வியாழன், செப்டம்பர் 17, 2009

மறுத்தோடியின்துன்பியல் நாடகீயம்-0௨
சோனியனின் கதையின் தனிமை
சில ஆய்வாளர்களின் ஆய்வும் தகவல்களும், குறிப்புகளும்.

ஷஷமுஸ்லிம் தேசமும் மரணமும்|| என்ற சோனியனின் கதை பெருவெளி சிறுபத்திரிகையில் 31வது இதழில் வெளிவந்திருந்தது. அது தொடர்பில் எனது அவதானிப்புக்களை எழுத முயற்சிப்பதே இக்குறிப்பின் நோக்கமாகும். அக்கதையோடு உதிரியாக இணைக்கப்பட்டுள்ள தகவல் ஒன்றில்தான் ஒரு கதை சொல்ல என்றும், கதை வரைபவர் (னுசயகவ) என்றும் அறிவித்திருந்தார். மற்றும் இரண்டு கதைத்திட்டங்களை முன்வைத்து இரு வேறு திசைகளில் நகரும் கதைச் சிதைவையும் முன்வைத்திருந்தார். இது எனது வாசிப்பினை திக்குமுக்காடச் செய்தது. மட்டுமல்ல, பலவிதமான வாசிப்பினையும் கோரியபடி இருந்தது. இரண்டு கதைத் திட்டங்களையும் இணைப்பதற்கு பயன்படுத்தியுள்ள எழுத்து முறைமையும், அதன் குழப்பங்களையும் ஆராய்வதினூடு இக்கதையோடு எவ்வாறு நம்மால் உறவுகொள்ள முடியும் என்பதை ஒரு தற்காலிகமான நிலைப்பாட்டிற்கு அருகே கொண்டுவந்து வாசிப்பதற்கான எல்லையை உருவாக்கிவிட முடியும் என நினைக்கின்றேன்.

1512 இல் குழந்தை விநாயகம் பிள்ளையினால் மொழிபெயர்க்கப்பட்டு அதே ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட ஷஷநீத்தாரின் கதை|| என்ற நாவலின் சாயலைக் கொண்டிருக்கின்றது என்று பம்புருக்கான் என்ற விமர்சகர் எழுதியிருந்தார். அந்த விமர்சகரின் தகவலின் படி மூன்று பதிப்புக்களைக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. ஒவ்வொரு பதிப்பிலும் வௌ;வேறு பெயர்களுடன் இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. கடைசிப் பதிப்பில் பல இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருந்ததாகவும் அறிய முடிகிறது. 1926களுக்கும் பின்னர் எந்தப் பதிப்புக்களும் செய்யப்படவில்லை. என்னிடம் இதன் இரண்டாவது பதிப்பான ஷஷகொலைகளின் தர்மம்|| என்ற 1831ம் ஆண்டின் பிரதிமாத்திரமே கையில் இருக்கிறது. இந்தப் பிரதியினூடே ஒப்பிட்டு சோனியனின் ஷஷமுஸ்லிம் தேசமும் மரணமும்|| என்ற கதையை வாசிக்க முடிகிறது. ஆனால் இதனுடன் ஒப்பிடுகையில் மிக அதிகமான சிக்கல்களை உருவாக்கிவிடுகிறது. அதில் பிரதானமாக நான் எதிர்கொள்ளும் பிரச்சினையானது, மூலப்பிரதி உண்மைச்சம்பவம் என்ற வகமைக்குள் தனது வெளியை நிறைத்துக் கொண்டிருக்கும் போது அதன் கதை மாந்தர்கள் திட்டமிட்டபடி தனது செயல்களில் இயங்குவதாக இருக்கிறது. ஆனால் சோனியனின் கதைப்பிரதியோ, கட்டுரைத்தன்மையையும், புனைவையும் ஒரு கதைத்திட்டத்தை உருவாக்கி அந்த வெளியிலே சஞ்சரித்துக்கொண்டிருக்கிறது. இரு பிரதிகளையும் வாசித்து முடிக்கையில் இரண்டுக்குமிடையிலான தொடர்புகளை விடவும் தொடர்பின்மையே அதிகம் எனச் சொல்ல முடிகிறது. இந்த இடத்தில்தான் விமர்சகர் பம்புருக்கானின் ஆய்வுகளை சந்தேசிக்க வைக்கிறது. பம்புருக்கானுடைய ஆய்வின் மீதான சந்தேகமே ஏனைய மூலப்பிரதிககளையும் தேடவைக்கிறது. பம்புருக்கான் சுட்டிக்காட்டும் தொடர்புகளுக்கு மாற்றமான தொடர்புகளையே என்னால் அவதானிக்க முடிகிறது. அவை குறித்தே எனது ஆய்வுகளை நகர்த்த விரும்புகிறேன். அத்தோடு கதை குறித்த சில பேராசிரியர்களின் எழுதப்படாத ஆய்வுகளை நகர்த்த விரும்புகிறேன். அத்தோடு கதை குறித்த சில பேராசிரியர்களின் எழுதப்படாத விமர்சனங்களையும் இணைத்துவிடுகிறேன். அதிலிருந்து எனது நோக்கத்தை மேலோட்டமாகவும் வேறாகவும் நீங்கள் கண்டடைய முடியும்.

கதையின் முக்கிய நிகழ்வுகளும் அதற்குள் காரணமான பாத்திரமும் முஸ்லிம் ஒருவரின் வாழ்வுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. கதையின் கதையில் வெளிப்படையாக அவரை முஸ்லிம் என்று எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை. முஸ்லிம்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளை உலகெங்கிலும் கவனயீர்ப்பை பெற்றுக் கொண்டுவருவதால் இது சோனியனின் சுவாரஸ்யமானதாக இருந்திருக்கக் கூடும். மூலப்பிரதியின் பிரதான கதைத்திட்டம் இனம்கண்டு கொள்ளமுடியாது ஆயால் ஆண் என்று அடையாளப்படுத்தத்தக்க ஒரு தெராழிலாளியின் பக்கம் சாய்வு கொண்ட நிலைப்பாட்டை வலியுறுத்தியபடி இருக்கிறது. இதை விமர்சகர் பம்புருக்கானின் குரலில் காண்போம். ஷஷகடைசி எழுத்தும் உச்சரிக்கப்பட்டுவிட்ட சோனியனின் கதையில் (ளுரடிடiஅந) வகையிலான எந்தப் புனைவுத்தியுமில்லை. மூலக் கதையின் தொழிலாளி என்பதை முஸ்லிம் என்ற பதத்தினூடாக இடமாற்றம் செய்திருப்பதும் வெறுக்கத்தக்க கருதுகோள். வடக்கின் மனிதர்களைப் பற்றிய நம்பமுடியாத புனைவுகளின் தொடர் வெறுப்பு. எந்த இடத்திலும் சாத்தியமற்ற நம்பமுடியாத புனைவுகளையே காணமுடிகிறது.
ஆயினும் சோனியனின் நம்பமுடியாத புனைவுகளின் பின்னே தொடர்ந்துவரும் அதிர்ச்சி உண்மைத்தன்மை புனைவுகளுக்குள் கொண்டுவர சோனியனின் எழுத்துக்களால் முடிகிறது என்ற நிலைப்பாடு பம்புருக்கானின் மீது நமக்கு சந்தேகத்தை உண்டுபண்ணும் இடமாக அமைகிறது. பம்புருக்கான் உண்மையை மறைப்பதற்கு சோனியனின் எழுத்துக்கள் மீது காரணமற்ற முறையில் மேற்கொள்ளும் வன்முறை விமர்சணமாகவும் நம்மால் யூகிக்க முடியும். சோனியனின் எழுத்துக்களில் நிறைவடையும் வலிகளையும், ஓலங்களையுமு; புனைவு என்ற அர்த்தப்படுத்தலினூடாக அதன் இன்றைய உண்மைத் தன்மைகளை புறமொதுக்க முயற்சிப்பதாகவே கருத இடமுண்டு. பம்புருக்கான் தனது ஆய்வுக்கு பக்கபலமாக சோனியனி;ன கதையிலிருந்து கீழுள்ள பகுதியை தேர்வு செய்கிறார்.

