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. சமிஞ்சையால் தூண்டப்பட்டு அறிவைக் குறுக்கீடு செய்யும் செயலூக்கமுள்ள பகுதியின் விளைவுதான் அர்த்தம் என்ற இடத்தை நோக்கி நம்மை நகர்த்திச் செல்கிறது எனலாமா? அல்லது அந்த விளைவு அர்த்தத்தினுள் நுழைவதற்கான ஒரு வழி எனலாமா? இரண்டில் எதைத் தேர்வு செய்தாலும் அது திருப்தி தராத ஒன்றாகவே அமைந்துவிடும். எனவே அர்த்தம் என்பது ஊகம் என்ற கருத்தடைவுகளை நம்முன் நிறுத்துவதை அறியலாம்.
பிரதி என்பது ஏற்கனவே அர்த்தங்களைக் கொண்டிருக்கிற சொற்களாலும் கூற்றுக்களாலும் அமைந்திருப்பதை அறிவோம். அதாவது சொற்களுக்கு என்று உள்ள அர்த்தங்கள், சொற்களின் அர்த்தங்களை நிரற்படுத்துவதினூடாக அமைக்கப்படும் கூற்று. இப்போது கூற்றுக்கென்று உருவாகிற அர்த்தம்; வார்த்தைகளின்-சொற்களின் சாத்தியமான அர்த்தங்களை பேசுகிற-எழுதுகிறவரின் செயலான கூற்றுக்களுக்கு அர்;த்தம் கிடைப்பதற்கு பங்களிக்கின்றன. பிரதி இப்போது சொற்களாலும், கூற்றுக்களாலும் அமையப்பெற்ற ஒரு நிகழ்வின் தன்மையைக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். இதை இன்னும் சற்று விரிவாக நோக்கினால் சொற்களுக்கு இருப்பதாக கருதத்தக்க அர்த்தங்கள் நம்மால் உருவாக்க நினைக்கின்ற கூற்றின் அர்த்தத்திற்கு உதவியாய் அமைகின்றது. அதேநேரம் கூற்றுகளுக்கு இருக்கின்ற அர்த்தங்களின் இயக்கமுறும் வெளியாக பிரதி நம்முன் பிரசன்னமாவதை காணலாம்.
கூற்றுக்களின் அர்த்தங்களை பயன்படுத்தும் பிரதி என்ன செய்கிறது என்ற ஒரு தற்காலிகமான வாசிப்பையே பிரதியின் மீது இப்போது நிகழ்த்த முடியும் என்றாகிறது. அது மட்டுமன்றி கூற்றுக்கள் கொண்டிருக்கின்ற அர்த்தங்களுக்கிடையே நிலவும் வித்தியாசங்களி;ன் ஆற்றல்தான் பிரதியின் பக்கம் நமது அறிவை இழுத்துப் பிடிக்கிறது என்பதையும் அறிகிறோம். வேறுபாடுகளும், அதற்கிடையான குறுக்கீடுகளும்தான் பிரதியின் அர்த்தமாக நமக்கு கிடைக்கின்றன எனச் சொல்லலாமா? ஒன்றிலிருந்து மற்றது வேறுபடுவதினூடாகத்தான் நமக்கு அர்;த்தம் கிடைப்பதாக பாவிக்கிறோம். ஒன்றோடொன்று பொருந்திப் போவதினூடாக அது நிகழவில்லை என்பதையும் அறிகிறோம். பிரதி என்பது சக பிரதிகளுடன் பொருந்திப் போவதாக இருக்குமெனில் எதோடு பொருந்துகிறதோ அதன் அர்த்தத்தையே மீண்டும் நிகழ்த்துவதாக அமைகிறது. ஆனால் சக பிரதியை மறுக்குமானால் அதாவது வேறுபடுமானால் இது புதிய அர்த்தத்தை பிறப்பிக்கிறது. ஒத்துப் போவதினூடாக வளர்ச்சி ஏற்படவில்லை. ஒத்துப் போவது என்பது வளர்ச்சி என்பதற்கு எதிராக நிற்பதை அறிகிறோம். வேறுபடுவது என்பது வளர்ச்சியை கொண்டிருக்கிறது. எல்லாமே ஒன்றோடு ஒத்துப்போகுமெனில் அந்த ஒன்று மட்டுமே இருந்து கொண்டிருக்கும். அங்கு வளர்;ச்சிக்கு பதிலாக தேக்கம் என்பதே சாத்தியம். வேறுபடுவது என்பது இருப்புக்கு புதிய ஒன்றை அறிமுகம் செய்வதுதான். வளர்ச்சியின் மறுக்க முடியாத விதியாக வேறுபடுதல்என்பது அமைந்திருப்பதை இப்போது அறியலாம்.
இவைகளை தொகுத்துக் பார்த்தோமானால் இரண்டு அம்சங்கள் நமக்கு கிடைக்கின்றன. வேறுபடுவதினூடாகத்தான் அர்த்தமும் வளர்ச்சியும் எய்தப்படுகின்றன என்பதும் பிரதி முடிவான ஒரு அர்த்தத்தை சுட்டுவதற்கு பதிலாக அர்த்தத்தை ஒத்திப் போட்டபடி இயங்குவதையும் அவதானிக்கலாம். இனி நம்முன் பிரசன்னமாகும் சிக்கல் என்னவென்றால் அர்த்தத்தை கண்டடைவது எவ்வாறு என்ற கேள்விதான். முடிவான ஒரு அர்த்தம் இல்லை என்கிற போதும் அர்த்தம் ஒத்திப்போடப்படுகிறது என்று தெரிகிறபோதும் பிரதியில் அர்த்தத்தை எவ்வாறு நம்மால் கண்டடைய முடியும் என்ற கேள்வி பெரும் சிக்கலாக நம்முன்னே ஒரு விருந்தாளியைப் போல பரிதாபத்துடன் கவனித்தபடி அமர்ந்திருப்பதை உணர்கிறோம். இதை விவாதிக்க வேண்டுமெனில் இன்றுவரையான அறிவியல் வரலாற்றில் அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு கையாளப்பட்ட வழிமுறைகளை பரிசீலிப்பது அவசியம் என்ற நிலைக்கு வந்து நிற்கிறோம். இற்றை வரை உலக அறிவியல் வரலாற்றில் அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு பயன்பாட்டில் உள்ள நான்கு முறைமைகளையும் இனி வாசிக்க முற்படலாம்.
1. ஆசிரியரின் நோக்கத்தை உதவிக்கழைத்து அதிலிருந்து ஊகிக்கும் அர்த்தம்
2. சொற்களுக்குள் இருக்கின்ற அர்த்தங்களின் உறவு, முரண்பாடு, இடையீடு, குறுக்கீடு போன்றவற்றின் பங்கேற்பை
நம்பி அதனூடாக பெறப்படும் முடிவுகள்.
3. நிலவுகிற சூழலில்-மைய நீரோட்டத்தில் ஏற்கப்பட்டதாக கருதி செயலில் உள்ளவைகளோடு பொருந்திவரக்கூடியது
அர்;த்தம் என்பதின் பால் கவன ஈர்ப்பை செய்வதன் மூலம் கிடைப்பதாக கருதுவது
4. வாசகன் தான் கொண்டிருக்கும் அர்த்தத்தை-அதாவது தான் அர்த்தம் என்று கருதுவதை மற்றவைகளிலிருந்து
கண்டடைதல் அல்லது வாசகனின் அர்த்தமே பிரதி கொண்டிருக்கும் அர்த்தமாக முன்வைத்தல்.
