ஞாயிறு, ஜனவரி 26, 2014

கவிதை - மணிவண்ணன் வெங்கட்சுப்பு

ஒவ்வொரு நாளும்
ஒரு ஊரில் ஒரு ராஜா என்றே
கதைகளை ஆரம்பிப்பாள்
அவள் கதைகளில்
இராஜாக்களுக்கு பஞ்சமில்லை
இன்னும் சொன்னால்
அவள் சஞ்சரித்த பிரதேசங்களில்
இராஜாக்கள் மட்டுமே
இருப்பார்கள் போலும்
எல்லா இராஜாக்களுமே
அவள் விரும்பியோ விரும்பாமலோ
அவள் அறைக்குள்
ஒரு முறையேனும்
வந்து செல்கிறார்கள்
இருப்பினும்
அவள் ஒருமுறையேனும்
கடைசி குடிமகளாகிய
என்னிடம் மொழிபெயர்த்ததில்லை
நீண்ட இரவுக்குள்
கறைந்து போன அவர்களின் மொழிகளையும்
அதிகாலையில் கனத்துக்கிடக்கும்
அவள் கண்களையும்...