பேரழுகையின் உப்பு நதியில்
வழி தவறிச் சேர்ந்த
பாய்மரத்தில் நான்
இந்தப் பாய்மரம் பல நூற்றாண்டுகளாகக்
கரை தொட்டதில்லை
என்னைக் கடந்து செல்லும் பறவையே
உனது கேவல் எதற்காக
தரைதொடாத உனது பயணமே
எனது பாய்மரத்திற்கு வழிகாட்டலாய் அமைய
என்னைக் கடந்து செல்லும் பறவையே
எனது கால்களுக்குக் கீழேயும்
தலைக்கு மேலேயும்
விரிந்து நீளும் நீல நதிகள்
யாரின் பேரழுகையில் நாம்
மிதந்து செல்கிறோம்
நூற்றாண்டுகளாக.
நவீனத்துவத்துக்கு பிறகான கவிதைகளின் ஆற்றலை கவனிக்கச் செய்த கவிதைச் செயற்பாட்டாளர்களில் இவர்களும் அடங்குவர்.
வழி தவறிச் சேர்ந்த
பாய்மரத்தில் நான்
இந்தப் பாய்மரம் பல நூற்றாண்டுகளாகக்
கரை தொட்டதில்லை
என்னைக் கடந்து செல்லும் பறவையே
உனது கேவல் எதற்காக
தரைதொடாத உனது பயணமே
எனது பாய்மரத்திற்கு வழிகாட்டலாய் அமைய
என்னைக் கடந்து செல்லும் பறவையே
எனது கால்களுக்குக் கீழேயும்
தலைக்கு மேலேயும்
விரிந்து நீளும் நீல நதிகள்
யாரின் பேரழுகையில் நாம்
மிதந்து செல்கிறோம்
நூற்றாண்டுகளாக.
நவீனத்துவத்துக்கு பிறகான கவிதைகளின் ஆற்றலை கவனிக்கச் செய்த கவிதைச் செயற்பாட்டாளர்களில் இவர்களும் அடங்குவர்.