இதை சற்று விரிவாக பார்ப்போம்
ஆசிரியரின் நோக்கம்தான் பிரதிக்கான அர்த்தத்தை தீர்மானிப்பதில் முழுப்பங்காற்றுகிறது என அறிவிக்கிறது, முதலாவது முறைமை. அவனுடைய நோக்கத்தை தெரிந்து கொள்வதினூடாக அர்த்தப்படுத்தலை நோக்கி நாம் நெருங்கிவிடுவதாக கதையாடுகிறது. அவனுடைய நோக்கத்தை விளங்குவதும் புரிந்து கொண்டு செயலாற்றுவதும், அதை அறிவதுமே அர்த்தத்தை நமக்கு தென்படவைக்கிறது என்றாகிறது. ஆசிரியன் இல்லாத பட்சத்தில் அர்த்தம் சாத்தியமில்லை என்கிற இன்னொரு கதையாடலையும் அது கொண்டிருக்கிறது. ஆசிரியனிடமே அர்த்தத்தை அறிவதற்கான சாவியை ஒப்படைத்துவிட்டு பிரதிக்கு வெளியே காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் அர்த்தத்தை கண்டடைவதில் ஆசிரியனின் பங்கே செயலூக்கமுள்ளதாக அறிவிக்கிறது. ஆசிரியனின் நோக்கம்தான் அர்த்தத்தின் இருப்பிடம் போன்ற கதையாடல்களையெல்லாம் நம்முன்னே பரப்பிக்கொண்டிருக்கிறது. இங்கு ஆசிரியன் இன்றி அர்த்தம் அமையாது என்ற அம்சம் இருப்பில் அத்துமீறி நுழைக்கப்படுவதை அறியலாம். (ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆசிரியனின் நோக்கம் தேவையற்றது அர்த்தத்திற்கும் அதற்கும் தொடர்பே இருக்க முடியாது என்பதை வாதிட முற்படுவதாக கருத வேண்டாம். குறித்த கருத்தாக்கத்தை விளக்கும் போக்கில் பணியாற்றக்கூடிய கருத்தாக்கங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதுதான் எனது முயற்சி)
முதலாவது முறைமை ஆசிரியரின் நோக்கத்தை பரிந்துரைக்கிறது எனின் இரண்டாவது முறைமை பெரும்பாலும் மொழியை முன்னுக்கு கொண்டு வருகின்றது. சொற்களின் அர்த்தங்களுக்கிடையிலான குறுக்கீட்டின் மூலமே அர்த்தம் பெறப்படுகிறது என பரிந்துரைக்கிறது. அர்த்தம் என்பது மொழியின் விளைபொருள் என்பதாக கதையாடுகிறது. மொழி தனது போக்கில் உற்பத்திக்கும் குறிப்பீடுகள்தான் அர்த்தம் அமர்ந்திருக்கும் இடத்தை தெளிவுபடுத்துகிறது என அறிவிக்கிறது. உதாரணம்:- மேகம்என்ற சொல்லையும் பானைஎன்ற சொல்லையும் ஒரு குறிப்புக்காக எடுத்துக்கொள்வோம். மேகம் தனக்குள் கொண்டிருக்கும் அர்த்தங்களாக கருதத்தக்கவைகளைப் பார்ப்போம். நீர் ஆவியாகி மேகமாகிறது. மீண்டும் அது மழை என்ற பெயரில் வெளியேற்றப்படுகிறது. மேகம் மென்மையானது கறுப்பு வெள்ளை போன்ற நிறங்களை உடையது. ஓரிடத்தில் நிற்காமல் அலைந்து திரியும் தன்மை கொண்டது. தனது வடிவத்தை மாற்றியபடி இருக்கக் கூடியது போன்றவை. பானை மண்ணாலும் நீராலும் ஆக்கப்பட்டது. உணவு தயாரிக்க பயன்படக்கூடியது. எளிதில் உடைந்து போய்விடக்கூடியது. பொருளாதார வீழ்ச்சியுடைய-வறியமக்களின் பயன்பாட்டைக் கொண்டது போன்றவை. மேகம் எட்டாத தூரத்தில் இருப்பதோடு அது விரும்பும் நேரம்தான் மழையையும் தருமெனில் பானை மிக நெருக்கமாக இருப்பது விரும்பிய போதெல்லாம் நமது பயண்பாட்டுக்கு ஒத்துழைக்கக்கூடியது போன்ற கருத்தாக்கங்களையும் பிறப்பிக்கக் கூடியது. என்றவாறாக தொகுத்துக் கொள்ளலாம். இரண்டு பகுதியாக தொகுக்கப்பட்ட கருத்தாக்கங்களையும் மேகப்பானைஎன்ற மொழியாக்கத்தினூடாக கவனிப்போமெனில் தனித்தனியாக அல்லது எதிரெதிராக நிறுத்தப்பட்ட பண்புகளும் அர்த்தங்களும் இடமாறுவதோடு கலந்தும் விடுகிறது. அதே நேரம் குறுக்கீடும் செய்கிறது.
இன்னும் விரிவாக நோக்கினால்-பானை என்பது இப்போது எட்டாத இடத்துக்கு செல்ல முடிகிறது. மேகம் மிக அருகில் இருப்பதாகவும் அமைந்துவிடுகிறது. அதேநேரம் மேகப்பானை என்ற புது விசயத்தை உருவாக்குவதாகவும் அமைகிறது. அது மட்டுமன்றி பொருந்தாத இரண்டு அம்சங்கள் அருகருகே இருந்தபடி வினையாற்றுகிறது என்பதாகவும் மாறுவதை அவதானிக்கலாம். எனவே அர்த்தம்; என்பது மொழியின் விளைவுதானே தவிர வேறில்லை என அறிவிக்கிறது. மொழி முன்னிலைக்கு வந்து அர்த்தத்தை அறிந்து கொள்ளும் ஒரு கருவியாக மனிதர்களை நிறுத்துவதை அவதானிக்கலாம். மொழி இடுகுறித்தன்மையானது என்பது போய் அது இயல்பானது இயற்கையானது போன்ற கருத்தாக்கங்களை வலியுறுத்துவதையும் அவதானிக்கலாம். சுருக்கமாகப் பார்த்தோமானால் மொழி உருவாக்கப்பட்டதல்ல இயற்கையானது என அறிவிப்பதை அறிகிறோம். மனிதன் மொழி தவிர்ந்த சப்தங்கள், நிசப்தங்கள், கோடுகள், வர்ணங்கள் போன்றவற்றோடும் வினையாற்றுபவன் என்றபடியால் மொழி பரிந்துரைக்கும் கருத்தாக்கமான மொழியின் விளைவுதான் அர்த்தம். அதை அறிந்து கொள்வதற்கான கருவி என்ற நிலையிலே மனிதன் இருக்கிறான். செயலூக்கமென்பது மொழிக்குரிய வினைத்திறன் கொண்ட ஆற்றல்போன்ற கதையாடல்களை ஆய்வுக்குட்படுத்தவேண்டியுள்ளது. எனினும் அர்த்தம் பற்றிய அறிதலில்; முயற்சிக்கும் நமக்கு இதுவும் ஒரு தூண்டலாக இருப்பதை கவனிக்க முடியும்.
