வியாழன், செப்டம்பர் 17, 2009

மறுத்தோடியின் துன்பியல் நாடகீயம் -01
மஜீத்
திரையரங்கில்;
திரையில் பதுங்கியிருந்த வெளிச்சம்;
கண்களை நோக்கிப் பாய்ந்ததும்
திரையரங்கிலிருந்து ரசிகர்களை காப்பாற்றி
தப்பித்து ஓட வைத்த, அல்லது தப்பித்து ஓடவைத்துக் கொண்டிருக்கும்
ஆரம்பக் காட்சி.

திரை இருண்டு கிடந்தது வயல் வெளிகளில் நடந்து வரும் சத்தம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பான காலத்தின் அர்த்தமாய்ப் பெருக்கெடுத்தது. உடலைக் கூர்ந்து உரசிக் கொண்டுமிருக்கிறது. சப்த்தத்தின் குறிப்புகளை உடைத்துக் கொண்டு, உடலுக்குள் இறங்கத் தொடங்கியது. அப்போது தான் திரையில் பதுங்கத் தொடங்கியிருந்த வெளிச்சம் கண்களை நோக்கிப் பாய்ந்தது.

இத்தனை நிகழ்விற்கும் பிறகுதான், திரைப்படத்தின் பெயரை காணவும் முடிந்தது. அதற்குக் கீழே ஒரு குழந்தை உட்கார்ந்திருந்தது. அருகில் எழுதப்பட்ட வாசகம் ஒன்று தளம்பிக் கொண்டிருந்தது. இதை பிழையாக அர்த்தப்படுத்திக் கொண்டோமோ, என்ற அச்சம் பின் திரையரங்கில் அலைவுற, ஒவ்வொருத்தரும் உரத்த குரலில் பேசி சரிபார்த்துக் கொண்டனர். அவர்கள் சரி பார்த்ததற்கிணங்க ஒத்துப் போகும், ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தனர். அந்த வாசகம் தான், பார்க்கவிருந்த திரைப்படத்தைப் பற்றிய எழுத்தோ, பேச்சோ எதுவென்றாலும், அதற்குப் பிறகு மொழிக்கு இடமேயில்லை.

மொழியற்ற ஒரு வெளியில் நிகழும் ஒளிகளின் நாடக நிகழ்விலும், வர்ணங்கள் உயிர் கொண்டெழுந்து சீறியும், கலைந்தும் பெருகும் நிறங்களின் உடல் வேட்கைகளினையும், சப்தங்கள் வழிவதும், பெருக்கெடுத்து ஓடுவதும், ஒன்றின் மீது ஒன்று குவிந்து ஊடுருவிபாயும் நடகங்களும், அமைதிவானத்தைப் போல திரும்பும் திரையெல்லாம் விரிந்து கொண்டு செல்லுவதுமாய் இருந்தது. இத்திரைப்படத்தின் கதையாடல், திரைப்படம் பற்றிய எனது வாசிப்பை மொழிக்குள் நிறைக்கும் எனது காட்சிக்குமுன், அதுபற்றிய குறிப்புகளைக்கவனிப்போம்.

திரைப்படத்தின் பெயர் :
சிறுவர்களை வேட்டைக்கு அமர்த்தாதே.

தயாரிப்பு : மறுத்தோடி

சப்தப்பெருக்கமும், கலைவடிவமைப்பும், கவிதையும், கதையும், நேர்காணலும், குறிப்புகளும்:- மறுத்தோடி

வர்ணங்களின் மொழிப்படுகை :
மறுத்தோடியின் எண்ணங்கள்.

இதுவரையில் திரையில் தோன்றிய குழந்தை தொடர்பிலான தகவல்கள் எதுவுமேயில்லை. நாளை நிகழப்போவதையும், நேற்று நடந்து முடிந்ததையும், திரை வெளியில் நடந்து கொண்டிருக்கும், நிறங்களின் ஆதி வாக்கியம், மற்றும் சப்தத்துக்கும், நிசப்தத்துக்குமிடையிலான காதல், நிலாக்காட்சி, இவைகளுக்குப் பின்னே - நிறங்கள் தமது உடலைக்கிழித்து திரையெங்கும் வர்ணங்களை வீசிக்கொண்டிருக்கிறது.

பெருஞ்சனக்கூட்டத்தின் இடையே நிசப்தம் வெடித்துச் சிதறியது. சனங்கள் உடல்கள் விழ விழ தப்பியோடிக் கொண்டிருந்தனர். எவராலும் அந்த இடத்தைவிட்டு நகரமுடியவில்லை. ஓடித்தப்பிவிட்ட பிறகும், மீண்டும் அவர்களே பெருக்கெடுத்து குருதியை வடித்துக் கொண்டிருக்கின்றனர்.
குறி சொல்லிகள், மந்திரவாதிகள், சாத்திரவான்கள், இப்படி வினோதகர்கள் தங்களுடைய மொழிவிளையாட்டுக்களையும், தந்திரோபாயங்களையும், மறுத்தோடியின் பிரதியிலிருந்தே குறிப்பெடுத்துக் கொள்வதாக அறிந்தபோது, பிரதியை ஆய்வு செய்வதில் அவர்களுடைய உதவிகளும் கோரப்பட்டன.

அவர்களுக்கும் ஒவ்வொரு முறையும் வௌ;வேறு நிலக்காட்சிகளையும், மனவெளி அரசியலையும் வெளிப்படுத்துவதனூடாக புனைவின் இருள், பயணத்தை மாத்திரமே கற்றுத்தருகிறது. இது எதுவித அர்த்தங்களையும் எமக்கு புலப்படுத்துவதுமில்லை என்ற முடிவுகளே கிடைத்தன.

ஆனால் நாங்கள் பிரதிக்குள் நுழைந்து புனைவு வெளியையும் கடந்து, சத்தங்கள் நிரம்பிய ஒரு சிறிய காட்டை அடைந்தபோது, சில வண்ணத்துப்பூச்சிகள் எமக்கருகில் வந்து பேசுவதைக் கேட்டிருக்கிறேன். இது ஒரே ஒரு வாக்கியம்தான். இதைத்தவிர வேறு எதையும் நான் கேட்டிருக்கவில்லை.

பரிசோதனைக் கூடம் உயிர்த்தெழுந்தது,: பரபரப்பில் அழகியலின் வர்ணங்களை பூசத்தொடங்கியது. மொழியின் வன்முறைபற்றி உரையாடவரலாம் என்பதுதான் தோன்றி மறையும் வண்ணத்துப் பூச்சிகள்.

