சனி, ஜனவரி 28, 2012

கல்லுரன் கவிதைகள்


tho;it xU mofpa fdthfg; ghh;f;f Kay;gtd; ehd;
Vnddpy; ehDk; ,Wjpapy; xU fdT vd;gjhy;..

vdJ KjyhtJ ftpijj; njhFjp ntspf;Fs; ntsp vd;gJ vj;jid NgUf;Fj; njhpAk; vd;gJ vdf;Fj; njhpahJ. ftpijfSk; gz;lkhfpg;Nghd ekJ murpay; Roypy; ve;j Mf;fpukpg;Gf;Fk; Mshfhky; ehd; rpe;jidfisg; gjpg;gtd;.

,J 1999y; ez;gh; vOj;jhsh; ckh tujuhrh mth;fspd; cjtpapdhy; ntspaplg;gl;lJ. gy gj;jphpiffs; rQ;rpiffs; mf;ftpijfs; gw;wp Fwpg;Gfis ntspapl;L ,Ue;jd. vdpDk; mitfs; ehd; vjph;ghh;j;j msTf;F Ngrg;gltpy;iy mijapl;L ftiyg;gLtjpYk; mh;j;jkpy;iy. tho;f;ifapd; xt;nthU jsj;jpYk; VNjh xU tifapy; nry;thf;F Njitg;gLfpwJ. ftpijfSk; ntWk; gz;lkhfpg; NghFk; ,d;iwa fhyf;fl;lj;jpy; jd;id VNjh xU tifapy; epiyepWj;jpf; nfhs;s FOkr; nry;thf;F mtrpakhfpwJ. ehd;  vjw;Fk; vg;NghJk; nry;thf;if ehLtjpy;iy. ehbaJkpy;iy. 

-கல்லுரன்-

ஒரு ஜனவரி 22ம் நாள்...

இது உனது வாழ்வின் எத்தனையாவது
பக்கம்?
இது உனது பயணத்தின்
ஏத்தனையாவது மையில் கல்
படம் ஒன்று வரைந்தேன்
அப்புத்தகத்தின் நாற்பத்தைந்தாவது பக்கத்தில்

அடி வானத்துக்கு அப்பால்
ஒரு கடற்பறவை பறந்து கொண்டிருக்க
கீழே
கடலில் ஒரு தனித்த படகு மிதக்கிறது...

கடற்பறவை மேலே மேலே
உயரப்பறப்பது போலவும்
கடலில் மிதக்கும் அப்படகை
மிகக் கவனமாக
கண்டு கொள்ளாதது போலவும் ...


எதை நோக்கிப்பறக்கிறது
இப்பறவை
இலக்குகள் யாவும் தோற்றுப்போகும்
இப்பேரண்ட வெளியில்...

சுவடுகளுக்கு அப்பால்....


எவ்வித அறிவித்தலுமின்றி
ஏன் தோன்றினாய்
என் கண்ணாடி முன்னால்


நாம் எதிர் எதிர் நாற்காலிகளில்
அந்த அரண்மனையில்
அமர்ந்து உரையாடினோம்
தொடக்கங்கள் பற்றியும்
ஒவ்வொரு திசையை நோக்கி
நகர்கிறது நம் பயணம்
அப்பொழுது
அந்த வசந்த கால அழகிய அந்திவேளை
மெதுவாக நழுவிச் செல்கிறதே
நம் கால யன்னல்கள் ஊடாக
எனது முகம் உனக்கு முன்னால்


ஒரு ஒளியாகவும்
அம் மேசையிலிருந்து மீண்டும் மீண்டும்
எழுதிக் குவிப்பது
எனக்கான எந்த மடல்களை


அன்பே
முதலாவதும் இறுதியுமான
அம் முத்தத்தின் ஞாபகம்
ஒரு நதியாகப் பாய்கிறதே
எனது இருண்ட
இதயக் குகைக்குள்

நீ எத்திசையில்
நான் எத்திசையில்

கண்ணாடியில் உனது விம்பம்
தெரிகிறது யன்லின் வெளிப்புறம்
அழகழகான சிட்டுக் குருவிகள்
உனத குரலில் எதனை உரைத்தன
எனினும்
அதன் அர்த்தம் வேறொன்றாய்
தெரிகிறதே
அச் சொற்கள் உரைத்தது என்ன
அச்சொற்கள் கருதியது என்ன     

ஒரு பஸ்ஸில் அமர்ந்து
கண்ணாடி யன்னலூடாகப் பார்க்கிறேன்
சிட்டுக் குருவிகள் மீண்டும்
அக்கட்டிடத்து கூரை முகட்டில்
எதைப் பேசுகின்றன
அன்பே
இன்னும் நம்மை ஏதோ இணைக்கிறதே

உனக்கு நான் யார்

எனக்கு நீ யார்
உனது பெயருக்கு அப்பால்
எனக்குத் தெரிவன எவை
படம் ஒன்று வரைந்தேன்
அந்த இளமைப்பருவத்த
பசும் புற்கள் விரித்த
ஹேர்டன் சமவெளி மரங்களின் கீழ்
ஒரு அந்தி நேரத்து சிறு மழைத் தூறலில்


நாம் நடந்து செல்கையில்
உன் கைகள் என் கைகளை
உரசியதே எதுவாக இருக்கும்
விடைகள் இல்லாத
இப்படிக் கேள்விகள் அதிகம் என்னிடம்

படம் ஒன்று வரைந்தேன்
அச்சிட்டுக் குருவிகள் கீழிறங்கி
தானியங்களை மௌனமாகத் தேடுவன
பின்பு சிறகடித்துப் பறப்பன
வசந்த கால வருகையின்
சுவடு மட்டுமல்ல அது
இன்னும் அதிகம் இவை எனக்கு

புதை குழியில் மிஞ்சிக் கிடக்கும்
எலும்புக் கூடு மட்டுமா நான்

எனக்கும் எனக்கும்
இடையில்...

நான் அங்கு தோன்றியதும்
நீ அங்கு இருந்ததுவும்
ஒரு தற்செயல் நிகழ்வுதான்
நீயும் என்னைக் கண்டதுபோல...

 

சோகமும் இல்லாமல்
மகிழ்வும் இல்லாமல்
ஒரு மெல்லிய கொடிபோல
நீ வைத்திருந்த அம் மெல்லிய
புன்னகையுடன்
திரும்பியிருந்தேன் வெறுங்காலுடன்
மீண்டும் எனது வீட்டுக்கு...

 

சனங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட
இடங்களை விடுத்து
மனித மூச்சுப்படாத ஓரு
இடத்தை நோக்கிய
நம் பயணத்தில்
யாருமே வெற்றி கொள்ளாதபடி
எங்கோ ஒரு மூலையில்
நாம் தோன்றுப் போயிருந்தோம்...

 

வெற்றி தோல்வி என
நான்
பெயரிட்டுப் பார்க்கிறேன்
தோல்வியுறும் பொழுதெல்லாம்
முன்னறியா தொன்றையிட்டு
வெற்றி கொள்வது போலவும்
எங்கோ ஓரிடத்தில்
தோற்றுப் போவது போலவும்
நீதான் வந்து
கூறிவிட்டுச் செல்கி;றாய்;
என் கனவுகளுக்குள் வந்து...

 

எனக்கும் எனக்குமிடையிலான
சுவர்களுக்கிடையே
அவ்வப் பொழுது
துடைத்துக் கொள்கின்றேன்
எனது முகத்தை
ஒரு பூனையைப்போல...!