மூன்றாவது முறைமை நிலவுகிற சூழல்தான் அர்த்தத்தை அடைவதற்கு உதவுகிறது என்று வலியுறுத்துகிறது. இது யதார்த்தவாதம் என்பதாலும் நமது சூழலில் அதிகம் பயன்படுத்தப்படுவது என்பதாலும் விபரிப்பதை தவிர்க்கலாமா? மேலோட்டமாகவேனும் கதைப்போம் என நினைக்கிறேன். இது அனேகமாக அர்த்;தத்தை கண்டடைவது என்பதை தவிர்க்கிறது. அர்த்தம் ஏற்கனவே கண்டடையப்பட்டு விட்டது. கண்டடையப்பட்டுவிட்டதாக கருதும் அர்த்தத்தோடு பொருந்தி வருபவைகளையே அர்த்தமுடையவைகள், மற்றவைகள் அர்த்தமற்றவைகள் எனப் பரிந்துரைக்கிறது. அர்த்தமுள்ளதா அர்த்தமற்றதா என பரீட்சிப்பதை தனது வினை என முன்மொழிகிறது. நிலவுகிற சூழலில்; அதாவது மைய நீரோட்டத்தில் எது அர்த்தமுள்ளது என புழங்குகின்றதோ அதைக் குழப்பிவிடாமல் அதோடு ஒத்துப்போவது எங்கு நிகழ்கிறதோ அதுவே அர்த்தமுள்ளது. நிலவுகிற கருத்துக்கு ஒத்துழைக்கக் கூடியதே தேவை. அதன் மூலம்தான் பயனீட்ட முடியும் என அறிவுறுத்துகிறது. அர்த்தத்தை கண்டடைவதல்ல நமது பணி. பயனீட்டுவதற்கான சாத்தியங்களை உருவாக்குவதும், ஏற்றுக் கொள்ளவதுமே செயலூக்கமுள்ளது என அதிரடியாக அறிவிக்கிறது. அதே நேரம் அர்த்தம் கண்டடையப் பட்டுவிட்டது எனும்போது யாரால் கண்டடையப்பட்டது? யாருக்குரிய அர்த்தம் கண்டடையப்பட்டது? மற்றும் கண்டடையப்பட்டு விட்டதாக அறிவிக்கும் நிறுவனத்தினதோ, குழுவினதோ நலன்களை அது எவ்வாறு நிறைவேற்றுகிறது? அதற்கு மக்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறது? கண்டடையப்பட்டது எல்லோருக்குமான அர்த்தம்தானா? போன்ற கேள்விகளையும் அது கொண்டிருக்கிறது எனும்போது அர்த்தம் தொடர்பான நமது ஆய்வு இன்னும் சிக்கலாகிப் போவதை உணரலாம். ஒத்துப் போவதே இங்கு நிகழ்வாகிறது.
குறித்த ஒரு சமூகத்தில் ஆதிக்க அதிகார சக்தியாக இருக்கும் நிறுவனமோ, குழுவோ, தனிமனிதர்களோ ஒரு கருத்தாக்கத்;;தை உருவாக்குகிறார்கள். (ஆதிக்க, அதிகார சக்கி என்பதால் கருத்தாக்கத்தை வரையறுக்கும் உரிமையோ, பயன்படுத்தும்; உரிமையோ எதுவெனினும் அவர்களிடமே இருக்கும்) அதையே சமூகத்திலுள்ள எல்லா மத, இன, இன்னபிற அடையாளம் சார்ந்த மக்களுமாக அறிவிப்பதோடு அதை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தவும் தொடங்கும்;. அச்சக்திகளால் நிர்ணயிக்கப்படுவதே அர்த்தம் என்கிற கதையாடல்கள் பரப்பப்பட்டு நம்பவைக்கப்படும். எல்;லோருக்குமான அர்த்தங்களும், எல்லாவற்றிற்குமான அர்த்தங்களும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதை பின்பற்றுவது, கடைப்பிடிப்பது ஒன்றுதான் மக்கள் செய்யவேண்டிய பணி என பரிந்துரைக்கும். பின் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக சொல்லும்; பரிந்துரைக்கு ஒத்துப்போகக்கூடிய அம்சங்கள் அர்த்தமுடையதாகவும்;, திமிறிக்கொண்டு நிற்பவை, ஒத்துப்போகாதவைகள் அர்த்தமற்றதாக கருதப்பட்டு திருத்தப்படவேண்டிய நிலை என்ற பக்கத்தில் அமைப்பாக்கம் செய்யப்படும். இதைச் சிதைவடையாமல் தொடர்ந்து பாதுகாப்பதும், கண்காணிப்பதும் ஆதிக்க, அதிகார சக்திகளின் பணி என்றும், பின்பற்றுவது ஒன்றே மக்களின் பணி என்றும் ஒழுக்கக்கோவைகளாக முன்னிறுத்தப்படும்;;. சுருக்கமாகச் சொல்வதெனில் ஆதிக்க, அதிகார சக்திகளின் நலன்களுக்கு பாதிப்புறா வண்ணம் அமைவதோடு மக்களைப் பயன்பாட்;டிற்குரிய பொருட்களாக கட்டமைப்பதற்கும்;; இது உதவுகிறது.
எனவே அர்த்தத்தை புரிந்துகொள்வது என்ற அறிவுச் செயற்பாட்டின் செயலூக்கத்;தன்மை நீக்கப்பட்டு (பலவந்தமாக அகற்றப்பட்டு) அர்த்தமுடையது, அர்த்தமற்றது போன்றவற்றை பிரித்தறிவதே அறிவின் பணி என்றாகிறது. பொருள், அர்த்தம் பயனீட்டு வினைத்திறன் வடிவமாக மாற்றப்பட்டு அர்த்தமுடையது, அர்த்தமற்றது என்பதற்கிடையி;ல் உலவுவதாகக் கருதுகிறது. இரண்;டிற்குமிடையே உலவுகிற அர்த்தத்தை@ குறித்த ஏதோ ஒரு தேர்வின் அடிப்படையில் நாம் கண்டு பிடித்துவிட முடியும் என்கிறது. அர்த்தம் என்பதை இலகுவில் கிடைக்கக்கூடியது என்றும், அவை பற்றி அலட்டிக்கொள்ளத்; தேவையில்லை என்றும் அதை அடைவதற்கான மூளை உழைப்பு மேலதிகமானது, வீணானது என்றும் வலியுறுத்துகிறது. எனவே நிலவுகிற சூழல் அர்த்தத்தை கண்டடைவது தொடர்பில் எந்தவகையான பங்கை வகிக்கிறது என்பதை மேலோட்டமாக கவனித்தோம். அடுத்து அர்த்தத்தை கண்டு பிடிப்பது தொடர்பில் உதவக்கூடிய நான்காவது முறைக்குச் செல்வோம்.