பிரதிக்குள்ளிருந்து வெளியே கொண்டுவந்தடையும், இந்த தடையத்தை வைத்துக் கொண்டு, ஆய்வைத் தொடங்குவதென்றால் இன்னும் பலசிக்கல்களை அது உருவாக்கிவிடும். இது தவிர ஆய்வை திசைதிருப்பும் உத்தியாகக்கூட இந்தப் பிரதிகள் இருந்திருக்கலாம். அல்லது ஒரு மர்மதடயமாகக்கூட அனுப்பியிருக்கலாமென்று சந்தேககங்களும் எழும்பத் தொடங்கின.

பிரதிகளிலிருந்து முதல் முதலாக ஒரு நாய் பாய்ந்தது. பிறகு ஆயிரம் நாய்கள் பரிசோதனைக் கூடத்தின் ஜன்னல்கள் வழியாக வெளியேறி மறைந்தும் விட்டன. எழுத்துக்கள் தமது நிலத்தை விட்டு வெளியேறி ஆய்வுகூடச் சுவரில் தன் பாட்டுக்கு நடமாடிக் கொண்டும், அர்த்தங்களை சுழற்றி தரையில் வீசியடித்த படியுமிருந்தன.

வெளியே சென்ற சில பறைவைகள் நீரருந்திவிட்டு வந்து, முற்றத்தில் புழுக்களைக் கொத்திக் கொண்டிருந்தன. ஆளரவற்ற பிரதிகளாக மிக அமைதியாக பிரதிக்குள்ளிருந்து காடு உறங்கிக் கொண்டிருக்கிறது. சிறு அசைவுமற்று ஒரு சித்திரத்தைப்போல சித்திரப் பிரதியை கண்ணாணிக்கும் உபபிரதியாக சில வேளைகளில், மொழியைப் பயன்படுத்தியிருக்கலாம். மொழியின் பின்னாலே அலைவுற்று தவறான திசையை நோக்கி ஆய்வை வளர்த்துச் சென்று விட்டோமா ? என்ற அச்சங்கள் மேலோங்க - பிரதி சித்திரக்களமாக வாசிக்கப்படும் முயற்ச்சிகள் மும்மூரமாகயிருந்த வேளையில், காடுகள் அசையத் தொடங்கியது, மிருகங்கள் பெருக்கெடுத்து விரட்டத் தொடங்கியது, கடைசியில் ஆய்வுகள் இடை நடுவே நிறுத்தப்பட்டதாக ஆய்வுகூட அறிக்கையில், 1214பக்கங்களைக் கொண்ட அறிக்கை சொல்கிறது. இந்த அறிக்கையில் சில பிரதிகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை உங்களுக்காகச் சொல்கிறேன்.

எனது கைவசம் அந்த அறிக்கை இப்போது இல்லாததால் நினைவிலிருப்பவைகளைத் திரட்டித்தருகிறேன்.; இதில் எனது சேர்ககைகளும் இடம் பெறலாம். அப்படி எனது மொழிப்புனைவு நுழைந்தாலும் அந்தப் பிரதிகள் கலக்கமடைந்து போவதுமில்லை, என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்ன தான் செய்தாலும் அந்தப் பிரதிகள் தனது கொண்டாட்டத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன.

எனக்கு அந்தப் பிரதிகளைப்பற்றி தெரிந்தளவில் மொழி மூலம் உருவாக்கப்படும் நிலக்காட்சியிலோ? பிரதி மூலம் கட்டமைக்கப்படும் மொழி வெளியின் புனைவு நிலப்பரப்பிலோ? தப்பித்தவரி சிக்கிவிட்டால், அதன் விதிமுறைகளுக்கும், முறையற்ற விதிகளுக்குமிடையே அலைக்களிக்கப் படுவதைத்தவிர வேறு இன்பம் கிடைப்பதில்லை.


பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கிவிட்டனர். பேசப்படமுடியாத அர்த்தங்களின் பன்மையான கட்டமைப்புக்களை அவனது ஏற்கனவே பல வீனமான உடலுக்கெதிரே நிறுத்தி - வன் முறையின் முற்றுகைக்குள் கண்காணிக்கத் தொடங்கிவிட்டனர்.

புனைவாலானது உலகு என்று, அவனுடைய ஒரு பிரதி பேசிய சில நாட்களுக்குள்ளாகவே கைது செய்யப்பட்டான். அந்தக் கூட்டத்தினர் முயற்சித்தது போல தண்டனைகளோ, சிறைப்பிடிப்புகளோÉ செய்ய முடியாமல் போய்விட்டது. இது தொடர்பான பல நேர்காணல்கள் சிறு பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சிக்காக நேர்கண்டதும் நான் தான். அதுதான் இன்றுவரை மிகப் பிரசித்தமானது. அந்த நேர்காணலையும், உங்களுக்காக பின்னர் தருகிறேன்.

அதற்கு முன் ஆய்வு அறிக்கையில் சப்தம் சீறியெழுந்து நட்சத்திர ஒளிக்குடுவைகளில் நிரம்புகின்றன. சப்த்தமாய் வானம் அதிரத்தொடங்கியது. வர்ணங்கள் பூச்சிகளாகி வானின் நிறத்தை உறுஞ்சும் சப்த்தம் பூமியில் நீந்திக் கொண்டிருக்கும் நிறமற்ற குருதியை துள்ளி நடனமாடவைத்தபடி இருக்கின்றன. வர்ணங்கள் நிறத்தைÉ உடையைப்போல மாற்றத்தொடங்கியபோது, சப்த்தத்தின் கண்ணீர்த் துளியிலிருந்து பிறந்த மிக மெல்லிய சுகம் வளரத்தொடங்கியது. நிறங்கள் தம்மை அழிக்கும் ஒவ்வொரு இடத்திலும், வெடித்த சப்தம் பல வகை சப்தங்களாகி கொதிக்கத் தொடங்கின.

கொதித்துக் கொண்டிருந்த சப்தங்களுக்கிடையே நுழைந்த நிசப்தத்தின் சிறகுகள் பறந்து பறந்து அமைதிப்படுத்திக்கொண்டிருந்தன. சப்தத்தின் உடல்களின்மீது வேட்கை கொண்டு நுழைவதும் பரவுவதுமாய் நடிக்கத்தொடங்கின. நிசப்தத்துக்கு வெளியே கடல் அடிகளுக்கு அப்பால் வர்ணங்களுக்குள் சப்தங்கள் பதுங்கத் தொடங்கியதிலிருந்து நிசப்தம் பேரிரைச்சலாய் கிழம்பி வானத்தை உலுக்கி கடலைப் பேசவைக்க முயற்சித்தன. கடைசியில் திரையரங்கு தனிமை என்ற பன்மைகளாக நிசப்தம் இறையத் தொடங்கியது.

