திங்கள், அக்டோபர் 08, 2012

சபரிநாதன் கவிதைகள்


ரொட்டியின் மனிதன் காத்திருக்கலாம்


இன்று வெள்ளிக்கிழமை

பாப்லோ நீங்கள் சிலியில்தான் இறங்கியிருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்

நீங்களே சொல்லியிருந்தீர்கள் இல்லையா

 கவிஞன்மீது இரக்கப்படுங்கள் என்ற உங்கள் வார்த்தை நினைவிருப்பதால்

அங்கிருந்து கிளம்புவதற்குமுன் கடல் பார்க்கும் அனுமதியை வழங்குகிறேன்

'ஒற்றை உயிர் ஒரு வருடல் மரணம் அல்லது உயிர்ப்பு' இவை போதும் கிளம்புங்கள்

நதி புரட்டிச்செல்லும் தூயகல்லாக

இருபத்தியொரு மணிநேரம் கற்பனை செய்துகொண்டால் வந்திறங்குவது இந்தியா

உங்களுக்கு ஞாபகமிருக்குமென நினைக்கிறேன்

எரிசிதையில் அலறி விழுந்த ஒரு பெண்ணை நீங்கள் எழுதியிருந்தீர்கள்

அதற்குப் பிறகு ஏராளமான கவிதைகளை தாங்கள் இழந்துவிட்டீர்கள்

உணர்ச்சிவசப்படாதீர்கள் பாப்லோ தயவுசெய்து உங்கள் பச்சை மைப் பேனாவை

கடலிலேயே விட்டுவரச் சொல்லவேண்டும் என நினைத்திருந்தேன்

உங்கள் மீதுள்ள பொறாமையில் கூறவில்லை.

கவிஞனின் சமூக அக்கறை எத்தனை சென்டிமீட்டர் இருக்க வேண்டுமென்பதில்

இன்னும் குழப்பம் நீடிக்கிறது பாப்லோ தவிர

இந்திய ரயில் சன்னல்கள் கவிதையை அடக்கத் தெரியாத சிறுபிள்ளைகள்

டெல்லிஇ மும்பைஇ பெங்களூர்இ சென்னை இவற்றுக்கிடையில் வெறும் கமா தான் இருக்கிறது

இப்போதுஇ நீங்கள் ஏறவேண்டியது வெள்ளையும் சிவப்புமான பழைய மயிலாப்பூர் பஸ்

'செர்ரி மரங்களோடு வசந்தம் என்ன செய்யவிரும்புகிறதோ

அதை நான் உன்னோடு செய்ய விரும்புகிறேன்' அல்லது

'காதல் சிறியது மறத்தலோ மிக நெடியது' இதுபோன்ற

ஒரு வரி ஒரே வரி போதுமானதுதான் தலைவா ஆனாலும் அமைதியாக இறங்குங்கள்

ஜிலேபி கோபுரங்கள் நினைவிருக்கிறதா

அதுபோன்றதொரு ஜிலேபி கோபுரத்தின் மூலையில்

ஒரு செத்த எறும்புபோல்தான் நான் இருந்துகொண்டு இருக்கிறேன்

நெரிசல் மிகுந்த வீதிகளில் கிடாரை உருவியெடுத்துப் பாடமாட்டீர்கள் என நம்புகிறேன்

உங்கள் வலதுபுறமிருக்கும் நீலநிற பதினோரு மாடிக் குடியிருப்பின் லிஃப்டிற்குள் நுழையுங்கள்

ஒன்பதாவது தளம் 56வதுஎண் இப்போது கதவைத் திறவுங்கள்

சுவிட்சைத் தட்டுங்கள் எல்லாவற்றையுந்தான்

சமையலறையில் மீன்வறுவல் இருக்கும் ஃப்ளாஸ்க்கில் காஃபி அடைத்துவைத்திருக்கிறேன்

ட்ரேயில் பிரிக்கப்படாத பத்திரிகைகள் இருக்கிறதா

(வரும்போது டேபிளில் (வுhந நளளநவெயைட நேசரனயஇ டீடைiபெரயட நனவைழைn  தேடியெடுத்துவைத்தேன்)

தயவுசெய்து பொறுத்துக்கொள்ளுங்கள் இதோ வந்துவிடுகிறேன்

களைத்துப்போயிருப்பீர்கள் தெரியும் தயை கூர்ந்து மன்னிக்கவும்

அன்பு பாப்லோ மிக்க நன்றி நானும் மனிதனாய் இருந்து களைத்துப்போய்விட்டேன்.



சுதந்திரம் ஒரு ஈ மொய்க்கும் பண்டம்


ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன்

ஒரு ஆப்பிளை விலையாகக் கொடுத்துதான் நாம் சுதந்திரத்தை வாங்கினோம்

பிறகொருநாள் நாம் நம் தந்தையிடம் ஒரு முத்தத்தைக் கேட்டதற்கு

அவர் அது அதில் இருக்கிறது என்றார்

பின்பு ஒரு தேநீர் விருந்து வேண்டுமென்று அடம்பிடித்தபோது

அதுவும் அதில் இருக்கிறது என்றார்

நாமெல்லோரும் ஒரே குரலில் பொய்தானே சொல்கிறீர் என்று இரைந்தபோது

அவர் ஒரு பொய் சொன்னார்


அதனால்தான் எழுதப்பட்டது சுதந்திரத்தை சபியுங்கள்


எந்த அற்புத விளக்கிற்காக என் எல்லா விரல்களையும் படையலிட்டேனோ

அது என்னை அநாதையாக்கி விட்டது


ஆகவே தான் ஒலித்தது சுதந்திரத்தை அஞ்சுங்கள்


தொலிசீவப்படாத சுதந்திரத்தின் எடையை சுமக்கத் தகுமா நம்மால்

நாம் எவ்வளவு நேர்மையாக அதை சரிசமமாகப் பங்கிட்டுக்கொள்ள எண்ணமிட்டோம்

பங்கிட்டால் மறைந்துவிடும் மாயக்கனியல்லவா அது


எனவேதான் எதிரொலித்தது சுதந்திரத்தை வஞ்சியுங்கள்


சமன்பாட்டில் ஓருறுப்பு நகரும்போது கழித்தலோ வகுத்தலோ நிகழ்ந்தாக வேண்டும்

ஒரு பெயர் இருந்தால் அப்படியொன்று இருந்தாக வேண்டுந்தானே

என்பதால்தான் திருத்தப்பட்டது சுதந்திரத்தை தடை செய்யுங்கள்


நேற்று அதிகாலை நடைப்பயிற்சிக்கு சென்றபோது

மருண்ட விழிகளோடு எல்லோரையும் நுகர்ந்தலைந்து தவறவிட்ட

யாரையோ எதையோ தேடித்திரிந்துகொண்டிருந்த நாய்க்குட்டியைக் கண்டவுடன்

அச்சத்தில் ஓடிப்போய் என் கூண்டுக்குள் நுழைந்து பத்திரமாகப் 

பூட்டிக்கொண்டேன் அதைச் சரிபார்த்தும் கொண்டேன்

ஆக