வியாழன், செப்டம்பர் 26, 2013

ராமுவும் சோமுவும் - பேயோன்

(குழந்தைகளுக்கான கதை)

ராமுவும் சோமுவும் உயிர் நண்பர்கள். ஒருநாள் இருவரும் காட்டு வாக்கில் நடந்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு பயங்கரக் கரடி எதிரில் வந்தது. இருவரும் பயந்து ஓடத் தொடங்கினர். கரடி அவர்களை விடாமல் துரத்தியது. ராமு நண்பனை விட்டு ஒரு மரத்தின் மேல் ஏறித் தப்பித்தான். சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. காட்டாந்தரையில் படுத்துக்கொண்டு இறந்தது போல் நடித்தான். கரடி அவன் முகத்தருகே முகர்ந்து பார்த்துவிட்டுச் சென்றுவிட்டது. அது போனதும் மரத்திலிருந்து இறங்கிய ராமு, சோமுவிடம் “கரடி உன்னிடம் என்னடா சொன்னது?” என்று கேட்டான். அதற்கு சோமு சொன்னான்: “’ஏனப்பா, நீ ஏற மாட்டாயா மரம்?’”