திரையரங்கை விட்டு வெளியேறும் போது சிலர் நிசப்தங்களுடனும், சிலர் வரணங்களுடனும், சிலர் சப்தங்களின் ஆரவாரத்துடனும் அவர் அவர் பாதையில் நாடகத்தை நிகழ்த்திக்கொண்டு சென்றனர். வெளியோடும், நுண்வெளி பெருகும் பொருட்களோடும், அலையும் அர்த்தங்களை அதன் வெள்ளப் பெருக்கை தடுக்க முடியாமல் மூழ்கிக்கிடக்கும் மொழியில் நிறப் பரப்புக் காட்சிகளோடு மோதும்களமாக அந்தத்தீவு கட்டமைக்கப்பட்டிருந்தன.

திரை அரங்கிலிருந்து வெளியேறிய மனித உடல்கள் மொழியின் கடற்பரப்பில் வீழ்ந்து மாய்கின்றன. பெருகிப்பெருகி வானில் விரியும் அர்த்தங்களை சொல்லத்தொடங்குகின்றன. உடல்களின் பெருக்கத்தாலும், அதன் அழிவுகளாலும் மிதந்து மிதந்து காற்றில் ஏறிச்செல்கிறது தீவு.

திரைக்கு வெளியே திரையின் நாடக வெளி அநாயாசமாக திகழ்கிறது. இப்படி மொழியையும் அர்த்தங்களையும் அழிக்கும் அதிபயங்கர திரைப்படத்துக்கு தடைவிதிக்கப்படுகிறது. தீவுக்கு வெளியே பரவாமல் தடுக்கும் முயற்சிகள் மறைவில் ஆட்டத்தை ஆரம்பிக்கத்தொடங்கியது.

தீவுக்குள் நுழைந்து நிலைமையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும்É அர்த்தங்களையும் மொழியையும் காப்பாற்றுவது தொடர்பாகவும், தந்திரோபாயங்கள் வரைபடங்களாக பலருடைய கைகளில் கிடைக்கின்றன, ஆரம்ப நடவடிக்கையாக அந்த திரைப்படத்தை நெறிப்படுத்தியவரைப்பற்றிய தகவல்கள் சூடான விவாதங்களாக வலைத்தளங்களிலும் நிழழத் தொடங்குகின்றன.

அந்த பயங்கர திரைப்படத்தின் நெறியாளர்É உடல் வெளியின் அரங்காகவும், புனைபரப்பை நாடக வெளியாகவும் கொண்டு வாழ்பவர். மொழியோடு இவருக்கு ஆரம்ப நாட்களிலிருந்த நெருக்கம் சொற்களை வளர்ப்பதிலும், அர்த்தங்களுக்கு சேவகம் செய்வதிலும் அவர் கடத்திய காலங்களை கணக்கிட்டால் தெரியக்கூடியதுதான்.


பிரதிகளை சித்திரப்படுத்துவது, உப பிரதிகளை மொழியின் கடைசி அறைவரை சென்று அழைத்து வருவதுÉ இருண்ட வனங்களுக்குள்ளும், குகையிருட்டினுள்ளும் கிடந்த அர்த்தங்களை கொண்டு வந்து ஆசிரமத்து வாழ்வழித்தது வரை - அவரது பங்களிப்புக்களாக கணிக்கப்படுகிறது. அதே நேரம், இலையை கொலை செய்தது, சுள்ளிக்காட்டுக்கும் - செம் பொடையனுக்குமிடையே முரண்பாட்டை உண்டு பண்ணி இரண்டாகப் பிரித்தது, மொழியின் கண்காணிப்பு படையினர் தேடிக் கொண்டிருக்கும் குற்றவாளியாகிய கதையாண்டிக்கு தஞ்சம் கொடுத்து மறைத்து வைத்திருப்பது போன்ற செயல்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்டு தேடப்பட்டும் வருபவர், என்ற தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெற்றிருக்கின்றன. கடைசியாக உங்களுக்குள் பரவி விடப்பட்ட அழிவின் முக்கிய செயற்பாடாகிய திரைப்படம்தான். அவருக்கு கிடைப்பதற்கிருந்த மன்னிப்பின் இறுதிச்சொல்லையும் அழித்துவிட்டது.

அவருடைய ஒரு பிரதிக்குள் கதை சொல்லியாக செயற்பட விரும்பும் ஒருவரை தொலைத்து விட்டது நீங்கள் அறிந்த விடயம்தான். அது தவிர சில பிரதிகள் இன்னும் ஆய்வு கூடத்திலிருந்து வெளியேறாமல் கிடப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். பரிசோதனை கூடத்தின் ஆய்வு விதிகளுக்கு இசைய மறுத்துக் கொண்டே இருக்கின்றன. புதிய புதிய ஆய்வு முறைகளை கண்டுபிடித்து செயற்படும் போதும் அர்த்தங்களைப் புரட்டிப் போட்டபடி நழுவத் தொடங்கிவிடுகிறது. ஆய்வு முடிவை அடைவதற்கு மிகச் சில நிமிடங்களே அல்லது கடைசிச் சொல்லே இருக்கும் நிலையில, பிரதிக்குள்ளிருந்து யாராவது குரலெழுப்பி குறுக்கீடு செய்யத்தொடங்கி விடுகின்றனர். இப்படி முடிவு வரை சென்று சோர்வடைந்த சந்தர்ப்பங்கள் அதிகம். ஆய்வு விதிகளை திண்டாடச்செய்யும் உப பிரதிகள் பெருக்கெடுத்தபடி அமையும் அர்த்தங்களை உடைய அந்த மொழி சில நேரங்களில் மொழிபோலும் தோன்றுவதில்லை. அர்த்தமற்ற மொழியாகவோ! அல்லது மொழியற்ற அர்த்தங்களாகவோ! தானாகவோ! உற்பத்தியாகி அழிந்து கொண்டிருப்பது மாதிரியும் தோன்றுவதுண்டு. சில வேளைகளில் மிகத்தீவிரமாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆய்வாளர்களுக்கு ஒரு மர நிழல் போலவும் அமைவதாக பேசப்படுவதும் உண்டு.

