திங்கள், நவம்பர் 18, 2013

ரீ மேக் கவிதை- ஈழத்தக் கவிஞர் சோலைக்கிளி

இந்த ரீமேக் கவிதையோடு சிறு விமர்சன நோண்டுதல் என்ற ஒருவகை பிரதி வாசிப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
சிறு விமர்சன நொண்டுதலில் அடைப்புக்குறிக்குள் இருப்பவை எனதாகும்,


1. ஒரிஜினல் வடிவம்.

பகுத்தறிவுத் தெருக்கள்

இரண்டொருநாள் நாங்கள் பிரிந்திருந்தோம்.
ஒரு நெடுந்தூரப் பயணம் நீ சென்றுள்ளாய் என்று
எனக்குத் தெரியும்.

நாங்கள் சந்திக்காத தினங்களில்தான்
எமது சமூகங்களுக்கிடையில்
திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்ப!

நமது நகரம்
மீண்டும்
தாலி அறுத்துக் கிடந்தது.

எப்போதுமே காற்றுக்கு பொய்சொல்ல ஆசைதான்!
அது பெருவிரலால் நடந்து
கண்டபடி தூவியது கதைகளை.

நகரத்தில்
சுவரொட்டிகளும், அவைகளைத் தாங்கிய பழைய மதில்களும்
அமைதியாய் இருக்க
மற்றெல்லாம் அதற்குச் செவிமடுத்து ஆடியதால்
தலைமயிரைக்கூட எழுப்பிவிட்டது
உணர்ச்சி!

இன்று
மூன்று தினங்களின் பிறகு
உன்னைச் சந்தித்தேன்.

நெடுந்தூரப் பயணத்தின் களைப்பை
உன்முகத்தில் கண்டேன்.

இருந்தாலும் நகரம் இயங்கவில்லை
அதன் நரம்புகளுக்கிடையில் தடைப்பட்ட இரத்தம்
இன்றும் சரியாகப் பாயவில்லை.

நாம் மட்டும் சினேகித்தோம்
அந்தப் பொது இடத்தில் நின்றபடி
உன் கடைச் சிப்பந்தியின் பொறுப்பில்லாத்தனம் பற்றி
கருத்துகளை வெளியிட்டோம்.

பழையபடி
உன்னோடு நானும்
என்னோடு நீயுமென
நாம் இருவரும் ஒன்றாக மனங்களுக்குள் காற்று
புகவிட்டுக் கதைக்கின்ற,
தினமும்
கைசூப்பும் அந்தப் பருவத்தை அடைகின்ற,
இடத்திற்க நாம் போக மறியலுண்டு.

தெருக்களுக்குத் தெரியும்
தூவானம் அடங்கும்வரை
அவைகள் தேடாது.

2. ரீ மேக் வடிவம்.

 பகுத்தறிவுத் தெருக்கள்இரண்டொருநாள் நாங்கள் பிரிந்திருந்தோம்.

ஒரு நெடுந்தூரப் பயணம் சென்றுள்ளாய் என்று தெரியும்.

சந்திக்காத தினங்களில்தான்
நமது சமூகங்களுக்கிடையில்
திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்ப!

நமது நகரம்
மீண்டும்
தாலி அறுத்துக் கிடந்தது.

எப்போதுமே காற்றுக்கு பொய்சொல்ல ஆசைதான்!
அது பெருவிரலால் நடந்து
கண்டபடி தூவியது கதைகளை.

சுவரொட்டிகளும், அவைகளைத் தாங்கிய பழைய மதில்களும்
அமைதியாய் இருக்க
மற்றெல்லாம் அதற்குச் செவிமடுத்து ஆடியதால்
தலைமயிரைக்கூட எழுப்பிவிட்டது
உணர்ச்சி!

இன்று
மூன்று தினங்களின் பிறகு
சந்தித்தேன்.

நெடுந்தூரப் பயணத்தின் களைப்பை
முகத்தில் கண்டேன்.

இருந்தாலும் நகரம் இயங்கவில்லை
அதன் நரம்புகளுக்கிடையில் தடைப்பட்ட இரத்தம்
இன்றும் சரியாகப் பாயவில்லை.

நாம் மட்டும் சினேகித்தோம்
பொது இடத்தில் நின்றபடி
உன் கடைச் சிப்பந்தியின் பொறுப்பில்லாத்தனம் பற்றி
கருத்துகளை வெளியிட்டோம்.

பழையபடி
நாம் இருவரும் ஒன்றாக மனங்களுக்குள் காற்று
புகவிட்டுக் கதைக்கின்ற,
தினமும்
கைசூப்பும் பருவத்தை அடைகின்ற,
இடத்திற்க நாம் போக மறியலுண்டு.

