செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 4

31
மரங்கள் என்ன செய்கின்றன என்று வினவினார். நகர்ந்து செல்லுவதற்காக காத்திருக்கின்றன என்றேன்.அது எனது நெடுநாள் விருப்பமும்.

32
அந்தக் கனவு எனது துாக்கத்தைக் கொண்டுவந்து தரும் என நம்புகிறேன்.

33
தனது கண்களை மூடிக்கொண்டு காலத்தைக் குடித்து முடிப்பதற்கு, பூனையைப் போல ஒரு கடிகாரம் வேண்டும்.

34
அவளுடைய மனதிலிருந்து திரும்பி எங்கு சென்றார் என தெரியவில்லை.

35
அவளைப் பற்றி எழுதப்பட்ட கடிதத்தின் சொற்களினுள் அவனை மறைத்து வைத்திருந்தனர்.உதட்டுக்கு வெளியேதான் அதை உச்சரித்தாள்.

36
தனியாக இருக்க முடியவில்லை என்பதால்,தன்னை ஒரு காப்பி (copy) எடுத்து எதிரே இருந்த நாற்காலியில் உட்கார வைத்தாள். மாலை இனிதே கழிந்தது. பின் வீட்டுக்கு கூட்டிச் சென்றாள்.

37
மலைகளின் வடிவங்களை நடித்துக் காட்டியபடி மிதந்தது வானில் மேகங்கள்.

38
எழுத்துப் பிழையை சரி செய்தபோது, அதே பெயரில் வேறொருவர் அந்தக் கதைக்குள் வந்தார். திருத்தம் செய்யும்வரை கதையைக் காப்பாற்றி வைத்திருந்ததற்காக நன்றி மட்டுமே சொல்ல முடிந்தது.

39
கடும் குளிர்காரணமாக கற்பனை எங்கும் வெயில் ஏற்பட்டுள்ளது.

40
வயிறு ஒரு பெரும் இசைக்கருவி பசித்தாலும், பசி தீர்ந்தாலும் இசைத்துக்கொண்டே இருக்கிறது.