நான்காவது முறைமையானது பிற முறைமைகளை நிராகரித்தபடியும், அவைகளின் அவசியத்தை கலைத்துப் போட்டபடியும் முன்னுக்குத் தன்னை கொண்டு வருகிறது. ஆசிரியனின் நோக்கமோ, நிலவுகிற சூழலோ இதுகாறும் அர்த்தத்தை கண்டுபிடிப்பது தொடர்பில் மேற்கொண்ட வன்முறைகளைப் பேசுகிறது. குறித்த கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி நீண்ட வரலாற்றை தனது நலன் சார்பில் கையாண்டதையும் கலைத்துப்போடுகிறது. ஆனால் மொழியி;ன் முதன்மைத் தன்மை என்ற இரண்டாவது முறைமையோடு குறித்த அளவிலான சமரசங்களையும் கடைப்பிடிக்கிறது. வாசகன், செயலூக்கமற்ற அறியப்படவேண்டியவன் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டதை கவலையோடு நினைவு கூர்கிறது. அதை மறுத்து வாசகனின் அனுபவம்தான் பிரதியின் அர்த்தத்தை தீர்மானிக்கிறது என்றும், சகபிரதிகளின் ஊடாட்டமும் இதற்கு உதவுகிறது என்றும் பேசத் தொடங்குகிறது. பின் அமைப்பியல் சிந்தனையாளர்கள்; என அறியப்படுகிறவர்களால் ஆசிரியன் செத்துவிட்டான்போன்ற அறிவிப்புக்களுக்கும் இது இட்டுச்சென்றது. பிரதியின் அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் இதுவரை செயலாற்றிய ஆசிரியனின் பங்கு, நிலவுகிற சூழலின் பங்கு போன்றவற்றின் முதன்மைகளை கேள்விக்குட்படுத்தியபடி வாசகனுக்கும், சகபிரதியின் ஊடாட்டத்திற்கும்;; இருக்கின்ற தார்மீகக் கடமைகளை முன்வைக்கிறது. இவை புறமொதுக்கப்பட முடியாதவை என்ற நிலையையும் தனது கதையாடலினுள் இழுத்துக் கொண்டு வருகிறது. (ஆசிரியன் செத்துவிட்டான் குறித்து இரண்டாவது பெருவெளியைப் பார்க்கவும்) பிரதியின் அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் வாசகனின் அனுபவம், தயக்கங்கள், அனுமானங்கள், சுய திருத்தங்கள்; ஆகியவற்றை உள்ளடக்கியதென்றும், பிரதியென்பது வாசகனின் புரிந்து கொள்ளலின் மீது நடந்தேறுகிற கலகங்களின் தொடர்ச்சியான வினைப்பாடு எனக் கருதுகிறது. அத்துடன் அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் இதன் பங்குபெறுதலும் முக்கியமானது எனச் சொல்கிறது. பிரதியில் அர்த்தத்தை கண்டுபிடிப்பதென்பது வாசகனின் ஏற்ற இறக்கங்களோடு கூடிய வினையாற்றுதலைக் கொண்டது. பிரதியை-ஏற்ற இறக்கங்களோடு கூடிய அனுபவம், புரிதல் போன்றவற்றைக் கொண்டு வாசகனின் ஒரு தற்காலிகச் சந்திப்பு என அறிவிப்பதையும் அறிகிறோம். இதைத் தொகுத்துப் பார்ப்போமானால் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதில் ஒரு சமனற்ற நிலை வெளிப்படுவதைக் காண்கிறோம். அந்தச் சமனற்ற நிலை அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு உதவும் தன்மை கொண்டிருக்கிறது என இம்முறைமை அறிவுறுத்துவதையும் கவனிக்கிறோம். அதே நேரம் வாசகனின் எதிர்பார்ப்பு என்ற மிக மறைவான ஒரு பரப்பையும் இம்முறைமை கொண்டிருப்பதையும் நாம் கவனிக்கலாம். வாசகனுடைய எதிர்பார்ப்பு சிதைக்கப்படாமலிருக்கும் பட்சத்தில் அர்த்தம் கிடைக்கப்பட்டுவிட்டதாக திருப்தி கொள்வதற்கும், எதிர்பார்ப்பு சிதையும் போதும் அர்த்தம் கிடைக்கவில்லையென தீர்மானிப்பதற்கான ஒரு வாய்ப்பை அளிப்பதையும் கவனிக்கலாம். பிரதிக்கான அர்த்தம் வாசகனின் தனித்த உரிமையாக மாறுகின்ற நிலைமையையும் இங்கு அவதானிக்கலாம். ஆனால் செயலூக்கமற்றவர்களாக, அறியப்படவேண்டியவர்களாக இதுகாறும் ஒதுக்கப்பட்டிருந்த வாசகர்களை செயலூக்கமுள்ளவர்களாக அறிவித்த வகையில் இதன் பயன்பாடு மிக அண்மைக்காலமானது. வாசகர்களின் எதிர்பார்ப்பு என்ற வெளியில் தோன்றும் திருப்திகள், அதிருப்திகள், கேள்விகள், அனுமானங்கள் போன்றவற்றின் நிரற்படுத்தலாக, இறுதி முடிவுகளாக பிரதியின் அர்த்தம் கண்டுபிடிக்கப்படுவதை இது சிபாரிசு செய்கிறது. அர்த்தத்தை கண்டுபிடிப்பது என்பது வாசகச் செயற்பாடு என்றும், அதற்கு வாசகர்களின் பங்களிப்பு மாத்திரமே போதுமானது என்றும் முன்மொழிகின்ற ஒரு நிலைப்பாட்டைத் தோற்றுவித்திருப்பதையும் இங்கு மனங்கொள்ளல் அவசியம். மேலும் இது வாசகர்களிடையே பொதுவானது எனக் கருதப்படும் அம்சங்களுடனும், தனித்தனியானது எனக்கருதப்படும் அம்சங்களுடனும் தொடர்பு கொள்வதினூடாக நிறைவடைவதையும் காணலாம். வாசகர்களே அர்த்தத்தைக் கண்டுபிடிக்கிறார்கள் என்ற அறிவிப்புக்குப் பின்னணியில் பிரதியின் அர்த்தம் என்பது தெளிவாகவும், முடிவானதாகவும் கண்டடையக்கூடியது என்பதையும் அவதானிக்கலாம்.
பிரதியும், அதன் அர்த்தமும் வாசகர்களின் சுதந்திரமான பயன்பாட்டிற்குரிய பொம்மைகள் போல் காட்சியளிப்பதையும் அவதானிக்கலாம். அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதிலுள்ள ஆசிரியனின் முக்கியத்துவமென்பது விளைவித்த வன்முறைகள் அனைத்தையும் அதற்கு மாற்றாக வாசகர்களின் அனுபவம் இடமாற்றிக் கொள்வதற்கு வசதியிருக்கும் என்பதையும் இங்கு அவதானிக்கலாம். அர்த்தம் தொடர்பான நிலைப்பாடுகள் இப்போது மேலும் பல சிக்கல்களை நம்முன் விரித்துப்போடுவதை அவதானிக்கலாம். ஆகவே நாம் என்ன செய்யமுடியும் என்பது தொடர்பில் கொஞ்சம் அக்கறை கொள்வோம் எனில் அர்;த்தத்தை கண்டுபிடிப்பதில் உழைப்பதாக கருதத்தக்க நான்கு முறைமைகளையும் மேலோட்டமாக ஒரு சேர நோக்க வேண்டியுள்ளது. அதிலிருந்து ஏதாவது ஒன்றை தெரிவு செய்ய வேண்டியுள்ளது. அல்லது இதுதவிர வேறேனும் மாற்றுக்கள் உள்ளதா என்பதன் பக்கம் கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது. முதலில் அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு அறிவியல் வரலாற்றில் பயன்படுத்தும் நான்கு முறைமைகளையும் இன்னும் ஆழமாக நோக்க முற்படுவோம். அப்படியானால் எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்பதை விட்டுவிட்டு அவைகள் கொண்டிருக்கும் தத்துவார்த்த நியாயங்களை கவனத்தில் கொள்வோம்.