கனவில் வரும் ஒரு பாத்திரம் நிஜவாழ்விற்குள் நுழைந்துவிட முயற்சிக்கிறது. அதற்காக கனவு பற்றிய தொன்மங்களை ஆய்வுக்குட்படுத்துகிறது. கனவின் காலங்களையும், நிஜங்களையும் பொய்ப்பிக்கிறது. கனவு தன்மீது விதிக்கும் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் மிகக் கவனமாக உடைத்துக் கொண்டு வெளியேறுகிறது. தனது கனவிலிருந்து விடுதலையாவதற்கான புரட்சியில் சொல்லப்படும் எதிரியாக வருபவர் தமிழராக இருக்கிறார். சிஙங்களவர்களிடமிருந்து பேச்சுக்களால் வெற்றியடைய முடிகிறது. கனவின் புதிர்பாதைக்ளை அவர் தாண்டும் இடங்கள் தமிழரின் கைவசமிருப்பதாகவும், அதன் இடர் நிறைந்த சூட்சமங்களை கலைத்துப் போடுகின்ற இடங்களிலெல்லாம் தமிழர்கள் சிக்கலடைவதுடன், அவர்களின் இருப்புக்கு பின்னடைவு ஏற்படுவதுமாக உணர்கின்றார்கள். ஆனால் உண்மையில் கதையின் நகர்தலின் படி கனவிலிருந்து நிஜவாழ்வுக்குள் வரும் முயற்சியலில் தமிழர்கள் ஏற்படுத்திய முடக்கங்களை எட்டுடைப்பதாகவே அவதானிக்க முடிகிறது. தனது கனவைத் தமிழர்கள் சூழ்ந்து கொண்டு எல்லைகளை அதை;திருப்பது தொடர்பில் வெளிப்படையான துயரங்களை அது கதையாடுகிறது. கனவிலிருந்து தப்பிக்க முடியாதபடி புதிதுபுதிதாகவும் அவர்கள் அமைத்துக் கொண்டிருக்கும் இறுக்கமான அரண்களையும், கடுங்காவலையும் உடைக்கும் எல்லையாகும். ஆனால் கதை கனவிலிருந்து நிஜவாழ்வுக்குள் நுழைந்து விட்டதை முடிவாகக் கொண்டிருப்பதையும், கனவுக்கு சேதமிழைக்காமல் இது நிகழ்த்தப்பட்டிருப்பதையும் வியாக்கியானஞ்செய்தபடியே இருக்கிறது கதையின் கடைசிச் சொல்.

பம்புருக்கான் தனது ஆய்வில் மேலுள்ள கதையின் சுருக்கப்பகுதியை முன்வைத்து கனவின் முக்கியத்துவத்தை சிதைவாக்கம் செய்துவிட்டதாகவும், ஆண் இலட்சிய தாகத்தினை சிதறடித்துவிட்டதாகவும் சொல்கிறார். கனவிலிருந்து வெளியேறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்களை கனவுக்கெதிரான போராகவும் சுட்டிக்காட்டுகிறார். தமிழர்கள் கனவுக்குள்ளே சிறைவைத்திருக்க நிகழ்த்திய அடக்கு முறையிலிருந்து தற்காத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட பிரயத்தனங்களில் ஒரு தமிழர் பொல்லப்படுவதையும் இதற்கு ஆதாரமாக எழுத்துக் கொள்கிறார். சோனியனின் கதையோடு இணைக்கப்பட்ட உப பிரதியை பம்புருக்கான் வாசிக்கவில்லை என்றெ தோன்றுகிறது. கதையோடு இணைக்கப்படாதது என்பதே தமிழர்களுடனான உறவை முறித்துக் கொள்ளவில்லைஎன்பதையே காட்டுவதாக பெரும் விமர்சகர் ஷஷகோதாண்டவளவன்|| குறிப்பிடுவதை இங்கு நினைவு கூறமுடியும். கனவிலிருந்து தப்பித்துச் செல்ல மேற்கொள்ளும் முயற்சியை எதிர்த்து தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து வன்முறைகளும் உப பிரதியில் பதிவு செய்யப்பட்டிருப்பதை கவனிக்க வேண்டும். உயிர், உடமை, சொத்துக்கள் என மிக மோசமான இழப்புக்களை பம்புருக்கான் கவனிப்பதாகத் தெரியவில்லை. தற்காப்பு நடவடிக்கையில் ஒரு தமிழர் கொல்லப்படுவதே முக்கியமாக ஆய்வில் குறிப்பிடப்படுகிறது.

