ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

சி.மணி அவர்களின் கவிதை


கோணம்

நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்;
ஒரு கோணத்தில் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.
மேலும்
அலைவுகளைவிட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.