டடட

உப இணைவு - 01
மறுத்தோடியுடனான நேர்காணலை பின்னூட்டமாகப் பார்த்தால்;

எந்தப் பதிலுக்கும் பின்னேயும் ஒரு கேள்விக் குறியைப் போட்டு விட்டால் அது கேள்வியாகவே மாறிவிடும். ஆகவே பதில்கள் கூட கேள்வியை உற்பத்தி செய்வதற்கான ஒரு முயற்சிதான்

கேள்விகள் - பெ. வெ. சாமிகள்
பதில் - மறுத்தோடி

அரசியலை எழுதுதல், எழுத்துக்கள் அரசியலைக் கொண்டிருத்தல், ஒரு குறித்த அரசியலின் பக்கம் நின்று வாசித்தல், மொழியின் கட்டமைப்பு, வரலாற்றில் அது வளரந்து வரும் அரசியல் அமைப்பாக்கம், இப்படி நாடப்பட்ட அம்சங்கள் ஒருவருடைய எழுத்துக்கான அரசியலை உருவாக்க பயன்படுகிறது. அது போல மக்களின் களங்களில் உலவுகின்ற ஒன்று எழுத்து என்பதனால் பொதுமக்கள் பரப்பில் இருக்கக் கூடிய பலவகைக்கருத்தியல்களினதும், வித்தியாசமான கருத்தாக்கங்களினதும், போராட்டங்களாகவும் எழுத்து அமைந்து விடுகிறது. பொது மக்கள் பரம்பில் இயக்கத்திலுள்ள பலவகை எழுத்துக்களுக்கிடையே நான் முயற்சிப்பதும் ஒரு வகை மாதிரிதான்.

கடந்தகால தமிழ் எழுத்துக்களின் போக்குகள், அவை கொண்டிருப்பதாக சொல்லப்படுவதும், நான் உணருவதுமான நிலைப்பாடுகளில் வாசிப்புக்களை மேற்கொண்ட அடிப்படையில் எனது எழுத்துக்களுக்கான அரசியலை முயற்சிக்கிறேன்.

எழுத்தின் அரசியலை முன்னெடுப்பதும், அரசியல் தபிலாவை, அல்லது கொடைகளை விரும்பும் எழுத்துக்களை முன்னெடுப்பதும் இன்றைய சூழலின் முக்கிய பிரச்சினையாகும். அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அமைப்புக்கள், சிறு பத்திரிகைகள் எழுத்தின் அரசியலை முன்னெடுக்கும் பிரதிகளையும், அது சார்ந்தவர்களையும் அவசரமாக அமைதிப்படுத்தும் செயற்பாடுகளை தொடங்கிவிடுகிறது என்பதுதான் இன்றைய எழுத்துச் சூழல்.

மார்க்கியம் என்றால் என்ன? ஃ நவீனத்துவமென்றல் என்ன? ஃ பின் நவினத்துவமென்றால்
என்ன? ஃ நான் ஏதாவது ஒரு வாதியா? ஃ இல்லையா? ஃ என்ற பிரச்சினைகளுக்குள் நுழைய நான் விரும்பவில்லை. ஃ ஏதாவதொன்றில் ஃ ஒரு உறுப்பினராகச் சேர்வது என்ற சிந்தனைப்போக்குகள் குறித்து எனக்கு கவலைகளுமில்லை. ஃ மிகச் சுதந்திரமாக எழுத்தின் அரசியலை முன்னெடுக்க விரும்புகிறவன். என்ற வகையில் கோஷங்களுக்கு அதிகம் மதிப்புத்தர விரும்புவதில்லை. கோஷம் என்னும் போது அதற்குள் சகலதும் அடங்கும்.

பொருளாதார உறவுகளையும் அதன் கட்டமைப்பையும் புரிந்து கொள்ள மார்க்கியம் இன்று உதவுகிறது. இப்படி ஒவ்வொரு கருத்தாக்கமும் ஒவ்வொரு அம்சங்களைப் புரிந்து கொள்ள உதவ முடியும். நிலவுகிற சூழலில் அதைப் பிரயோகித்துப் பார்க்க முடியும். அத்தோடு குறிப்பிட்ட சில கூறுகளை தேர்வு செய்து அவற்றை நமது சொல்லாடல்களின் வழியாக புதிய முறைகளில் முன்வைக்க வேண்டும். நானும், றியாஸ் குரானாவும் அதையே நமது சூழலில் முன்னெடுது;திருக்கின்றோம். எழுத்துக்களுக்குள் செயற்படுகின்ற அரசியல் என்ன என்றும், எழுத்தை தீர்மானிக்கின்ற அரசியலை உடைப்பது பற்றியும் எமது அக்கரைகள் அமைந்திருக்கின்றன. ஆனால் அரசியல் நடவடிக்கைகள் என்றதளத்தில் நகர விரும்பிய பலர் அதற்கு எதிராகவே இருக்கின்றனர். ஒருவர் உண்மையை எப்படி எழுதுகிறார்? என்ன உண்மையை எழுதுகிறார்? எங்கே, யாருக்காக எழுதுகிறார்?

இந்தக் கேள்விகளுக்குஉடனடியான பதில்களைத்தரும் கருத்தியல் அமைப்போ பதிலைக் கண்டுபிடிக்கும் அணுகுமுறையோ எதுவும் கிடையாது என்ற பதிலிருந்துதான் நாம் உரையாட வேண்டியிருக்கிறது. உண்மையைப் பேசுகின்ற பிரதிகள், புனிதமான எழுத்துக்கள், போன்றவற்றோடு வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது. அது கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் உண்மைகளை எதிர்க்க வேண்டியிருக்கிறது. பல உண்மைகள் இருக்கின்ற ஒரு சூழலை கண்டடைவதற்காகவும்; அது ஏற்றுக் கொள்ளப்படுவதற்குமிடையிலான எழுத்தின் செயற்பாடே எனது எழுத்துக் கொண்டிருக்க வேண்டிய அரசியல் என்று நான் விரும்புகிறேன்.


அந்த எண்ணம் எனது எழுத்துக்களை வடிவமைப்பதற்கு உதவுகிறது. தம்மீது எந்த அடையாளங்களைத் திணித்து விளிம்பு நிலையில் பாதுகாக்கிறதோ அந்த அடையாளங்களை இறுக்கமற்ற பொதுத் தன்மையாகவும், பல் சாத்தியங்களை உட் செரித்துக் கொள்ளக் கூடியதுமான எழுத்துச் சூழலை விரும்புகிறேன். விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதற்கு சொல்லப்படும் காரணங்கள் சமரசத்துக்கு அழைப்பதாகவே கருதுகிறேன். நம்மைத்தூரப்படுத்தும் கேள்விகளின் முன் அதைக்கலங்கடிக்கக் கூடிய பதில்களை பெருக்கெடுக்கவைப்பதே எனது எழுத்தின் அரசியல் எனச் சொல்லலாம்.