சோனியனின் ஷஷமுஸ்லிம் தேசமுமு; மரணமும்|| என்ற கதையின் இரண்டாம் பகுதியில் நிறையக் குழப்பங்கள் தெரிவதென்பது உண்மைதான். அதற்குக் காரணம் (ழேn டுநைநெயச னுசவைiபெ) என்கின்ற எழுத்து முறைமையினை பயன்படுத்தியிருப்பதுதான். அதாவது தொடர்சியறு கதைவரைதல் முறை. காலங்கள் குழம்பியுள்ளது அத்தோடு நிகழ்காலம், இறந்தகாலம், எதிர்காலம் என்பதன் எல்லைகளெல்லாம் அழிந்துபோன ஒரு காலதர்தைக் கதைக்களமாகக் கொண்டிருக்கிறது. கதை ஆரம்பிப்பதோ முடிவுறுவதோயில்லை. நதியைப் போல ஒரு தொடர்ச்சியான அசைவியக்கமோ காணமுடியாதுள்ளது. மந்திரமா? நிஜமா? என்ற அடையாளங்களைக் காணமுடியாத ஒரு சுழற்சியை முன்னிறுத்துகிறது. பறவைகளா? மனிதர்களா? மிருகங்களா? கதைமாந்தர்கள் என்ற சிக்கலை அடிக்கடி ஒவ்வொரு வரியிலும் உருவாக்கி பின் அழித்துக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அதே நேரம் கதையின் முதலாவது பகுதி இரண்டாவது பகுதியை விளங்கிக் கொள்வதற்கான வழிகாட்டியாகவும் அமைகிறது. எனவே பம்புருக்கானுடைய வாசிப்பினை சிதறடிக்கக்கூடிய எழுத்து முறைமைதான் என்பதை இலகுவாக்க புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் பம்புருக்கான் யதார்த்தவாதம் என்ற நிலைப்பாட்டிலிருந்து பிரதிகளை வாசித்துப்பழக்கப்பட்டவர் என்பது தெரியாததல்ல. ஆனாலும் இரண்டாம் பகுதிக்கான கதைத் திட்டத்தை பம்புருக்கான் கண்டடைந்திருப்பதை கவனிக்க முடிகிறது. இரண்டாம் பகுதி குறித்த பம்புருக்கான் மற்றுமு; இரண்டு பேராசிரியர்களின் அவதானிப்புக்களைக் கீழே காணலாம்.

1. பம்புருக்கான் : எதுவித எதிர்ப்புகளுமின்றி பல நூற்றாண்டுகளாக அன்பாகவும், ஆதரவாகவும். கதையெங்கும் முஸ்லிம் என்று அறியக் கூடிய பிரதான பாத்திரமொன்று உலவிக் கொண்டிருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் கதை சொல்லி ஒரு தமிழர் என அப்பாத்திரம் அறிகிறது. அன்றிலிருந்து கதை சொல்லியின் கட்டளைகளுக்கு மாற்றமாகவும், கதைக்குள் கலகம் செய்தபடியும் இருக்கிறது. நான் கதைக்குள் மேற்கொண்டு இருக்க வேண்டுமென்றால், தனது விருப்புறுதியும் கதைக்குள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கதைசொல்லியுடன் வாதிடுகிறது. கதை சொல்லி செய்வதறியாது திகைக்கிறான். புதிதாக ஒரு பாத்திரத்தை கதைக்கு உகந்தபடி உருவாக்குவதிலுள்ள இயலாமையை முன்வைக்கிறான். இத்தனை பழமை வாய்ந்த ஒரு பாத்திரத்தை தகவமைப்பதிலுள்ள சிரமங்கள் பல பக்கங்களில் விரிகிறது. அது போலவே அப்பாத்திரமும், கதைக்குள்தான் நடத்தப்பட்டவிதம், தன்னைக் கiவிட்டதருணங்கள், தான் சார்ந்த nருந்திரளான மக்களே கதைக்குள் சொல்லப்பட்டதும், துரத்தியடிக்கப்பட்டதும் தொடர்பான கருத்தாடல்கள் என பல பக்கங்களும் விரிகிறது. கதை அந்த இடத்திலிருந்து கிளைக்கிறது. பல திசைகளை நோக்கி பயணிக்கிறது. கதை செல்லி ஒரு கதையையும், அப்பாத்திரம் இன்னொரு கதையையும் பிறப்பித்தபடி இருக்கின்றார்கள். இந்தக் குழப்பங்கள் கதையை அழித்துவிடுவதற்கே உதவும். கடைசியில் கதையே இல்லாத ஒரு நிலைப்பாட்டை உருவாக்கும் என்கிறார்.

2. பேராசிரியர் சரிபுத்தம்பி : பின் நவீன எழுத்து முறைகளுடன் எனக்கு அவ்வளவு பரீட்சியம் இல்லை. ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாகவே பின் நவீனத்துவம் செயற்படுகிறது. பின்காலணித்துவம் என்ற அடிப்படையிலேயே இலக்கியத்தை வாசிக்க முடியும் என அறியமுடிகிறது. சிலவேளை நான் சொல்வதில் தவறுகள் இருக்கலாம். பலவகை கருத்தாங்களினதும், எழுத்துமுறைகளினதும் கலவையாக இப்பிரதி இருப்பதால் இது நமது சூழலுக்கு கிடைத்திருக்கின்ற வளம் எனவும் கருத இடமுண்டு. கதையின் வருகின்ற ஒரு பாத்திரமே அதன் கதை சொல்லியோடு முரண்படுவதென்பது (ஆயபiஉயட சுநயடளைஅ) வகைப்பட்டதுதான். சோனியனின் கதையில் நிகழ்ந்திருப்பது இரு தேசங்களுக்கிடையிலான உரையாடல் தன்மையினைக் கொண்ட ஒரு கதைத்திட்டம். கதை சொல்லியின் பணிப்பின்பேரில் இயங்கமுடியாத பிரதொரு தேசத்தின் குறியீடு. இந்தக் கதை தொடர்பாக காட்டமான வியாக்கியானங்கள் நமது சூழலில் ஏன் இன்னும் இல்லை என்றால் அது தமிழர்களின் கைகளுக்குள் அடங்கிவிடத்தக்க இலக்கியச் சூழல்தான் இன்னும் இங்கிருக்கிறது. என்று சொல்லலாம். இன்னும் பலமுறை வாசிப்பிற்குட்படுத்திய பிறகே சோனியனின் கதை பற்றி விரிவாகப் பேச முடியும்.

3. பேராசிரியர் கந்தன் : இது கதையே இல்லை. மொழியையும், கலாச்சாரத்தையுமு; கூறுபடுத்தும் முயற்சி, ஒற்றுமையை சிதைக்கக்கூடிய மேலைத்தேய எழுத்து முறைமையின் பிழையான இறக்குமதி. கதை சொல்லியின் விடுதலைக்கான அணிதிரட்டல்களை கொச்சைப்படுத்தும். பிரித்தாளுகின்ற மேற்கின் சதிமுயற்சி அது மட்டுமன்றி மரபுரீதியான தமிழின் கதை சொல்லு முறையைக் கேலி செய்யும் எத்தனம், தமிழ் பண்பாட்டைக் கூறுபோடுவதினூடாக சோனியன் எதைச் சாதிக்க முற்படுகின்றார் ? அமரமுடியாத பீடங்களுக்கும், அடையமுடியாத உச்சங்களுக்கும் செல்வதற்கு கதை கோதாவில் குழப்பியடிக்கும் செயல். தன்னையும் ஒரு மஹா எழுத்தாளனாக கட்டமைப்பதற்காகவே இவ்வகைப் புரியாத எழுத்து முறைகளை முன்வைக்கிறார். என்பதை எண்ணத்தோன்றுகிறது.

