பெயரிடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெயரிடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 19, 2012

பெயரிடல்

றியாஸ் குரானா

சந்தேகத்திற்கு இடமின்றி
கொலை ஒன்றுக்கான ஒத்திகைதான்
அவனுடைய மரணம்
நான் பார்த்தபோது
போர்வையில் இன்னும் மீதமிருந்தது
அவனுடைய துாக்கம்
நிச்சயமாக அவனை ஏமாற்ற முடியாது
அவன் மரணித்திருந்தாலும்
பிறகொருநாள் கொல்லப்படுவான்
அதன் பின் அவன் உறங்கப்போவதில்லை
நிரந்தரமாக அந்த அறையில்
விழித்திருப்பான்.
செல்லமாக பேய் என்று
அழைப்பீர்கள்.
மறு ஒளிபரப்பிற்காக பரிந்துரைக்கப்படும்போது,
அதைக் காதல் என்று அழைப்பர்.