செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 9

81
மறந்துபோய் கொஞ்ச நேரம் மரத்தின் கீழ் துாங்கிவிட்டேன். வானில் வந்து நட்சத்திரங்கள் தவறு செய்கின்றன. ஆம், இரவு என அறிவித்து நீண்ட நேரம் துாங்கிவிட்டதாகச் சொல்கின்றன.

82
எனது இலக்கு நட்சத்திரங்களைத் துரத்திவிடுவதுதான்.
83
இழந்த சொற்களில்,
தினமும் ஒரு இருட்டு அறை கிடைத்துவிடுகிறது.

84
நேராக ஓடிச்சென்று கதைகளுக்குள் நுழைகிறது அந்த நதி.வாருங்கள் படகில் ஏறிக்கொள்வோம்.

85
கவிதைகளை வாசித்தால், உங்கள் பெயர் அழிந்துவிடும்

86
நிழல்களை முறித்துவிட்டுச் சென்றது பிந்தி வந்த காற்று.

87
சொர்க்கத்தின் கிழக்குப் பகுதியில் நான் வசிக்கமாட்டேன்.

88
பயணியைத் துரத்துகிறது குளிர்காலம்.

89
எனது தோட்டத்தில் நள்ளிரவு

90
கனவாகவும் இருக்கலாம் அருகில் சென்று பார்