மேலுள்ள நான்கு முறைமைகளில் ஏதொன்றும் அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு தீர்க்கமானது, முற்றுமுடிவானது என்று சொல்ல முடியாத ஒரு எல்லையை நம்மிடையே உருவாக்குவதை அறிகிறோம். நான்கில் ஏதாவதொன்றை முதன்மைப்படுத்தி வினையாற்றவே பணிப்பதை அவதானிக்கிறோம். அர்த்தம் என்பது குறித்த முறைமைகளினூடாக கண்டறியப்பட்ட அர்த்தம் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கிறோம். அர்த்தம் என்பதை கண்டுபிடிக்க வேண்டுமெனில் ஏதாவதொன்றின் உதவி அவசியப்பட்டுப் போகிறது. எது அவசியப்பட்டுப் போகிறதோ அதுவே அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கான முறையாகவும், பிறருக்கானதாகவும் அமைய வேண்டும். மற்றவைகள் தேவையற்றவைகள் என்ற எல்லைவரை நம்மை வழிநடத்துகிறது என்பதையும் அறிகிறோம். இந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ள நமது கைவசம் இருப்பது மதிப்பீடு என்ற செயல்முறையாகும். இந்த மதிப்பீடு என்ற செயல்முறையையே இதுவரை காலமும் நாம் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு நியாயமான மதிப்பீடு, பாதிப்புகளற்ற மதிப்பீடு, மோசமான மதிப்பீடு போன்ற இன்னபிற இடங்களையும் வழங்குவதுடன், அர்த்தங்கள் கண்டுபிடிக்கப்படக்கூடியது என்ற அறிவின் சௌகரியங்களை ஏற்றுக் கொள்கிறோம். இந்த இடத்தில் சற்று நிதானித்து நோக்குவோமெனில் இதுவரை கால அழிவுகள், வன்முறைகள் போன்ற பலவற்றிற்கு இந்த மதிப்பீடு பயன்பட்டதை அவதானிக்கலாம்.
மதிப்பீடு என்பது தரப்படுத்தி பிரித்து உயர்வாகவும், இழிவாகவும் வகைப்படுத்த முற்படுவதை தனது செயலாகக் கொண்டிருக்கிறது. எதை வேண்டுமானாலும் அர்த்தப்படுத்தும் படி மதிப்பீடு வற்புறுத்துகிறது. பிரதிக்குள் எதிர்த்து நிற்பவைகளையும் தனது அர்த்தப்படுத்தலுக்கு இயைபாக சம்மதிக்காதவைகளையும் வன்முறையை கடைப்பிடித்து நீக்கம் செய்கிறது. அப்படி நீக்கம் செய்கின்ற உரிமை தனக்கு இருப்பதாக மதிப்பீடு தன்னைப் புரிய வைக்கிறது. மதிப்பீடு திடீரென ஒரு நடுவராக அறிவித்துக் கொள்கிறது. அதன் சமிஞ்சைகளுக்கு ஏற்றவாறே பிரதிகளின் நடமாட்டத்தை வழிப்படுத்துகிறது. பிரதியை மேய்க்கும் ஒரு மேய்ப்பனாக தான் இருப்பதை சகலரும் ஏற்று நடக்கும் படி பணிக்கிறது. மதிப்பீடு என்ற சட்டாம்பி அல்லது சர்வாதிகாரிக்குப் பின்னே உள்ள செயற்பாட்டாளர்கள் தமது போக்கில் பிரதிகளை கட்டுப்படுத்தவும், கொண்டாடவும் வசதியான சூழலை உருவாக்கி விடுகிறது. அர்த்தத்தை கண்டடைவதற்கான நான்கு முறைகள் என்ற எதுவொன்றை தேர்கிறதோ அதன் பண்புகளையும், குணாசம்சங்களையும் உட்செரித்துக் கொண்ட ஒரு கொல்லிப் பேயாக மதிப்பீடு உருமாறிக் கொள்கிறது. பின் அதன் ஆட்டத்தை தொடங்கிவிடுகிறது.
எது அர்த்தத்தை தீர்மானிக்கிறது என்ற அம்சம் இலக்கியத்தின் நெடிய வரலாற்றில் மிக முக்கியமான சிக்கலாகவும், செயலாகவும் தொடர்வதை அறியும் போது அங்கு மதிப்பீடு முன்னே தோன்றி தனது பங்களிப்பை சொற்பொழியத் தொடங்குவதை கவனிக்கலாம். இதில் எதுவொன்றும் அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு முடிவான வழிஎன்றோ-முடிவான அர்த்தத்தை தெளிவாக பரிந்துரைக்கக்கூடியது என்றோ அறிய முடியாத ஒரு நிலையை அவதானிக்கலாம். ஆக அர்த்தம் என்பது கையகப்படுத்தத்தக்க சாத்தியக்களோடு பிரதிக்குள் நடமாடுகிறது என்பது கலகலத்துப் போய்விடுவதை தெளிவாக்குகிறது.
அர்த்தம் என்பது கண்டுபிடிக்கப்படக்கூடியது என்றும், அதைக் கண்டடைய சிபார்சு செய்யும் தெளிவான முறைகள் உண்டு என்றும், அந்த முயற்சியை மேற்கொள்ள பரிசோதனை கூடத்தைப் போன்று பயன்படக் கூடியது மதிப்பீட்டுச் செயற்பாடு என்றும் அறியப்படுகிற இலக்கிய வரலாற்றின் கட்டுக்கதைகளை இனியும் நம்பத்தான் வேண்டுமா? அதன் பின்னே அலைந்து திரியத்தான் வேண்டுமா? ஆமென்றால் கட்டுரையை இத்தோடு முடித்துவிடலாம். இல்லையென்றால் முடிவாக்க முடியாது. நான் இல்லை என்றே சொல்கிறேன். எனவே அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்காக எதை சிபார்சு செய்யப் போகிறேன் என்பதை விரிவாக பார்க்கலாம்.
(அர்த்தத்தை கண்டுபிடிப்பது தொடர்பில் நீண்ட கருத்தொன்றை நமது ஆய்வுக்கான மேற்கோளாக எடுத்துக் கொள்வோம்)
அர்த்தம் என்பது படைப்பை இயற்றும் போது ஏதோ ஒரு கணத்தில் எழுத்தாளனின் மனத்தில் இருந்ததோ அல்லது படைப்பு இறுதியாக்கப்பட்ட பிறகு அது எதை அர்த்தப்படுத்துகிறது என்று எழுத்தாளர் நினைப்பதோ அல்ல. மாறாக, அவனோ அவளோ படைப்பில் எதை உள்ளடக்குவதில் வெற்றி கண்டிருக்கிருக்கிறாரோ அதுதான் அதன் அர்த்தமாகிறது. சாதாரண உரையாடலில் ஒரு கூற்றின் அர்த்தம் என்பது அதைப் பேசுபவரின் நோக்கம்தான் என்று நாம் கருதுகிறோம். ஏனென்றால் நமக்குப் பேசுபவரின் வார்த்தைகளில் உள்ள அக்கறையைவிட அந்தக் கணத்தில் அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதில் உள்ள அக்கறை அதிகம். ஆனால் இலக்கியப் படைப்புகள் மதிக்கப்படுகின்றன் ஏனென்றால் அவை அந்தக் குறிப்பிட்ட வார்த்தை அமைப்புக்களைப் புழக்கத்தில் விட்டுள்ளன. ஆசிரியன் மனத்தில் எண்ணியிருக்க வாய்ப்புடைய ஒன்றோடு அர்த்தத்தை வரம்புக்குட்படுத்துவது ஒரு சாத்தியமான விமர்சன உத்தியாக நிலவுகிறது;. ஆனால் இக்காலத்தில் அப்படியான அர்த்தம் வழக்கமாக ஆசிரியனின் உள்மன நோக்கோடு பிணைக்கப்படுவதில்லை. மாறாக ஆசிரியனின் சொந்த அல்லது வரலாற்றுச் சூழ்நிலைகைள் குறித்த பகுப்பாய்வோடு பிணைக்கப்படுகிறது. குறிப்பிடப்படும் கணச் சூழலில் இந்த ஆசிரியன் எவ்வகையான செயலை நிகழ்த்திக் கொண்டிருந்தான்? போன்றவற்றோடு பிணைக்கப்படுகிறது. அது அந்தப் படைப்புக் கணத்தின் அக்கறைகளுக்குத் தக்கவாறே இருக்கிறது என்றும் அது பின்னால் வரும் வாசகர்களின் அக்கறைகளுக்குத் தக்கவாறு அமைவது தற்செயலாக மட்டுமே என்றும் முன்வைப்பதன் மூலம் இந்த உத்தி படைப்புக்குப் பின்னாட்களில் உருவாகும் எதிர்வினைகளைச் சிறுமைப் படுத்தி விடுகிறது.
