ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

லீனா மணிமேகலை -கவிதை


தலைப்பில்லாத கவிதை

சாதி இனம்
மதம் பகை
ஏதோவதொரு பெயரில்
எம் உடல்கள்
காலந்தோறும்
போர்க்களமாயின

காயங்கள் நாறும்
முலைகள் தோறும்
சிதைவுற்றழிந்த
கருப்பைகள் தோறும்
எமது மானுடத்தின்
வெற்றிக்கும் தோல்விக்கான
குறுதி தோய்ந்த
கொடித்தடங்கள்

போரில்
காணாமல் போன
தலைகளில் எல்லாம்
பறிக்கப்பட்டப் பூக்களின்
நீண்ட முடி

ஆயுதங்கள்
தீரும் பின்

யோனிகளற்றுப் போகட்டும்
பிரபஞ்சம்

வேட்டையாடுவதற்கும்
வேட்டையாடப்படுவதற்கும்
எந்த உயிருமின்றி
இடுகாடாகட்டும்