எந்த ஒரு விளக்கமும் எந்தவொரு எழுத்தின் அரசியலையும் அலட்சியம் செய்து விட முடியாது. அது போலவே எழுத்து தனது அரசியலின் ஊடாக எந்த விளக்கத்தையும் அலட்சியம் செய்து விட முடியாது. புனைவான இந்த வரலாற்றிலும், புனைவான இந்த அறிவியலிலும், எனது எழுத்தின் அரசியலும் ஒரு புனைவுதான். ஆனால் நிலவுகிற மூடப்பட்ட, இறுக்கமான இந்தச் சூழலை அசைக்கக் கூடியது. சூழலை அசைக்கின்ற எழுத்துக்கு நிகழக் கூடிய அனைத்தும் எனது பிரதிகளுக்கு வரக் கூடிய மிகச் சாதாரணமான ஒன்றுதான்.



முஸ்லீம் தேச இலக்கியப் போக்கு என்று ஒன்று இருக்கிறதா ? என்ற ஒரு கேள்வியைத்தான் இங்கு கேட்க முடியும். அது முன்னெடுக்கப்பட வேண்டிய அளவிலே இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கிமென்ற கதையாடல் உலகின் சகல நாடுகளிலும், தமிழில் எழுதப்படுபவைகளை கொண்டது என்ற புலத்தில் நகர்ந்து கொண்டிருந்து வாசிப்புக்கள் வரலாற்றில் இடையிடையே குறுக்கீடு செய்யப்பட்டது. தமிழுக்கு 90களில் நுழைந்த பின் நவீன கருத்தாக்கங்கள், தமிழ் இலக்கியம் என்ற கருத்iதாக்கத்தினுள் செயற்பட்டுக் கொண்டிருந்த பன்மையான பல இலக்கியத் தன்மைகளை ஒரு போக்காக மாற்றியமைக்க உதவியது. அதன் கொடைகளாக பெண்களின் எழுத்து, தலித் எழுத்துக்கள், புலம் பெயர் - எழுத்துக்கள், ஈழத்து எழுத்துக்கள் போன்ற இலக்கியப் போக்குகளை நம் முன் விரித்துப் போடப்பட்டன. அவைகள் இன்றும் பல சுதந்திரமான பன்மையான தன்மைகளோடு முன்னெடுக்கப்படுகிறது. பெரும் தீவிரமான செயற்பாடுகளுடன் இயங்குகிறது. ஈழத்து இலக்கியம் என்ற கருத்தாக்கத்துக்குள்ளாகவே அமைகின்ற ஒரு உப பகுதியாகவே முஸ்லீம்களுடைய எழுத்துக்கள், மலைதேசத்தவர்களின் எழுத்துக்கள், பெண்களின் எழுத்துக்கள், இன்னும் பிற....... வாசிக்கப்படும் ஒரு போக்கு தொடர்கிறது.

இதில் முஸ்லீம்களும் தமது பங்குக்கு எழுத்துக்களை குட்டிபோட்டார்கள் என்பதில எதுவித மாற்றுக் கருத்துமில்லை. பிரதான சொல்லாடலான ஈழத்து இலக்கியம் என்ற நிலைப்பாட்டை அசைத்துக்கொண்டிருக்கும் காலமாகவே இதைப்பார்க்க முடியும்.

நிறுவனம், அமைப்பாக்கம் அவைகளுக்கு இருக்க வேண்டிய சட்டதிட்டம் கடைப்பிடிக்கப்பட வேண்டிய எல்லைகள், போன்ற வன்முறையின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டே குறித்த இலக்கியம் போக்கை முன்னெடுக்க விரும்புகின்ற அரசியல் நடவடிக்கைகளிலிருந்து வெளியே இயங்கிக் கொண்டிருக்கின்றவர்களும் உள்ளனர்.

பலவகை அரசியல் நடவடிக்கைகளின் குறுக்கீடும் ஊடாட்டமுமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இலங்கை முஸ்லீம் புத்திஜீவிகள், மைய நீரோட்ட அரசியல் முகம் தமக்கு வேண்டுமென்றே விரும்புகிறார்கள் இதற்குமாற்றாக இயங்கிக் கொண்டிருக்கிறேன். என்னைப்போல் இன்னும் சிலரை சொல்லலாம்.

முஸ்லீம் தேச இலக்கியம் என்ற சொல் உருவாக்கம் மிக அண்மைக் கலத்தியது. அது உருவாவதற்கான எழுத்துச் சூழல் மிகப் பழமையானது. இந்த சொல் உருவாவதற்கு முன் அரசியலை எழுத்துக்களுக்குள் இடமாற்றிய போக்குகளும்; நேரடி எதிர் பேச்சாகவுமே பெரும் பாலும் முஸ்லீம்களின் இயக்கம் இருந்தது. மைய நீரோட்டத்தின் விளைவாக அடையப்படும் அரசியல் முகம் என்பதே எழுத்து இயங்கும் அடையாளம் என்றளவில் வாசிக்கப்பட்டது. இந்த சொல் உருவாக்கத்துக்கு முன்புகளில் அந்தச் சொல் உருவாக்கத்தோடு எழுத்தின் அரசியல் என்ற ஒரு கருத்துருவாக்கமும் சேர்ந்தே இருக்கிறது.
அரசியலை எழுதுதல் மற்றும் எழுத்தின் அரசியல் போன்ற அம்சங்கள் வாசிப்பின் அரசியலை முன்னெடுப்பதால் நிகழக் கூடியது. ஈழத்தில் பொதுவாக எல்லோருக்கும் ஒரு கையேடு தேவைப்படுகிறது. அந்த வழிகாட்டிக்கையேடு தமிழகச் சூழலை மையப்படுத்தியதாக அமைந்து விடுகிறது.

