வியாழன், பிப்ரவரி 23, 2012

நிழல் தரும் வெய்யில்


சின்னப்பயல்

அழகர் ஆற்றில்
இறங்கும் திருவிழாவில்
காலில் மூங்கில்
வைத்துக்கட்டியிருந்தவன்
மாதிரி என் நிழல்
நீஈஈஈளமாகத் தெரியும்
காலை வெய்யில்

என் கால்களுக்குள்ளேயே
விழுந்து கொள்ளும் என் நிழல்
கழுதை கூடப்பொதி
சுமக்காத மத்தியான வெய்யில்

எம்பிக்குதித்து கைநீட்டி எக்கினாலும்
பிடிக்க முடியாத மேற்கூரையை
எளிதில் தொட்டுவிடும் என் நிழல்
மஞ்சள் நிற மாலை வெய்யில்

வெய்யிலின் அருமை
நிழலில் தான் தெரிகிறது.