இந்த வியாக்கியானங்களால் சர்ச்சைக்குள்ளாகி வாதப்பிரதிவாதங்களையே சோனியனின் கதைகளை விட அதிகம் எழுதப்பட்டிருக்கிறது. ஆயினும் என்னை மிகவும் திகிலடையச்செய்த ஒரு நிகழ்வு கதையிலுள்ளது. அதுபற்றி எவரும் தங்கள் கருத்துக்களைச் சொல்லாமலிருப்பதும் ஆச்சரியம் தருகிறது. கதை சொல்லியை எதிர்த்தபடி கதையெங்கும் நடமாடும் அப்பாத்திரம் யுத்த நிறுத்தகாலமாக அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னிரவொன்றில் காணாமல் போய்விட்டதையும், அதற்கு எவரும் உரிமை கொண்டாடாமல் இன்றுவரையுள்ளதையும் ஏன் எவரும் பேசவில்லை.

ஷஷஇனந்தெரியாத நபர்களினால்|| என்று பிரிதொரு வன்முறைக் குழுவையும் கதைக்குள் சோனியன் கொண்டுவருவது பற்றிய பக்கங்கள் விமர்சிக்கப்படாமல் விர்சகர்களால் மூடிமறைக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம்தான் என்னை கதைபற்றிய பலசாத்தியங்களையுமு; எழுதாமல் கடுக்கிறது. எனச் சொல்லாம். ஆரம்பத்தில் எந்த நோக்கில் இந்த ஆய்வை மேற்கொள்ள முயற்சித்தேனோ அந்த நோக்கங்களை தடுத்துவிடுகிறது என்றும் சொல்லவிரும்புகிறேன். குறித்த தனது நோக்கங்களை விட்டுவிடுவதினூடாக எனது அய்வு குழப்பகரமான ஒரு இடத்தை அடைந்திருப்பதை இதை வாசிக்கும் அனைவரும் உணரக்கூடியதாக இருக்கும். அதற்காக வருந்துகிறேன்.

எனினும் நான் சுட்டிக்காட்டியிருக்கும் முக்கியமான புள்ளிகளை இணைத்து உங்கள் வாசிப்பை மேற்கொள்ளும் போது எனது நோக்கத்திற்கு அருகில் நீங்கள் வரமுடியும் என நம்புகிறேன். எழுத்துக்கு முன்னே இங்கு விரிந்துள்ள அச்சுறுத்தல்களையும் நிங்கள் அவதானிக்க முடியுமு;. ஆய்வு செய்யப்போய் அதுவே ஒரு கதையாக முடிவடைவதையிட்டு மீண்டுமொரு முறை எனது வருத்தத்தையும், துயரத்தையும் தெரரிவித்துக் கொள்கிறேன்.

எனது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சோனியனின் ஷஷமுஸ்லிம் தேசமும் மரணமும்|| என்ற கதையைப் பற்றி ஆசிரியரின் குறிப்பையும் பின் இணைப்பாக்கியுள்ளேன். அத்தோடு அதில் வரும் விமர்சகர்க் பற்றிய குறிப்பினையும் சேர்த்துள்ளேன். இக்கதையின் மூலக்கதை எனக் கருதக் கூடிய புத்தகங்களின் மூன்று பதிப்புக்களும் என்னிடம் இல்லாததால் அதை எழுத முடியாதுள்ளது. எனவே நீங்கள் மூலப்பிரதிகளை தேடிப்படிப்பதற்கு ஏதுவாக சில தகவல்களை இங்கு காணலாம்.

ளு 1512ம் ஆண்டு குழந்தை விநாயகம் பிள்ளையினால் மொழிபெயர்க்கப்பட்டு அதே ஆண்டு
நீத்தார் பாடல் பதிப்பிக்கப்பட்டது. யாழ்பதிப்பகம், சோனகர் தெரு, யாழ்ப்பாணம். ஷஷவிடுதலை
வெளியீடு|| என்ற பெயரில் சுந்தரலிங்கம் ஐயரால் நிகழ்ந்து அச்சகத்தினால் அச்சிடப்பட்டது.

ளு 1813ம் ஆண்டு ஷஷகொலைகளின் தர்மம்|| என்ற பெயர்மாற்றத்திற்குட்படுத்தப்பட்டு வெளிவந்தது.
மீனகம் வெளியீPடு இலக்கம் 56, கோல்ட்ஸ்மீத் வீதி, கிரான். அச்சிடப்பட்ட அச்சகத்தின்
தகவல் இல்லை.

ளு 1926ம் ஆண்டு ஷஷசோனியின் இதிகாசம்||என்ற பெயரில் மாத்தறையைச் சேர்ந்த பண்டார
என்பவரால் அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்டுள்ளது. பதிப்பகம் முகவரி போன்ற தகவல்கள்
இல்லை.

என்னிடமுள்ள மூலப்பிரதிக்கும் சோனியனின் கதைக்கும் எதுவித தொடர்புமில்லை என என்னால் அறிய முடிகிறது. இரண்டையுமு; தொடர்பு படுத்துவதன் நோக்கம் என்னவென்பதை எழுத எனக்கு அச்சமாக உள்ளது.