சிவத்தம்பி, கைவாசபதி, நுஃமான் போன்றவர்களைத் தொடர்ந்து சேரன் வகைறாக்களின் கையேடுகளே ஈழத்தில் புழக்கத்திலுள்ளன. அந்தக் கையேடுகளுக்கு மாற்றமான எழுத்துக்களும், இலக்கியப் போக்குகளும், அவ் அப்போது முன்னுக்கு வந்தாலும் அவர்களால் அவை படுமோசமாக எதிர்க்கப்படுகிறது. அல்லது அவர்கள் பின்னிருந்து வேறு குழுக்களினால் எதிர்க்கப்படுகிறது. இந்தப் பெரும் பிம்பங்களின் இறுக்கமான கட்டமைப்புக்களை உடைத்துக் கொண்டு வெளியே வந்த ஒரு பொக்கு முஸ்லீம் தேச இலக்கியப் போக்கு எனச் சொல்லலாம். அது முன்னெடுக்கப்படும் போது இன்னும் பல விசயங்களை இருப்புக்கு அறிமுகம் செய்யும் எனக் கருதலாம். குறித்த ஒரு இனத்தினதோ அல்லது குறித்த ஒரு குழுவினதோ பக்கம் மாத்திரம் நின்று செயற்படுவதென்பது அரசியல்மைய நிலை என்று கருதினால்; விளிம்பு நிலைக்கு ஒதுக்கப்பட்ட இனங்கள் குழுக்கள் போன்ற பல்தரப்பட்ட நிலைப்பாட்டை முன்னெடுக்கும் எழுத்து அரசியலை கொண்டிருப்பது ஒரு இயக்கம். இதில் இதன் இரண்டாவது வழியின் பக்கமே பெரிதும் நான் அக்கரை கொண்டிருக்கிறேன். நவீனத்துவ அரசியலின் எழுச்சியோடு முன்னிலைக்கு வந்து இன்னும் பலமான இருப்பைக் கொண்டிருக்கும் சொல்லாடல்களில் இனவாதம், தேசியவாதம் போன்ற சொற்களும் அடங்கும் இவை இனத்தினதோ, அல்லது தேசியத்தினதோ அக்கரையை மட்டும் கரு;தில் கொள்ளும். அதனடியாக கிடைக்கப் பெறும் விடுதலைக்குப்பின் சகலதும் சரிப்பட்டுவிடும் என்ற ஒரு நம்பிக்கையையும், பரப்பத் தொடங்கும். விளிம்பு நிலைக்கதையாடல்களின் பக்கம் மாத்திரமே அக்கரை கொள்ளும் மைய நிலைப்பாட்டை திணறடிக்கின்ற ஒரு நிலையின் பக்கம் தமது செயற்களத்தை தகர்த்தும், இந்த இரண்டுக்குமிடையிலான வேறுபாடுகள் வாசிப்புக்களற்ற ஒரு இலக்கியச் சூழலில் இனவாகமாகவே கருதப்படும் அல்லது தேசியவாதமாகவே பார்கக்ப்படும். விவாதக் களங்களினூடாக அவை பேசப்படக் கூடியது.

நவீன இலக்கிய மற்றும் அரசியல் வாசிப்புக்களே பெரிதும் இல்லாத சூழலில் எந்த வகையான எழுத்துச் செயற்பாட்டுக்கும், அவர்கள் விரும்புகிற அடையாளத்தையே திணிக்க முற்படுவர். முஸ்லீம் தேச இலக்கியம் என்பது விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு பகுதியினரின் எழுத்துச் செயற்பாடு அவ்வளவுதான் -
விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட இன்னும் பல பிரிவினர் இலங்கைச் சூழலில் இருக்கின்றனர். அவர்களுடைய எழுத்துச் செயற்பாடுகளும் சம காலத்தில் இயங்குபவைதான், பெண்கள், மலைத்தேசத்தவர்கள், தலித்கள், தீவுத்தமிழர்கள், முஸ்லீம்கள் பல பிரிவினர் என அவர்களின் குரல்களும் ஒலிக்கின்ற காலம் இது.

இது எதுவென்றுதான் முக்கியமானது என்ற கதைகளை கணக்கிலெடுக்கத் தேவையில்லை. முஸ்லீம் தேச இலக்கியம் தனது போக்கை மைய நீரொட்ட அரசியலின் முகத்தோடு பொருத்திப் பார்கக் முனைகிற ஒரு செயற்களமும், சகல சமூகத்திலும் இருக்கின்ற விளிம்பு நிலைக்கதையாடல்களுடன் சேர்ந்து இயங்கும் ஒரு செயற்களமும் கொண்டதாக இருக்கிறது. இரண்டாவது செயற்களத்தின் மீது அக்கறை கொண்டுள்ள நானும், எனது நண்பரகளும், அதிகாரச் சக்திகளாலும், முஸ்லீம் வாதச் சக்திகளாலும் இரட்டைப் பிரச்சினையை எதிர்கொள்வதுதான் உண்மை. வன்முறை உளவியலின் அணி சேர்ப்புக்களுக்கு வெளியே எங்களை அடையாளம் காட்டிக் கொள்வது ஈழத்துச் சூழலுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அது எமக்கு பிரச்சினையாகவுமிருக்கிறது.



பின் நவீன சிந்தனைகளின் வரவுதான் தமிழ் இலக்கியம் என்ற ஒரு பொதுக் கதையை கலைத்து, பல கதையாடல்களின் களம்தான் தமிழ்ச் சூழல் என்ற அறிவிப்பை முன்வைத்தது. அதன் தொடர்ச்சியினால்தான் முஸ்லீம் தேச அதாவது ஈழத்து முஸ்லீம் தேச இலக்கியம் என்ற ஒரு கதையாடலையும் வெளியே கொண்டுவந்தது. பின் நவீனத்துவத்தின் முதலாவது பங்களிப்பே தமிழ்ச் சூழலில் முஸ்லிம் தேச இலக்கியம் என்ற ஒரு இயங்குவெளியும் இருக்கிறது என்று ஏற்றுக் கொண்டதுதான். அல்லது அறிவித்ததுதான்.



தனியான ஒரு இலக்கியப் போக்காக அறிவித்துச் செயற்பட துணையாக இருக்கின்ற அம்சமே பின் நவீனத்துவத்தின் பங்களிப்புத்தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கேள்வி எந்த நோக்கத்தை பேசச் சொல்கிறது என்றோ எந்தப்பதிலை எதிர்பார்க்கிறது என்றெ இலகுவாக புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு முஸ்லீம்கள் நம்புகின்ற மதமான இஸ்லாமியக் கருத்தியலுக்கும் செயற்பாட்டுக்கும் முரணானது பின் நவீனத்துவம் என்ற கருத்து பரவலாக இருக்கின்ற நிலையில் வைத்துத்தான் இந்தக் கேள்வியை நான் புரிந்து கொள்கிறேன். மதத்தின் பக்கம் நின்று வாசிப்புச் செய்யும் போது பின் நவீனத்துவம் தேவையற்றது என்ற நிலைப்பாடுகளுக்கு தம்மை இட்டுச் செல்வதாக இன்றைய பெரும் விமர்சகர்கள் சொல்கிறார்கள்.