ஒரு படைப்பின் அர்த்தம் என்பது ஏதோ ஒரு கணத்தில் ஆசிரியன் தன்னுடைய மனத்தில் கொண்டிருந்த ஒன்று அல்ல் அது வெறுமனே படைப்பின் ஒரு பண்பும் அல்ல, ஒரு வாசகனின் அனுபவமும் அல்ல. அர்த்தம் தம்பிக்கவே இயலாத ஒரு கருத்தாகும். ஏனென்றால் அது எளிமையான ஒன்றும் அல்ல. எளிமையாகத் தீர்மானிக்கப்படமுடிவுவதும் அல்ல. அது ஒரே சமயத்தில் ஒரு அகமியின் அனுபவமும் ஒரு படைப்பின் பண்பும் ஆகும். அது நாம் என்ன புரிந்துகொள்கிறோம் என்பது மட்டுமே அல்ல. மேலும் அது நாம் பிரதியில் என்ன புரிந்து கொள்ள முயல்கிறோம் என்பதும் ஆகும். அர்த்தங்கள் பற்றிய விவாதங்கள் எப்போதுமே சாத்தியமானவைதான். இந்தப் பொருளில் அர்த்தம் என்பது முடிவு செய்யப்படாதது. ஒருபோதும் மாற்றப்பட முடியாத மாதிரி இல்லாத முடிவுகளுக்கு உட்பட்ட நிலையில், அது எப்போதும் தீர்மானிக்கப்பட இருக்கிறது.
மேலுள்ள கூற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போது அவசரமாக நம்மை திணற வைக்கும் அம்சங்களை நாம் அவதானிக்கலாம். நீண்ட காலமாகவும், மிக அதிகமாகவும் அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் ஆசிரியன் வகித்த இடம், அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் வாசகனுக்கு அளிக்கப்படவேண்டிய இடம், அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு பயன்படுத்தத்கக்கதாக முன்னிறுத்தப்படும் முறைமையை பெரும் விரிந்த பரப்பாக கையாளும் போது அதன் இறுக்கங்கள் தளர்ந்து செயலிழந்து போகும் தன்மை, எளிதாக எய்திவிட முடியாத ஒரு நிலைப்பாட்டை அர்த்தம் கொண்டிருக்கின்றது என்ற அறிவிப்பு-என வகைப்படுத்தினாலும் இக்கூற்று அர்த்தம் தொடர்பில் முடிவான ஒரு நிலைப்பாட்டை நம்முன் வழங்குகிறது. அதாவது அர்த்தம் என்பது பிரதியாளனின் சுய அனுபவமும், ஒரு பிரதியின் பண்பும் ஒரே சமயத்தில் உள்ளது என்கிறது. அதைக் கண்டுபிடிப்பதில் பிரதியில் எதைப்புரிந்து கொள்ள முயல்கிறோம் என்ற வினைப்பாடு பெரிதும் உதவுவதாக பேசுகிறது.
சுய அனுபவம் மற்றும் பிரதியின் பண்பு என்ற இரண்டின் இணைவாக அர்த்தத்தை நிலைநிறுத்துவதினூடு அர்த்தம் அடையக்கூடிய ஒரு தூரத்திலேயே உள்ளது என்றாகிறது. சுய அனுபவம் என்பது எந்தவகையானது? அதை எல்லோருக்குமானதாக கருதக்கூடியதா? எப்படி கருதக்கூடியது? பிரதியின் எந்த வகைப்பண்பு? போன்ற கேள்விகளை கூற்றுக்கு எதிரே நிறுத்தும் போது இவருடைய நிலைப்பாடுகள் மோசமடைவதை வாசித்துப் பார்க்கலாம். பிரதியில் எதைப் புரிந்து கொள்ள முயல்கிறோம் என்பது அர்த்தத்தை அடைவதற்கான கையேடாக இவர் கருதுகிறார். இதை பலரும் பலதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க முடியும் என்ற நிலைப்பாடுகளை இங்கு எடுகோளாக மாற்றினால் இக்கூற்றும் கரைந்துவிடக்கூடியது என்பதை சொல்லத் தேவையில்லை.
நமது அர்த்தத்தை கண்டுபிடிக்கும் முயற்சி மேலும் மிகக் கடினமான மிக சிக்கலான விடயங்களை உருவாக்கிச் செல்வதை அவதானிக்கலாம். அத்தோடு அர்த்தம் என்பது கையகப்படுத்தத்தக்க ஒன்றல்ல என்றும் பலவகையான அர்த்தங்களை உட்செரித்துக் கொண்டு இருக்கும் ஒரு அம்சம் என்றும் அறிவிப்பதையும் அறிந்து கொள்ளலாம். தெரிதா-சொல்வதைப் போல மிதக்கும் அர்த்தங்கள்என்றாகிறது. அதாவது பின்நவீனத்துவத்தின் அர்த்தங்களை ஒத்திப்போடுதல்என்ற அறிவிப்பை வந்தடைவதை கவனிக்கலாம். (இன்னொன்றை சொல்வது அவசியம். எனது வாசிப்பு அர்த்தங்கள் இல்லையென்றோ அர்த்தங்கள் அவசியம் இல்லை என்றோ அர்த்தங்களை தேட வேண்டாம் என்றோ நகருவது அல்ல. ஒற்றை என்பதற்கு பதிலாக பல அர்த்தங்கள், குறித்த சூழலுக்கு சாத்தியமான அர்த்தங்கள், நெகிழ்ச்சித்தன்மையான அர்த்தங்கள், வன்முறை நீக்கப்பட்ட அர்த்தங்கள் போன்ற இன்னும் பல நிலைப்பாடுகளின் பக்கம் நம்மை தூண்டிய படியாக வாசிக்க முற்படுகிறேன். அத்தோடு அர்த்தம் இன்னதுதான் என அறிவிக்கும் பகுத்தறிவின் வெகுளித்தனங்களுக்கு முன் நாம் அர்த்தங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் பங்கேற்பவர்களாக இருக்கிறோம்என்பதைச் சொல்வதுமாகும்.)
அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு உதவக்கூடிய முறைகளாக நம்முன் பரிந்துரைக்கப்படும் முறைமைகளை பிறிதொரு வாசிப்பிற்குற்படுத்திப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அவைகளுக்கிடையிலான வேறுபாடுகளை மேலே வாசிப்புச் செய்து பார்க்த்தோம். அவைகளுக்கிடையிலான ஒற்றுமை என்ன என்பதை கண்டுபிடிக்கும் போது இன்னும் சில அவதானிப்புக்களை நமது அர்த்தத்தைக் கண்டுபிடிப்தற்கான பயணத்தில் சந்திக்க முடியுமென நினைக்கிறேன்.
