செவ்வாய், டிசம்பர் 18, 2012

மிகுதியை எங்கு வாசிக்கலாம் - 8

71
மறந்துபோய் யாரும் நாக்கை விழுங்கிவிடாதீர்கள்.

72
எங்கும் துாரம்
73
வராதிரு

74
வேறு இடத்திற்கு மாற்று

75
மிகுதியை எங்கு வாசிக்கலாம்

76
கடைசியாக விழுந்த இலை
ஆகாயத்தில் இருக்கும்
காகங்களின் பாதைகளில் தங்கிவிட்டது

77
இரவுக்கு எந்த அர்த்தமும் இல்லை.அது வெறுமனே ஒரு நினைவுச் சின்னம்தான்.

78
இரவு தன்னுடைய நிறத்தை மாற்ற விரும்பினால்
பச்சை நிறத்தை தேர்வு செய்யட்டும்.

79
விளையாட்டை நிறுத்திய பின்,
பழைய இரவுகளில் நாய்களை போகவிடாதீர்கள் என்றனர் வாசகர்கள்.

80
எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் பழக்கமற்றதாகவே இருக்கிறது உலகம்.