புதன், டிசம்பர் 19, 2012

உபநதி

றியாஸ் குரானா

மறு கரைக்குச் செல்ல வேண்டும்
இடையிலிருந்த நதியைக் காணவில்லை
காத்திருக்கிறேன்
நதி வரவில்லை
எனக்கும் அவசரம்
படகில் ஏறி 
அச்சத்துடன் மறு கரையை அடைந்தேன்
அப்போதும் நதி வரவில்லை
உப நதியை உருவாக்கி மறுகரையை
அடைந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும்
சொல்ல விரும்புகிறேன்.
நதியைக் கடக்கும் வரை மாத்திரம்
ஓடக்கூடியதே உபநதி.