செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 3

21
வளைந்து நெளிந்து செல்லும் ஒளியின் மடிப்புக்களில் மறைந்திருக்கிறது என்னைக் கண்காணிக்கும் மனதின் வடிவம் கொண்ட பறவை.

22
அமைதியான இரவு. ஆனால், அதன் ஓலம் எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கிறது.

23
எனது படுக்கையறையை மிக அதிக காலம் அனுபவித்துவிட்டது இருட்டு.

24
ஆசையின் கீழ் சிறு நேரம் தங்கியிருந்தார். அது காதலைவிட வலிமையானதாக இருந்தது.

25
கடந்த காலத்தை ஐந்தால் பெருக்கினால் எதிர்காலத்தின் பாதி விடையாக வரும். நினைவு அப்படித்தான்.

26
துாக்கத்தை நீக்கிவிட்டால் காதல் எளிதானதாக மாறிவிடும்.

27
கடைசி நேரத்தில் அவள் நினைவுக்கு வந்ததால், மீண்டும் ஒரு முறை ஆரம்பத்திலிருந்து ஞாபகம் செய்து பார்க்க வேண்டும்.

28
நதியை யாரோ துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.

29
காலடிச் சுவடு ரகசியமாக நடந்து சென்று வீடெங்கும் உலவிவிட்டு பழைய இடத்தில் வந்து அமருகிறது. எந்த அடையாளமுமற்று.

30
இரவின் உள்ளடக்கத்தை மறைப்பதற்காகவே அனைவரும் துாங்குகிறார்கள்.