புதன், டிசம்பர் 19, 2012

அவன் கேட்டபின்

றியாஸ் குரானா

எல்லா வீடுகளுக்கும் ஜன்னல் உண்டு
இது ஒரு தத்துவமல்ல.
அந்த ஜன்னல்
வீதியோரமாக அமைந்திருப்பதும்
அதைக் கடந்து செல்லும்போது
அழகான பெண் 
ஜன்னலில் தெரிவதும்தான் முக்கியமானது
ஆனால், நான் ஜன்னலில் நிற்கும்போது
ஒரு பெண் வீதியால் சென்றாள்
பல மாதங்களைக் கடந்தது.
பின் உறக்கம் வேண்டும்
உறங்கியதும் உடனே கனவும்
கனவில் அவளைச் சந்திக்கவும் வேண்டும்.
கனவில் ஒரு பெண்ணைச் சந்திப்பது எப்படி
என அவன் கேட்டிருக்கக் கூடாது.
பாருங்கள் இதற்குமேல்
எதுவும் சொல்ல முடியவில்லை.
எல்லா வீடுகளுக்கும் ஜன்னல்
இருக்கக்கூடாது.