நிலம், சனக் கூட்டம், அரசுகள், போன்ற பல பிரிவுகள் அதன் தனித்துவம் என்ற அம்சங்களை முன்வைத்து இஸ்லாம் தன்னை வடிவமைக்கவில்லை. அது எல்லா வித்தியாசங்களையும் உட்செரித்துக் கொண்ட பொது இடமான ஒரு அடிப்படையிலே உலகைப் பார்க்pறது என்கின்றனர்.

பொருளியல் ஏற்றத்தாழ்வுகளினூடாகவோ, தேசியம், விளிம்பு நிலைக்கதையாடல் போன்ற புலத்திலிருந்து மனிதர்களையும், இஸ்லாம் வாசிக்கவில்லை. இஸ்லாம் அதற்கென்று தனித்துவமான வாசிப்பை கொண்டிருக்கிறது. என்றும் சொல்கின்றனர். இந்த அடிப்படைகளை ஏற்றுக் கொள்பவர்கள் பின் நவீனத்துவம் எந்த பங்களிப்புக்களையும் செய்யாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்து விடுவர்.

இஸ்லாத்தை ஒரு அச்சுறுத்தலாக, வெறிபிடித்த, வன்முறையான, பேராசை கொண்ட, பகுத்தறிவற்ற, புறம்பான ஒன்றைப்பார்க்கும் பார்வை காலணிய காலத்தில் ஆரம்பித்தது அந்த சிறு கறையைத்தான் 'ஒரியன்டலிசம்' என வாசிப்புச் செய்கிறார் 'எட்வர்ட் செயிட்'

ஒரியன்டலிசம் என்ற இந்தப் பார்வை இஸ்லாத்துக்கு வெளியே உள்ளவர்கள் அதை எப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள். எனும் ஒரு வாசிப்பை மேற்கொண்டிருக்கிறார் இதில் மதத்தின் புலத்திலிருந்து அதன் ஒழுக்கக் கோவை என்ற நிலைகளிலிருந்து எழுதுவதும், வாசிப்பதும் என்று ஒரு பகுதியும் ஈழத்துச் சூழலுக்கு வரக்கூடிய நிலை தென்படுகிறது.

முஸ்லீம் தேச இலக்கியமென்பது ஒரு விளிம்பு நிலைக்கதையாடலாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதற்கு பின் நவீனத்துவத்தின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று தலித்பிரதிகள், பெண் எழுத்துப்பிரதிகள் போன்றவற்றுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முஸ்லீம் தேச இலக்கியத்துக்கும், பின் நவீன நிலைக் கருத்தாக்கங்கள் அவசியமானது. அதன் துணையோடுதான் முஸ்லீம் தேச விளிம்பு நிலைக் கதையாடலை முன்னெடுக்க முடியும்.

பின் நவீனம் எதையுமு; விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக பரிந்துரைக்கவில்லை. முஸ்லீம் தேச இலக்கியம் மதத்தின் அடிப்படையாகக் கொண்ட ஒரு போக்கினையும், விளிம்பு நிலைக்கதையாடல் என்ற ஒரு போக்கினையும், சமகாலத்தில் இலக்கியச் செயற்களத்துக்கு எடுத்து வந்திருக்கிறது, இதில் றியாஸ் குரானா, மிஹாத் போன்றவர்கள் விளிம்பு நிலைக்கதையாடல் என்றளவில் செயற்படுவதைக் குறிப்பிட்டுக் காட்டலாம். இன்னும் சிலர் மாற்றப் பகுதியையும் பின் நவீனக் கதையாடலையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருப்பதையும் காணலாம்.

இரண்டு பகுதிகளும் வாசிப்புக்குட்படுத்தப்பட வேண்டியவையே! எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற பத்திரிகைகளின் செயற்பாடுகள் மற்றும் இலங்கை முஸ்லீம்களின் மைய நீரொட்ட அரசயில் களம் போன்றவற்றின் கருத்தாக்கங்களினால் பீடிக்கப்பட்டிருக்கும் அனெக அறிவு ஜீவிகள் விளிம்பு நிலைக்கதையாடல் என்பதை பெரிதும் எதிர்ப்பவர்களாகவே இருக்கிறார்கள.

அடையாளங்களின் பன்மைத் தன்மையின் மீது அக்கறை கொள்பவர்கள கூட மாற்றமுடியாத அடையாள விரும்பிகளோடுதான் ஆரம்பத்தில இணைந்து இயங்க வேண்டியிருக்கிறது என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள்.

முதலில் குறித்த எந்தவொரு இலக்கியப் போக்குக்கும் நிலையனது என்ற முடிவுகளோடு செயற்படத் தொடங்குவதற்குப் பதிலாக, அவைபற்றிய விமர்சனக் களஙக்ளை உருவாக்குவதே ஒரு இலக்கியப் போக்கின் பக்கம் கவனத்தை ஈர்ப்பதற்காக வழியென 'டெரிடா' சொல்வார். அது இலங்கைச் சூழலிலும் முன்வைக்கப்பட்டது. இப்படியான உரையாடல்கள் தொடரப்படுவதினூடாகவே ஒரு இலக்கியப் போக்கு தனது பலவகைப் பண்புகளையும், தன்மைகளையும் கொண்ட இலக்கியத் தளமாக உருப்பெறமுடியும். ஒற்றையான கருத்து நிலைகளின் பக்கம் அணி திரள்வதும், அதை இறுக்கமான நிறுவனமாக அமைப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படியான ஒரு அரசியல் முகம் இழிவானது என நினைக்கிறேன்.

இலக்கியம் தொடர்பான விரிந்த வாசிப்புக்கள் உள்ளவர்களுக்க எனது பதிலை புரிந்து கொள்வது சிரமமற்ற ஒன்றாக இருக்கம். மற்றவர்களும் அவர்களுக்குரிய முறையில் வாசிப்பார்கள் என்பது ம் அறிந்ததே....!



அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். சிறு பத்திரிகைகள் மிக்க குறைந்தளவில வெளிவருகிறது. பலர் எழுதுவதிலிருந்து நின்றுவிட்டனர். இப்படியாக உள்ளது நிலைப்பாடு, வலைத்தளங்கள்தான் பெரிதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நானும் நண்பர் றியாஸ் குரானாவும் இணைந்து ஒரு வலைத்தளத்தை எழுத்துச் செயற்பாடுகளுக்காக வைத்திருக்கிறோம். இன்னும் சில வாரங்களின் பின் அது பார்வைக்கு வரும். சில சிறுபத்திரிகைகள்வரப்போவதாக கதைகள் பரவிக் கொண்டிருக்கின்றன. மைய நீரொட்ட அமைப்புக்கள தீவிரமாக இயங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்கி விட்டிருக்கின்றன. தொலைக்காட்சிகள், வானொலிகள், அச்சுப் பணிகள் என சகலரும் இலக்கிய வளர்ச்சிக்காக உழைப்பதாக பேசிக் கொண்டிருக்கின்றன. தேசிய வாத கருத்தாக்கங்கள் அரசியலை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அதன் எடுபிடிகள் இலக்கியத்திலும் பரவிக் கொண்டிருக்கின்றது; அதை உடைத்துக் கொண்டு இயங்கும் செயற்பாடுகளும் இயக்கத்திலுள்ளன. பின் நவீனத்தின் வரவுகள் சில அதிர்வுகளை ஏற்படுத்தியருக்கின்றன. பின் நவீனம் பல வகையான வாசிப்புக்களுக்கும், பயன்படுத்தலுக்கும உள்ளாகிறது.

இலங்கை முஸ்லீம்களின் எழுத்துக்கள் தனித்த ஒரு இலக்கியப் போக்காக முன்வைக்பப்பட்டிருக்கின்றன. விளிம்பு நிலைக்குத்தள்ளப்பட்ட சமூகங்களின் கதைகளையும் ஆங்காங்கே எழுத்துக்களில வாசிக்க முடிகிறது. இது தவிர, இலக்கியப் பிரதிகள் பெரும் உடைப்புக்களைச் செய்திருக்கிறது. இதுவரை நிலவிய பிரதிகளிடையே சலப்பை உருவாக்கியருக்கிறது. பெரும் வாசிப்புக்களைக் கோரும் அம்சங்களை உள்ளடக்கிய பிரதிகள் வெளிப்பட்டிருக்கின்றன. நூலாக்க முயற்சிகள் மந்த கதியிலே இருக்கின்றன. இலங்கையிலிருந்து இந்தியச் சூழலுக்குச் சென்று கட்டுரைப்பிரதிகளை வாசிக்கவும், விவாதிக்கவுமென புதியவர்களை அழைக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

மேலே சொன்னவைகள் போதுமானது அல்ல. இவை மிகச் சிறியளவிலான செயற்பாடுகள்தான். இலங்கையின் இலக்கியச் nசூழல் மிக மெதுவாகவே நகர்கிறது. சிலவேளைகளில் இலக்கியச் சூழல் சலிப்பூட்டக் கூடியதாகவும் உள்ளது. இலக்கியச் சூழல் என்பதற்குப் பதிலாக அரசியல் சூழல் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கின்றது. அரசியலின் கவர்ச்சியை இலக்கியத்திலும் பெற்றுவிட அவஸ்தைபடும் நிலையுமு; உள்ளது. எனது அடுப்பங்கரையில் படுக்கும் பூனை இன்னும் எழுந்து செல்லவில்லை. எத்தனை வருடங்கள், அது எழுந்து செல்லும் போது இலக்கியச் சூழலை நக்கும்.



புத்திமதி சொல்வதற்கும், அதைக் கேட்பதற்குமென்ற ஒரு கூட்டமும், பக்தர்களும், உருவாகிவிடுவது எல்லாத்துறைக்கும் பொருந்தும் போலே உள்ளது. மிகச் சுதந்திரமாக இயங்கும் களம் எழுத்து என்றுதான் நான் நினைக்கிறென். அதனால்தான் அதை விரும்புகிறேன்.

புத்திமதிகள் சொல்வதற்காக காத்திருக்கும் எத்தனையோ பேர்களிடையே நீங்கள் போய் அகப்பட்டிருக்கலாம். என்னிடம் சொல்வதற்கு ஏதுமில்லை; நன்றாக எதையுமு; பன்மைத் தன்மையோடு வாசியுங்கள், வாசிக்கத் தொடங்குங்கள்.
உங்கள் வாசிப்புக்களின் அடியாக நீங்கள் புனைவதுதான் உங்கள் எழுத்தின் அரசியல்.

இளைய தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எப்போது உங்களை விட்டுப் போகிறதோ அப்போது நாம் பேசிக் கொள்ளலாம், உரையாடலாம்.

எந்தப்பதிலுக்கும் பின்னே ஒரு கேள்விக் குறியைப் போட்டு விட்டால் அது கேள்வியாக மாறிவிடும். ஆகவே பதில்கள் கூட கேள்வியை உற்பத்தி செய்வதற்கான ஒரு முயற்சிதான்.

நாம் ஒத்துப்போகிற, விலகிச் செல்கிற அனைத்துக் கருத்தாக்கங்களாகவும் வாசிக்க வேண்டியிருக்கிறது. அவை எழுத்துக்களை வடிவமைக்கின்றன. எந்தப்பிரதியும், தனக்கான உப பிரதிகளை உருவாக்கக் கூடியதே அதன் கதையாடல்கள்தான் பிரதி உலவும் செயற்களம். ஆகவே வாசிக்கத் தொங்குங்கள். மனிதர்களின் நேரடி மோதல்களினால் எற்படும் குழப்பங்களைப்பற்றி இறுக்கமான ஒரு பிரதிக்கு முக்கியத்துவம் தருவது பெரும்பாலானவர்களின் குறைபாடாகவே தெரிகிறது.

பண்பாடு, இனவாதம், வரலாற்றுப் பொதுமைகள், மதிப்பீடு, அதன் பயன்கள், நடு நிலமை அதன் அளவு இவை பற்றி ஒருவருடைய சிந்தனையை கலைத்து புதிப்பிக்கவே எனது வாசிப்பையும், எழுத்தையும் பயன்படுத்த விரும்புகிறேன்.

பிரதிகள் விNஷசமான ஒன்று அல்ல. அவை பிரதிகள் தான் பிரதிகளுக்கிடையிலான வேறுபாடுகள், அதனுள்ளே இயங்கும் அரசியல் என்ற அடிப்படையிலான வாசிப்புக்களுக்குரியன. பிரதிகள் என்ற செயற்களத்தில் இயங்கும் ஆய்வுப் பிரதிகள் போன்ற வாசிப்புக்களே பிரதிகள் தொடர்பான வரலாற்றுப் புனைவை வெளிப்படுத்தக் கூடியது.

ஒருவரின் ஏனைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்படியான பிரதி ஒழுக்கக் கோவைகள் எனக்கு உடன்பாடில்லாதவை. சொல்ல முடியாத ஒன்றை கேட்டிருக்கிறீர்கள்.