ஷஷமுஸ்லிம் தேசமும் மரணமும்|| என்ற கதை குறித்து கதையாசிரியர் சோனியனின் குறிப்பு

2006 மார்கழி காலத்தின் பனிச் சொரிவின் போதும், எனது பிராந்தியத்தை வாட்டும் சிக்குன் கூன்யா என்ற காய்ச்சலின் போதும் என்னால் எழுத முடிகிறதே என்ற உணர்வை இந்தக் கதையின் பின் உணர்கிறேன். விமர்சகர்களிடேயும், வாசகர்களிடேயும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது. இந்தக் கதை பூவரசம் என்பவருடைய ஷஷசோனி|| என்ற பாப்பியத்தின் தொடர்ச்சியாகவும், அதன் கட்டுடைப்பாகவும் அமைகிறது. கதை நிகழ்ந்ததாகக் குறிப்பிடும் காலத்தில், என்னுள் பரவியிருந்த அச்சமும், வாழ்வின் மீது ஏற்றப்பட்ட அவநம்பிக்கைகளும் கொண்ட எனது நிலையை கதையெங்கும் பச்சை ஆடையாணிந்துவரும் பாத்திரத்தினூடாக வெளிப்படுத்த முயற்சித்திருக்கிறேன். கதை இரண்டு பகுதிகளைக் கொண்டதாக வாசிக்கப்படுவதாய் அறிகிறேன். அதுவும் ஒரு வாசிப்புத்தான். அதை நான் மறுக்கவில்லை ஆனால் இரண்டாம் பகுதி எனக் கருதப்படும் இடங்களில கதைசொல்லியை எதிர்க்கும் பாத்திரம் கதையிலிருந்து தப்பிப்பதற்காக கனவை உருவாக்குவதாகவும், அந்தக் கனவில் கதையிலுள்ள பாத்திரம் மாறுவேடம் பூண்டு கனவுக்குள் நுழைகிறது. அதுமட்டுமல்லாமல், கதையிலிருந்து விடுபடுவதற்கான பரிசோதனையை கனவில் நிழ்த்திப் பார்ப்பதாகவுமே அந்தக் கதை அமைந்திருக்கிறது என்பது எனது கருத்தாகும். வெளிப்படையாக முஸ்லிம் என்று வெளிக்காட்டவில்லை. ஆனால் முஸ்லிம் என்று அறியமுடியும்படி இருக்கிறது என்ற விமர்சனத்தை முற்று முழுதாக நிராகரிக்கின்றேன். பாத்திரங்களுக்கு முஸ்லிi; பெயர்கள்தான் வைத்திருக்கின்றேன். அத்தோடு அவர்கள் தொழும் காட்சியை விவரித்திருக்கும் பகுதிகள்தான் எனது எழுத்தின் பலம் எனவும் கருதுகிறேன். அதே நேரம் முஸ்லிம்தேசம் என்றால் என்ன? முஸ்லிம்கள், தமிழர்கள், சிங்களவர்கள் பொன்றவர்களின் பெருங்கதையாடல்களுக்குள் சிக்கித்தவிப்பதையுமு; வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறேன். விமர்சகர்கள் அச்சம் காரணமாக மறைபொருளாக தமது வாசிப்பைச் செய்திருக்கமுடியயும் எனவும் கருதுகிறேன். என்னுடைய எழுத்து முறைமை தொடர்பிலான பலவகை கதையாடல்களையும் காணமுடிகிறது. அவை குறித்து பிளங்கப்படுத்தும் தருணம் இதுவல்ல என நினைக்கிறேன். மற்றும் பிரதான பாத்திரம் ஆணாகவும், பெண்ணாகவும் தோற்றம் கொள்ளும் படி அமைந்திருப்பதைக் கவனிக்கத் தவறியுள்ளனர். குழந்தைகள், சிற அடையாளமுள்ளவர்கள் என கதை தரும் பல குரல் தன்மையை எவரும் பேசவில்லை. கதை கொண்டிருக்கும் ஒரு சிறு கருத்தாக்கத்தின் பின்னே விமர்சகர்கள் அலைவதை அவதானிக்க முடிகிறது. அது இன்றைய அரசியல் நிலைப்பாட்டினை மாத்திரமே கருத்திற் கொண்டு பிரதிகளை வாசிக்க முயற்சித்ததாகவே என்னால் அடையாளம் காண முடிகிறது. கதையில் வரும் பிரதான பாத்திரமொன்று விமர்சகர்கள் கருதும் பாத்திரம் பெண்ணாக மாறி நடமாடும் 13 பக்கங்களையும் துவம்சம் செய்தேவிட்டனர். எல்லோரும் ஆண் விமர்சகர்கள் என்பதால் இது நிகழ்ந்திருக்க் கூடும் என எண்ண இடமிருக்கிறது.

-யாழின் இசை நிரம்பிய
வடக்கின் கடல்களையும்,
எனது வாள்களின் பளபளப்பையும்
பாடிப்பாடி கடந்து சென்ற
ஒரு மொழிக்கான பயிற்சிதான் நமது முரண்
உன்னுடன் முரண்படுதல்
உன்னுடன் இணைதல்
என்ற பெரும் பாடலை இசைத்தபடிதான்
எனது விடுதலையை எழுதுகிறேன்.

என்ற கதையில் வரும் ஒரு நாடோடிப் பாடலை பாட முடியாத படி கதை சொல்லி முகம்மதை தடுத்து அவனுடைய நாவை அறுத்ததிலிருந்துதான் கதை சொல்லிக்கும் முகம்மதுவுக்குமிடையான உரையாடல் தொடர்கிறது. நாவறுக்கப்பட்டதன் பின்பும் முகம்மது உரையாடும் போதுதான் கதை பல திசைகளைத் திறந்துவிடுகிறது. ஆனால் விர்சகர்கள் இவ்விடத்திலிருந்துதான் கதையைச் சிதைவடையச் செய்யும் குழப்பங்கள் ஏற்படுவதாக குறை கூறுகிறார்கள். ஆனாலும் இது ஒரு புனைவு என்ற வகையில் இன்னும் பல வாசிப்புக்களைக் கோரியபடி இருப்பதை எவராலும் மழுங்கடிக்க முடியாது.

பம்புருக்கான் : 40 வுரடங்களாக தீட்சண்யம் என்ற பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக
கடமையாற்றினார். இனமுரண்பாடும் அதில் இலக்கியத்தின் பங்களிப்பும் என்றதுறையில்
மிக முக்யிமான ஆய்வை மேற்கொண்டவர்.

சரிபுத்தம்பி : இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த அகந்தைப் பல்கலைக்கழகத்தில்
நாட்டியத்துறையில் விசேட பட்டம் பெற்று அங்கே விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார்.

கந்தம் : தமிழர் தேசத்தின் ஷஷவிடுதலையாகம்|| என்ற 8160 பக்கங்களைக் கெர்ட மிக முக்கிய
நூலின் ஆசிரியர் என்று மட்டுமே தகவல் அறிய முடிகிறது.

ஷஷமுஸ்லிம் தேசமும் மரணமும் || என்ற கதையின் எழுதியிருந்தவரின் பெயரும் சோனியன்.
அதே நேரம் அதை ஆய்வுக்குட்படுத்தும் எனது பெயரும் சோனியன். எனவே நீஙகள்
குழம்பத் தேவையில்லை.

இந்தக் கதையினூடாக கதை நிகழ்ந்த இடங்களையுமு;, அதில் வரும் மனிதர்களையும்
வெளியிட முடியாதுள்ளது. அப்படி சுட்டிக்காட்டும் போது அதற்கு ஏற்படக் கூடிய
விளைவுகளையும் இங்கு எழுத முடியாதுள்ளது என்பதால் இதை நோனியனின் கதை
குறித்த ஒரு சிறு வியாக்கியானமாகக் காணலாம். கதையை வெளியிட முடியாமை தொடர்பில்
எமது சூழலை வாசகர்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.

காற்றை இரண்டு முறை சந்தித்தேன். மழைத்துளிகளால் கட்டப்பட்ட அசையும் மினரா
இறக்கைகளில் கடல் அசையும் பறவைகள். கனவுக்கு வெளியே பாய்ந்து செல்லும் இரத்தத்தில்
முளைக்கும் அரக்கர்கள், கனவுக்குள் இருந்தபடி நிஜமனிதர்களுடன் மேற்கொள்ளும்
உரையாடல், மற்றும் கதையிலிருந்து தப்பித்த சில நிமிடங்களிலே கடத்தப்படுதலும் அவை
பற்றிய விபரிப்புக்களும் வியக்கவைக்கும் மிகப் புதிய உத்திகளாகும்.

