வியாழன், செப்டம்பர் 26, 2013

சும்மா பக்கங்கள் - ஒலகச் சாமான்

 எழுத்தாளர் பாம்பாட்டி எனது வலையில் எழுதும் புதிய தொடர் -
 ”சும்மா பக்கங்கள்”  இன்றிலிருந்து ஆரம்பமாகிறது. வாசிக்கத்தவறாதீர்கள். முசுப்பாத்தியில்லாதவர்களுக்கு வாசிப்பது கட்டாயப்படுத்தப்படுகிறது.

பாம்பாட்டி 

ஒலகச் சாமான். -

ரோட்டு அப்புடியே வெறிச்சிக்கிடக்கு. எந்த அசுப்புமில்ல.
ஒரு சுத்து சுத்தி பாக்குறார்.அப்ப ஷ்.... எண்டுக்கிட்டு வந்த காத்து காதுக்குள்ளால பூந்துக்கிட்டு போகுது. உம்மாவத்திங்க இதாண்டா சந்தர்ப்பம் எண்டுபோட்டு ரெடியாகிறார். அவர்ர நெடுநாள் சோட்ட இது எண்டு மறஞடசிருக்கும் நான் நெனய்கிறன். அது உணமயில்ல எண்டு பொறகுதான் தெரியுது. திரும்பியும் ரோட்ட ஒருதரம் சுத்திப்பாக்குறார். ஆருமே இல்ல. பக்கதுல நிண்ட மரத்துல மட்டும் எலய்கள் ஆடுது. முதலாவது தரம் பொளச்சிட்டுப்போல, திரும்பவும் சீச்சி .. திரும்பத் திரும்ப பலதரம் சிரிச்சுப்பாக்குறார். ஓ..இது வேறாளாக்கும் எண்டுபோட்டு உத்துப்பாத்தா அவர்தான்கா.. ஓம்.. ஓம்... அவர்தான்கா நம்முட ஒலகச் சாமான்.