தெருக்களுக்குத் தெரியும்
தூவானம் அடங்கும்வரை
அவைகள் தேடாது.

சிறு விமர்சன நோண்டுதல்.

பகுத்தறிவுத் தெருக்கள்இரண்டொருநாள் நாங்கள் பிரிந்திருந்தோம்.

( இரண்டொருநாள் நாம் பிரிந்திருக்கிறோம்)

ஒரு நெடுந்தூரப் பயணம் நீ சென்றுள்ளாய் என்று
எனக்குத் தெரியும்.

நாங்கள் சந்திக்காத தினங்களில்தான்
எமது சமூகங்களுக்கிடையில்
திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்ப!

(நாம் சந்திக்காத தினங்களில்தான்
நமது (எமது) சமூகங்களுக்கிடையில்
திரும்பவும் தலையிடியும் காய்ச்சலும் வந்தன நண்ப!)

நமது நகரம்

மீண்டும்
தாலி அறுத்துக் கிடந்தது.

எப்போதுமே காற்றுக்கு பொய்சொல்ல ஆசைதான்!
அது பெருவிரலால் நடந்து
கண்டபடி தூவியது கதைகளை.

நகரத்தில்
சுவரொட்டிகளும், அவைகளைத் தாங்கிய பழைய மதில்களும்
அமைதியாய் இருக்க
மற்றெல்லாம் அதற்குச் செவிமடுத்து ஆடியதால்
தலைமயிரைக்கூட எழுப்பிவிட்டது
உணர்ச்சி!

இன்று
மூன்று தினங்களின் பிறகு
உன்னைச் சந்தித்தேன்.

( மூன்று தினங்களுக்குப் பிறகு சந்திப்பது ”உன்னை” என்று யாரை சுட்டுகிறதோ அவருக்கும் ”மூன்று தினங்களால் சந்திப்பது”தெரியும் என்பதால் இது தேவைதானா? மேலே ”இரண்டொரு தினங்கள் பிரிந்திருந்தோம்” என சொல்லப்பட்டு விட்டதாலும் இது தேவைதானா?)
நெடுந்தூரப் பயணத்தின் களைப்பை
உன்முகத்தில் கண்டேன்.

(நெடுந்துாரப் பயணம் 2 முறை வருகிறது, போனது நெடுந்துாரப் பயணம் என்று தெரிகிறது. களைப்பைக் முகத்தில் கண்டால், அது நெடந்துாரப் பயணத்தினுடையது என இலகுவாகப் புரிந்துகொள்ள முடியும் என்பதால் ....)
இருந்தாலும் நகரம் இயங்கவில்லை
அதன் நரம்புகளுக்கிடையில் தடைப்பட்ட இரத்தம்
இன்றும் சரியாகப் பாயவில்லை.

நாம் மட்டும் சினேகித்தோம்
அந்தப் பொது இடத்தில் நின்றபடி
உன் கடைச் சிப்பந்தியின் பொறுப்பில்லாத்தனம் பற்றி
கருத்துகளை வெளியிட்டோம்.

(கடைச் சிப்பந்தியை முதலாளியிடம் கூட்டிக்கொடுத்தல் அல்லவா இது. விளிம்பு நிலை தொழிலாளியை போட்டுக்கொடுப்பது சரிதானா? இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் சந்தித்துக்கொண்டவர்கள், வேறு எதையும் பற்றி பேசிக்கொள்ளவில்லை பாருங்கள். இது ஒரு ஆச்சரியமான விசயம்தான். இண்டண்டைக்கு உழைத்துச் சாப்பிடும் கூலித்தொழிலாளியை கழிவியிருக்கிறார்கள். இதை விரிவாக எழுதவில்லை நீங்களே வாசித்துப்பாருங்கள்)

பழையபடி
உன்னோடு நானும்
என்னோடு நீயுமென
நாம் இருவரும் ஒன்றாக மனங்களுக்குள் காற்று
புகவிட்டுக் கதைக்கின்ற,
தினமும்
கைசூப்பும் அந்தப் பருவத்தை அடைகின்ற,
இடத்திற்க நாம் போக மறியலுண்டு.

(இன்று சந்தித்துக் கதைத்தாலும், பழையபடி சினேகமாக இருக்கவில்லை ஒருவரையொருவர் சந்தேகத்தோடு  சந்தித்தோம், பேசினோம்)

தெருக்களுக்குத் தெரியும்
தூவானம் அடங்கும்வரை
அவைகள் தேடாது.