டடட

நிலம் பெருக்கெடுத்த கதைகள்

புத்தகம்
123 பக்கம்

எதேச்சையாக அந்தப் புத்தகத்தை திறந்த போது, அந்தப் புத்தகத்தின் இலக்கம் 123. இப்பக்கத்தை படித்து முடித்துவிட்டு முன்னும் பின்னுமுள்ள பக்கங்களுக்குள் நுழையத் தீர்மானித்தான். அப்பக்கதிலுள்ள லிபிகள் அவனுக்கு பரிச்சயமற்றிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பெண் நடந்து வருவதாயும், சிறுமியொருத்தி மடுவில் விழுவதாயும் இருந்தது, அச்சிறுமியைக் காப்பாற்ற முயற்சிக்கும் போது அந்தப் பக்கத்து எழுத்துக்கள் அவனுக்குப் புரியத்தொடங்கின. அந்த எழுத்துக்களுக்கிடையே எங்கோ ஒரு தொலைவில் ஷஅதான்| ரகசியமாய் சப்தமிட்டபடி வெளியேறின. அவசரமாய் புத்தகத்தை மூடிவிட்டு அக்கம் பக்கம் அவதானித்தான். அதே பக்கத்தை மீளவும் திறந்தான். வெற்றுத்தாள்கள் மட்டுமேயிருந்தன. மூடியதற்காக வருத்தப்பட்டபடியே, மூடிய அந்தப் பக்கத்தை திறந்படியே இருந்தான். ஒவ்வொரு முறையும் வேறுவேறாக இருந்த அப்பக்கத்தை அச்சத்தில் மூடாமலிருக்க விரும்பினான். அந்தப் புத்தகத்தின் பிற பக்கங்களை அவனால் திறக்க முடியாமலே போயிற்று உலகில் எங்கெங்கோ வெளியேறிய மக்கள் அந்தப் பக்கத்தில் வந்து குடியேறியபடியிருந்தனர். அதன் ஒவ்வொரு எழுத்துக்களுக்குள்ளும் அதற்கருகிலும் கூடாரமடித்து வசிக்கத் தொடங்கினர். அந்தப் பக்கம் பசியாலும், துயரத்தாலும் திறந்pதே கிடக்கிறது. அவன் விலகிச் செல்லும் போதெல்லாம் குழந்தைகளின் குரல்கள் புத்தகத்திலிருந்து வெளியேறி பிடித்துக் கொள்கின்றன. மூடப்படாத அந்தப் பக்கத்தை இனி எவர் வேண்டுமானாலும் வாங்கலாம். அது இலவசம். அவன் நிலை தெரிந்த பிறகும் என்னைப் போல பல பிரதிகளை எவராவது வாங்கக்கூடும்.

ஸெய்த்தான் குறை
53ம் பக்கம்

நீண்ட நேரமாய்É இப்போதும் நீண்ட காலமாய் காகமொன்று பறந்து கொண்டேயிருக்கிறது. அது இமர்வதற்கு வசதியாய் இதுவரை எதுவும் தென்படவில்லை. மரங்கள் தங்களது கிளைகளை மறைத்து விடுகிறது. கட்டிடங்கள் தன்னிடம் காகம் வரும்போது கரைந்து அது போனபின்பு உருவாகின்றன. தரை காற்றாகிவிட்டது. வானத்தை நோக்கி சிறகடித்து களைத்தபடி அமர்வதற்குத் தோதாய் ஏதாவதொன்றுக்காக ஏங்கியபடி சிறகுகளை உசுப்புகிறது. இன்னும் எவ்வளவு தூரம்? எவ்வளவு காலம்? அறியாத அந்தக் காகம் பறந்து கொண்டேயிருக்கிறது. தொண்ணூறுகளுக்குப் பின் ஒவ்வொரு முஸ்லிமுடைய கனவுகளிலும் இப்படித்தான் ஒரு மிகப் பெருத்த கருங்காகமொன்று தனித்து அலைவதாக பேசிக் கொள்கிறார்கள். காகத்தைத் தவிர கனவில் வேறு ஏதாவது காண்பவர்களுக்கு ஷஸெய்த்தான்குறை|க்கு தண்ணி ஓதி அடிப்பது நல்லது.

அரேபியத் தெருக்களில்
27ம் பக்கம்

ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் ஒருநாள் வெள்ளிக்கிழமை என நினைக்கிறேன். அரேபியாவின் தெருக்களில் ஒன்றின் வழியாக நடந்து கொண்டிருந்தேன். மனிதர்களின் ஓரளவு சமாந்தரமான ஒலிகள் என்னைக் கடந்து போய்க்கொண்டிருந்தன. நின்று கவனிப்பதற்குள் கடைசி ஒலிக்குறிப்புக்கள் காதுகளை விட்டுப் பிரிந்து விட்டன. எனது தற்காலிகமான இந்தப் பயணத்திற்கு காரணங்களை சொல்லமுடியாதுள்ளது. ஆனால் கற்களாலான ஒரு மனிதரை பூவைப்போல கண்டேன். இரண்டொரு முறை நிமிர்ந்து என்னைப்பார்த்தார். மூன்றாவது முறை கையசைத்து வழியனுப்பி வைத்தார். நாட்டுக்கு நேற்றிரவு திரும்பியதிலிருந்து, நான் எதைத் தொட்டாலும் பளபளக்கும் கூரிய வாளாகிவிடுகின்றன. அந்த வாளின் முன் இயந்திரங்கள் செத்துக்கொண்டிருக்கின்றன. நெஞ்சின் மூலை முடுக்கெங்கும் ஓயாது குட்டியிட்டுக்கொண்டிருக்கும் அந்த வாள், வெறும் சொற்களால் ஆனதென்று நமது எதிரிகள் கூறக்கூடும்.
நமது உதடுகளில் இருக்கும் சொற்கள் நெஞ்சுக்குள் இறங்கும் போது இன்னும் இலகுவாக அவர்களுக்குப் புரியும்.ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னான காலம் என்பது சில ஆண்டுகளுக்கு முன்புதான் எனக்கு நிகழ்ந்தது. எப்போதும் வரக்கூடியது அவருடைய காலம் எங்களுக்கு.

ஆதம் - அவ்வா
216ம் பக்கம்

அவள் கையசைத்து அழைத்துக்கொண்டு நிற்கிறாள். புன்னகைகளும் காற்றில் மிதந்தபடி இருக்கின்றன. அண்ணளவாக அவனுக்கும் அவளுக்குமிடையே நூறு மீற்றர்தான் இருக்கும். அவளை நெருங்க அவன் விரைகிறான். கால்கள் நடந்தபடியே இருக்கின்றன. மூன்று நாட்களாகியும் இன்னும் அவளருகில் செல்லமுடியவில்லை. ஓடியும் பார்த்து விட்டான். தூரம் குறைவதாயில்லை. இரைந்தபடி பல வாகனங்கள் இருவரையும் தாண்டிச் சென்றபடியிருக்கின்றன. பயணிகள் அவனை நோக்கி சிரித்துவிட்டுப் போகின்றனர். அவன் நடந்து கொண்டிருக்கும் போது வீதியிலிருந்த ஒரு வீட்டின் கதவு திறக்கப்படுகிறது. ஒரு முதியவர் அவனுக்கு அருந்த தண்ணீரும் கொடுக்கிறார். களைத்தவன் அமருகிறான். அவ்விடத்தில் இப்போதுதான் மரமொன்று கிளைகளை விரித்து நீட்டுகிறது. அவசரமாக உருவான நிழலில் எறும்பொன்று நுழைந்து கொண்டிருக்கிறது. நிமிர்ந்து பார்க்கிறான். கையசைத்தபடி அவள் அவனை அழைத்துக் கொண்டிருக்கிறாள். எழுதிக் கொண்டிருந்த நான் அவனுக்குப் பதிலாக அவளை நோக்கி நடக்கிறேன்.