மேலே நாம் கடந்து வந்த நான்கு முறைமைகளும் ஒருமித்த குரலில் ஏதாவதொன்றை முதன்மைப்படுத்தும் படி வலியுறுத்துவதை ஒரு பிரதான பணியாக கொண்டிக்கிறது. அதே நேரம் வேறொன்றை பின்னே தள்ளிவிடுங்கள் என்றும் கட்டளையிடுகிறது. இப்படியும் சொல்லலாம். அதாவது அர்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமெனில் ஒரு பகுதியைச் செயலூக்கமானதாகவும் மற்றயதை செயலூக்கமற்றதாகவும் கொள்வதினூடாகத்தான் அர்த்தத்தை கண்டடைய முடியும் என்கிறது இதை விரிவுபடுத்துவோமெனில் ஆசிரியனின் நோக்கத்தை முதன்மைப்படுத்தினால் வாசகனின் அனுபவத்தை செயலூக்கமற்றதாக ஏற்கச் செய்கிறது. மொழியை செயலூக்க முள்ளதாக வரித்துக் கொண்டால் ஆசிரியினின் நோக்கத்தை செயலூக்கமற்றதாக ஏற்கச் செய்கிறது. சூழலை முன்னிலைப்படுத்தினால் மொழியின் குறுக்கீட்டை செயலூக்கமற்றதாக பணிக்கிறது. வாசகனின் அனுபவத்தை செயலூக்கமுள்ள வினை எனக் கருதினால் பிற அம்சங்களை செயலூக்கமற்ற நிலைக்கு அனுப்பிவிடுங்கள் என வலியுறுத்துவதை அவதானிக்கலாம். எனவே, இம்முறைகள் அர்த்தத்தை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கைகளோடு-ஏதாவது ஒரு முனை மட்டுமே செயலூக்கமானது. அதற்கெதிரே இருக்கும் மறு முனை என்பது செயலூக்கமற்றது. என்ற நிலைப்பாடுகளை தமக்கிடையான ஒரு பொதுப்பண்பாக அமைத்துக் கொண்டு செயற்படுவதை அவதானிக்கலாம். ஆனால் அர்த்தம் கண்டுபிடிக்கப்படக்கூடியது என்றும் தான் கண்டு பிடித்தவைதான் அர்த்தம் என்றும் வெளிப்படையாக அறிவிப்பதற்கு இந்த முறைமைகள்தயங்குவதில்லை. இதில் நகைச்சுவை என்னவென்றால் தன்னால் கண்டு பிடித்ததாக அறிவிக்கப்படும் அர்த்தங்கள் அதே கணத்தில் கலகலத்துப்போவதுதான் வரலாறு. அர்த்தத்தை கண்டுபிடிக்கத் திராணியுள்ளதாக நினைத்துக் கொண்ட இந்த முறைமைகள் தங்களது மாற்ற முடியாத விதிகளை பின்பற்றுமாறு அழைக்கும் போது மதிப்பீடுகள்கொண்டாட்டமாக அதை ஏற்றுக் கொள்கிறது என்பதை மேலே கவனித்தோம். (அவை இங்கு மீண்டும் பேசப்படவில்லை) ஆகவே மதிப்பீடுகளும் அர்த்தத்தை கண்டு பிடிக்க உதவும் முறைமைகளின்-விதிகளில் மிக முக்கியமான விதியான ஒரு முனை மாத்திரமே செயலூக்கமானது மற்றவை செயலூக்கமற்றவை என்பதை தனது காப்பாற்றப்பட வேண்டிய புனிதமாக வரித்துக் கொள்கிறது. குறித்த முறைமைகளினூடாக அர்த்தத்தை கண்டுபிடித்துச் சொல்ல முடியாது என்றாகிற போது-மதிப்பீடு என்ற வினையாற்றுதல் கொண்டிருக்கக்கூடிய அபத்தங்களை நம்மால் அறிய முடிகிறது. அப்படி என்றால் மதிப்பீட்டுக்கு மாற்றாக எதை முன்வைக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஆம் மதிப்பீட்டுக்குப் பதிலாக உரையாடலைமுன்மொழிகிறது பின் நவீன நிலவரம்.
(உரையாடல் என்ற சொல்லாடல் நமது சூழலில் பெரிதும் ஒருவழிச் செயற்பாடாகவும் பகிர்ந்து கொள்ளுதல் என்ற அடிப்படையில் ஒருவரிடமுள்ளதை மற்றவருக்குள் மாறிமாறிநிறைத்தல் என்றளவிலும் பயன்படுத்தப்படுவதை அறிவோம். உரையாடலின் குறித்த கணத்தில் எதிர்முனையிலுள்ளவரின் நோக்கம் என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கான கருவி என்ற அர்த்தத்திலுமே பயன்படுத்துகிறோம். ஒன்றை அறியும் முயற்சியில் பங்காற்றக் கூடிய ஆய்வுமுறை என்ற அடிப்படையிலே இங்கு சேப்படுகிறது என்பதை கவனிக்குமாறு வேண்டுகிறேன்.)
உரையாடல் என்பது இரு முனைகளிலுமுள்ளவர்கள்வைகள் செயலூக்கமுள்ளது மற்றவைகள் திருத்தப்படவேண்டியவைகற்கப்படவேண்டியவை வழிப்படுத்திக் கையாளப்படவேண்டியவை, பயன்படுத்தத்தக்கது போன்ற நிலைப்பாடுகளை நிராகரித்துவிட்டு சகலமுனைகளும் செயலூக்கமுள்ளவைகள்தான் என்கிறது. ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு அறிவு நகர்ந்து செல்கிறது என்றோ ஒரு முனை மாத்திரமே அவசியமானது என்றோ அவை அறிவிப்பதில்லை. உயர்வானதுxதாழ்வானது, தொழிலாளி ஒமுதலாளி, அறிஞர்xஅறியப்பட வேண்டியவர் போன்ற எதிர் முனைகளைக் கட்டமைப்பதற்குப் பதிலாகஅர்த்தத்தை கண்டுபிடிக்கும் வினைப்பாட்டிற்கு சகல முனைகளும் பங்காற்றுகிறது என அறிவிக்கிறது. அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதில் சகல முனைகளினதும் பங்களிப்பு இன்றியமையாது என்கிறது. இங்கு ஏற்றத்தாழ்வு என்பதற்குப் பதிலாக வித்தியாசங்களை முன்வைக்கிறது. ஒவ்வொரு முனையும் ஒவ்வொரு வித்தியாசமான பங்களிப்பை தன்னளவில் ஆற்றுகின்றன. இதில் ஏதொன்றும் பெறுமதிமிக்கதோபெறுமதியற்றதோவல்ல. அர்த்தத்தை கண்டுபிடிப்பதில் பங்களிப்புச் செய்யும் பன்மையான முனைகள் என்ற நிலைப்பாட்டை நமக்கு முன்னே விளையாட்டாக, கொண்டாடட்டமாக முன்வைத்தபடி இருக்கிறது.