தோன்றாச் சொற்களில்
12ம் பக்கம்

படிக்கப் படிக்க சொற்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. ஒருமுறை உச்சரித்த சொல்லை பிறகு காணமுடிவதில்லை. வாசித்ததும் அழியுமாறு சொற்களுக்குள் எதை ஊற்றிவைத்தானோ தெரியவில்லை. அவன் எழுதியிருந்த சம்பவங்கள் ரகசியமானவைதான். அது ஏற்றி வந்த கொடுமைகள் கூறப்படமுடியாதவைகளாகத்தான் இன்றும் நிலமை. அதை வெளிப்படையாகக் கூறினால், இனம் தெரியாத ஒருவரின் துப்பாக்கிக்கு தலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். தான் புரியாதவர்களுக்கு இரண்டாவது முறையோ அல்லது பலமுறையோ வாசிக்க முடியாமலுள்ளது. நெஞ்சுக்கு எழுத்துக்களை இடமாற்றத் தெரியாதவர்களுக்கும் பெரும் சிரமம்தான். என்ன செய்வது இந்தத் துப்பாக்கிகளுக்கு மத்தியில் விரைவாக அழிந்துவிடக்கூடிய எழுத்து உத்தியைத்ததான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆயினும் அந்த மக்களின் தலையிலுள்ள தொப்பிகளையும், பள்ளிவாயலுக்குள் சிதறிக் கிடந்த உடல்களையும் ஷதோன்றாச் சொற்களால்| படிமப் படுத்திச் செல்லும் அழகே இரத்தத்தை கொதிக்கச் செய்கிறது. அந்தக் கொலைகளுக்கு காரணமானவர்களை அவன் சொல்லாமல் விட்டுவிட்ட விதம், கொலைகாரர்களை காட்டிக்கொடுத்து விடுகிறது. வாசிப்பவர்களே கவனம்! சிலவேளை இதுவும் படிக்கப்படிக்க அழிந்து விடலாம்.

பேசும் சித்திரம்
81ம் பக்கம்

அறைச்சுவரில் மாட்டப்பட்டிருந்த சித்திரம் மின் விசிறியின் சிறுகாற்றின் அலையில் அசைந்து பலமுறை விழுந்து விட்டது. இம்முறை அசையாமல் மாட்டிவிட்டு சாப்பிடத் தொடங்குகின்றேன். அந்தச் சித்திரத்தில், ஐந்து பெண்களும், ஒரு குழந்தையும் ஒரு வாலிபனும் புற்றரைகளின் இடையே உயர்ந்த திட்டுக்களில் உட்கார்ந்திருக்கின்றனர். அருகில் மூன்று கிளைகளையுடைய பெரிய மரமொன்று வரையப்பட்டிருக்கிறது. அதன் ஒரு கிளை பட்டுப்போய் விட்டது. பட்ட கிளையின் கம்பொன்றில் அழகான அணிலொன்று கோடுகளால் கீறப்பட்டிருக்கிறது. புற்றரைகளில் அங்குமிங்குமாய் சிதறலாக சருகுகள் கீறப்பட்டிருக்கின்றன. மின் விசிறியின் காற்று சற்று வேகமாக வரும் வேளைகளில் சருகுகளின் சலசலப்பு வீடெங்கும் நிறையும்.
நான் தனித்திருக்கும் போது மட்டும்தான் சருகுகள் ஒலி எழுப்புகிறது. இதை மற்றவர்களிடம் சொல்லவும் பயமாகவே இன்றுவரையுள்ளது. இப்போது சாப்பிட்டு முடிந்து கைகழுவி விட்டேன். முன்பொருநாள் எனது வீடு தீப்பற்றிக் கொண்டது. எல்லோரும் வெளியேறிவிட்டோம். நெருப்புக்கு நடுவே வீட்டினுள்ளே எனது குழந்தை அகப்பட்டுக் கொண்டது. மரத்திலிருந்த அணில் பிள்ளையாரும் சத்தமிட்டு கத்தத் தொடங்கியது. சித்திரத்திருந்த வாலிபன் இறங்கிவந்து எனது மகளை காப்பாற்றித் தந்துவிட்டு மீண்டும் சித்திர்த்தில் நுழைந்துவிட்டான். அவனுள்ள சித்திரம், எனது உயிர், மின்விசிறி அதனை நிலத்தில் எறிய எப்படி அனுமதிக்கமுடியும்? சொல்லுங்கள்!