மதிப்பீடு என்ற தரப்படுத்தலினூடாக ஏதோ பெருந்தொகை அர்த்தமுள்ளவைகள் கண்டுபிடிக்கப்பட்டனவெ¦னில், அதே அளவு பெருந்தொகை அறிவியல்கள் குப்பைக் கூடையின் பக்கம் அனுப்பப்பட்டது. அது மட்டுமன்றி ஒற்றை முனையின் புனிதம் என்றளவில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளையும் உரையாடல் கலைத்துப் போடுகிறது. உலக வரலாற்றில் குறித்த ஒரு பகுதியே ஏற்றுக் கெள்ளக் கூடியது என்ற வன்முறையின் நிலைப்பாட்டை பெரும் அறிவாக கொண்டாடுவதற்கு உரையாடல் தடையாக அமைவதை அறிகிறோம். அர்த்தத்தை கண்டடைவதற்கான உரிமை என்பது சிலருக்கே உரித்தானது என்ற நிலையை மாற்றிசகலரையும் அம்முயற்சிக்கு பங்காற்றியவர்களாக முன்னிறுத்துவதை அவதானிக்கலாம். இலக்கிய வன்முறை, பாசிசத்தனமாக மதிப்பீட்டு வினைப்பாடு என்பவையெல்லாம் நமக்கு நன்கு அருகிலிருந்து நமது தலைகளைக் கோதிக் கொண்டிருபப்பதை மறந்துவிட முடியாது. ஆகவே உரையாடல் என்கின்ற முறையின் இன்றைய தேவைகருதி அதன் பக்கம் நமது கவனத்தை செலுத்துவது என்பதை அறிமுகம் செய்வதுதான் இங்கு நிகழ்கிறது.
மதிப்பீடு என்பது அர்த்தம் கண்டுபிடிக்கக்கூடியது என்று தெளிவாகக் கூறுவதுடன் அது@ குறித்த முறை சார்பானதாகவும், குறித்த சிலருக்குரியதாகும் அறிவிக்குமெனில் உரையாடல் என்பது இல்லை அர்த்தம் கண்டுபிடிக்க முடியாதது. அதாவது நிலைப்பாடுகள், சூழல்கள், ஏனைய சந்தர்ப்பங்களுக்கேற்ப மாறக்கூடியது என்றும் இதில் வன்முறையற்ற வகையில் நம்மால் தேர்வு செய்யக்கூடியதன் அவசியத்தை பரிந்துரைத்த படியும் இருக்கிறது.
இதுதான் அர்த்தம் என முடிவுகளை அறிவிக்கும் மதிப்பீட்டுக்கெதிரே உரையாடல் தோன்றி மன்னிக்கவும் நீங்கள் சொல்லும் அர்த்தம் உங்களுக்குரியது உங்கள் நலன்பாற்பட்டது அதைவிட்டுவிட்டு அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கான செயலில் நம் எல்லோரினதும் பங்களிப்பு இருக்கிறது என குறுக்கீடு செய்கிறது. இதுகாறும், மதிப்பீடு, தரப்படுத்தல் அளவீடுகள் எல்லாம் உலாவந்த பாதைகளை திறக்க முடியாத படி அடைத்துவிட்டு உரையாடல் புதிய பெருவெளியைக் சுட்டிக் காட்டி அங்கே அழைக்கிறது.
மதிப்பீடு ஒரு முனையை செயலற்றது என்ற நிலையில் வைத்துப் பராமரிக்க முனைகிறதென்றால் உரையாடல் சகல முனைகளையும் செயலூக்கமுள்ளதும் பராமரிக்கும் தகுதிகொண்டதும் என்ற நிலைக்கு உயர்த்தி விடுகிறது. அர்த்தம் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது என்று முன்மொழியும் குழுவினதோநிறுவனத்தினதோதேசத்தினதோ நலன்களுக்குப் பின்னுள்ள அரசியலை மிக இலகுவாக அமைதிப்படுத்தி விடுகிறது. உரையாடல் சொல்கிறது அர்த்தம் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை, கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்றால் அதன் பின்னே நீசார்ந்த நலனின் பெருங்கனவு பல்லிளித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறதுஎனவே மறுமுனையிலிருக்கும் நான்என்பதும் செயலூக்கமுள்ள வினை செய் உயிரிதான் ஆகவே உனக்காகக்கண்டு பிடிக்கப்பட்டதாய் கருதும் அர்த்தத்தை தூக்கி குப்பையில் வீசிவிட்டு வாநாம் இருவரும் இணைந்து நமக்கான இருவருக்கும் பாதிப்பற்றதாகக் கருதத்தக்க, அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கான செயற்பாட்டில் நமது பங்களிப்பைச் செய்வோம். ஒரு சர்வாதிகாரியைப் போல் உனது அர்தத்தை ஏற்று நடக்கும் படி நான்என்ற முனையை பாவிக்கதே என அழைப்புவிடுகிறது.
நிலையான என்றென்றைக்குமான அர்த்தம் என்பதிலிருந்து சாத்தியமான, மாற்றக்கூடிய சாத்தியங்களையும் நமக்குப் பரிந்துரைக்கிறது. அர்த்தம் கையகப்படுத்தக்கூடியதல்ல. என்ற உரையாடலின் அறிவிப்பு நம்மை தேடலுக்குரிய முனைகளாக தகவமைப்பதை அவதானிக்கலாம். யாரும் அறிஞர் என்பதை மறுத்தொதுக்கிவிட்டு அறியும் பல வித்தியாசமான முயற்சியிலுள்ள முனைகள் தானே தவிர அறிந்த முனை என்றும் மறு முனை அறிவற்ற முனை என்றும் கருதப்பட்ட வரலாற்றை எள்ளி நகையாடுகிறது. மைய நீரோட்டத்தின் மிக முக்கியமான பண்புயாதெனில் எல்லாவற்றைப் பற்றியும் பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது என்ற எடுகோளை முன்வைத்து வினையாற்றத் தொடங்குவதுதான்.
அந்த அடிப்படையில்தான் மதிப்பீட்டு முறை என்பதும் அவசியமானது முக்கியமானது போன்ற நிலைப்பாடுகளை உருவாக்கி எல்லாவற்றின் மீதும் தமது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு ஏதுவாக அமைகிறது. இந்த அடிப்படையில்தான் இலக்கியப் பிரதிகளை ஆய்வுக்குட்படுத்தும் மதிப்பீட்டாளர்கள் எழுத்துக்கு முன் பரிதாபகரமாக நின்று கொண்டு சீறுவதும் ஓலமிடுவதும், அக்கறை கொள்வதும் புகழுவதுமாகும். இங்கு மதிப்பீடு மற்றும் அர்த்தத்தை கண்டுபிடித்தல் மாற்றுச் சிந்தனைகள் அலசப்பட்டு விடுவதால் மதிப்பீடு என்ற அம்சம் எந்த நிலைக்கு சென்றுவிடுகிறது என்பதை உணரலாம்.
மேலே நான் பேச முற்பட்டவைகளின் பிரதானமான அம்சம் எதுவென அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன. இருந்தும் ஒரு தகவலுக்காக சுருக்கிக் கவனிக்கலாம். மதிப்பீடு என்பதற்கு மாற்றாக உரையாடல் என்பதன் பக்கம் நாம் கவனம் கொள்ள வேண்டியதன் அவசியத்தைச் தொட்டுக் காட்டுவதுடன், மதிப்பீட்டின் நிர்கதியான, வன்முறையான வரலாற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதுமாகும். தமிழின் விரிந்த பரப்பிற்குள் மதிப்பீட்டுக்கு இருக்கும் முக்கியத்துவம் என்பது நாமறியாததல்ல. அதன் பயன்பாட்டால் புறமொதுக்கப்பட்ட ஒரு தொகைப் பிரதிகளும், பிரதியாளர்களும் வரலாற்றில் அத்துமீறிப் பங்கேற்கும் இன்றைய காலத்திலும், மதிப்பீடு என்ற தரப்படுத்தும் முறை கேள்விக்குட்படுத்தப்படாமல் இருப்பதையும் நாமறிவோம்.