கழுத்தறுப்பான் கோழி
93ம் பக்கம்

குஞ்சுகள் பின்தொடர கோழி வாசலுக்கு வருகிறது. இறக்கைகள் கொட்டிவிட்ட அந்தக்கோழி எனது அறையின் ஒரு மூலையில்தான் குடியிருக்கிறது. கால்களால் நிலத்தை சீச்சபடி சத்தமிடுகிறது. நிலத்தில் விழுந்து கிடக்கும் மாவிலைகளைத்தாண்டி வெயில் பட்டு பளபளக்கும் ஒரு தகர டப்பாவைக் கடந்து குப்பை மேட்டையடைகிறது. இப்போது அதன் சத்தம் அதிகரிக்கிறது. பறந்தும், ஓடியும் குஞ்சுகள் குப்பை மேட்டைச்சூழ்கின்றன. விமானம் மாதிரி காற்றில் நீந்தி வந்த காகமொன்று குஞ்சுகளிலொன்றை கால்களால் இடுக்கியபடி சிறகடித்து காற்றில்மேலெழும்புகிறது. தென்னை மரத்தின் ஓலையில் போய் அமருகிறது. குஞ்சின் சத்தம் மெல்ல மெல்ல தணிகிறது. அடுத்த வரியின் நுனியில் அதன் உயிரின் கடைசிக் கணம் எழுதப்படப்போகிறது. ஆகையினால் நான் எழுத மறுக்கிறேன்;. சொல்லவும் அச்சப்படுகிறேன். அந்த வசனம் வரக்கூடாது என முயற்சி செய்கிறேன். அந்த வசனம் என்னை வந்தடைவதற்குள் ஒரு கல்லை எடுத்து அந்தக் காகத்திற்கு எறிய முயற்சிக்கிறேன். இதோ எறிந்து விட்டேன். பூமிக்கு சமாந்தரமாக காகமும் செங்குத்தாக கோழிக்குஞ்சும் பயணிக்கின்றன. காகத்தின் மீதிருந்த கவனம் இப்போது குஞ்சைப் பாதுகாப்பதிலே திளைத்துவிட்டது. அதன் மெல்லிய உடலின் துடிப்பு என்னில் பரவுகிறது. நீரள்ளித் தெளித்துவிட்டு அதனருகிலே உட்கார்ந்திருக்கிறேன். இது நடந்தது வரும்போதென்றால் இப்போது அது போயும் விட்டது. நான் அருகிலே அமர்ந்திருக்கிறேன். கோழியும் மற்றக் குஞ்சுகளும் அதனைச்சுற்றிச் சுற்றிக் கத்திக்கொண்டிருக்கின்றன. எனது கிழிந்த காற்சட்டையினூடாக ஏதோ நுழைவதைப் பார்த்து கோழி கொத்தித் தின்று விடுகிறது. காகம் பிடித்த குஞ்சு மெல்ல அசைகிறது. நான் எழுந்து நடக்கின்றேன். நடக்க முடியவில்லை. கால்களில் என் கண்முன்னே நகம் வளருகிறது. கைகள் இறக்கைகளாக மாறுகின்றன. உடலெங்கும்இறகு வளர்ந்தபடி இருக்கிறது. வாய் இருந்த இடத்தில் நீண்ட சொண்டொன்று முளைத்து விடுகிறது. கோழியும் குஞ்சுகளும் என்னைக் கண்டு கொக்கரித்தபடி பயந்து நடுங்குகின்றன., காகத்தை விரட்டுவதைப்போல, எனது வீட்டுத் தென்னைமர ஓலையொன்றில் நின்றபடி கோழிக்குஞ்சுகளை கவனிக்கிறேன். இப்போது எனக்கு கடும் பசி.

தற்கொலை
33ம் பக்கம்

மழைநின்று நீண்ட நேரமாகியிருக்க வேண்டும். எனது கவனத்தில் மழை வரவில்லை. மரங்களைக் காணும் போதுதான் மழையின் குளிர்ச்சி உடலில் தொற்றுகிறது. மாவிலையில் அமர்ந்திருந்த மழையின் ஒருதுளி தயங்கித் தயங்கி, மெதுவாக விளிம்புவரை பயணிக்கிறது. மாவிலையின் நுனியைப் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருக்கிறது. இமைப்பதற்குள் விழுந்து விடலாம் என்ற அச்சத்தால் இலையைவிட்டு கண்களை அப்புறப்படுத்தவேயில்லை. காற்றின் ஒரு சிறு பகுதி அந்த மரத்தைக் கடந்து போகிறது. போகும்போது இலைகள் படபடத்துத் துடிக்கின்றன. ஒருவர் தூக்கில் தொங்குவதைப் பார்த்து விட்ட சனக்கூட்டத்தைப்போல இலைகள் பரபரப்பாக இருக்கின்றன. இலையின் நுனியிலிருந்து இன்னும் அந்த மழைத்துளியின் கைகள் தவறிவிடவில்லை. இடையிடையே அந்தத் துளி எரிந்து அணைகிறது. அதிகாலை தனது உள்ளாடைகளை கழற்றத் தொடங்கிக் கொண்டிருக்கும் நேரம், நானோ எனது தொழிலிடமான நூலகம் செல்ல வீட்டிலிருந்து வெளியேறி எனது வாசலில் நிற்கிறேன். அங்குதான் இந்த மாமரம் நெடுநாளாய் நிற்கிறது. அதன் ஒரு இலையில்தான் இன்னும் சில நமிடங்களில் அந்த மழைத்துளியின் தற்கொலை நிகழப்போகிறது.

தூரத்தில் நாய்கள் குரைக்கத் தொடங்குகின்றன. நாய்கள் எப்போதும் இப்படித்தான் பழக்கமற்ற எதைக் கண்டாலும் குரைக்க ஆரம்பித்துவிடுகின்றன. அதிக காலத்துக்கும் பின்னர் வந்த மழை என்பதால், இன்று அவை குரைக்கின்றன. எனது வசாலில் நிற்கும் மாமரத்தில் எந்தப் பறவையும் அடைவதில்லை. கிளைகளால் காற்றைப் பிடித்து தாவித்தாவி மிதக்கக்கூடியது அம்மாமரம். திடீரென தனது இலைகளை அவிழ்த்துவிட்டு மழைபட்ட போதையில் ஆடத்தொடங்கிவிடும். எனது மரத்தின் நடனம் பறவைகளைப் பொறுத்தவரையில் அச்சுறுத்தலாகவே போய்விட்து. மரங்களோடு எப்போதுமில்லாத ஒரு சுமுகமான உறவை தூரத்திலிருந்து குரைத்துக் கொண்டேயிருக்கும் நாய்களோடு பறவைகளால் பேண முடிகிறது. நாய்கள் ஓயாது உரத்து ஓலமிடத் தொடங்குகிறது. அந்தச் சத்தங்கள் காற்றில் பரவியபடி மிதக்கின்றன. மாவிலையின் நுனியிலிருந்த அந்த மழைத்துளி தனது கைகளை உதறிவிடுகிறது. நாய்கள் தெற்கொலை என குரைக்கத் தொடங்கின. நான் அந்த மழைத்துளி விழுந்த இடத்தைத் தாண்டி சென்று விட்டேன்.

ஆறு
07ம் பக்கம்.

காட்டில் வழியமைத்து நடந்து செல்லும் அந்த ஆற்றைக் கடந்த பிறகு அது கரையிலடித்துச் சத்தமிடுவதைப்போல அழத் தொடங்கினாள். ஒருவர் பின் ஒருவராக ஆற்றைக் கடந்து வந்ததன் காரணங்களும் அவளுக்குத் தெரியாது. அவளுடைய கால்களில் படிந்திருந்த ஆற்றின் குளிர்ச்சி குறையத் தொடங்கியது. கால் விரிடுக்குகளில் அப்பியிருக்கும் மண்துகள்களுக்குள் ஆற்றின் அடையாளம் ஒளிந்து கொண்டிருக்கக்கூடும். அவள் அழுவதை நிறுத்தவேயில்லை. கண்களிலிருந்து ஆறு பயணிக்கத் தொடங்கியது. அவளுக்குப் பிடித்தமான இனிமையான பாடலின் முதல்வரிகளை ஆரம்பித்தபடி அவளைத் திரும்பிப்பார்க்கிறேன். அவள் உடுத்திருந்த நீல நிறச் சட்டையில் ஆறுவற்றுகிறது. கால்களால் மிதித்தபடி உரத்து பாடலைப் பாடுகிறேன். நகரத்தை அடைவதற்கு இன்னும் கொஞ்ச தூரமேயுள்ளது. எனினும் அவள் ஆற்றைக் கைவிடவில்லை. ஆறு வெள்ளமாகி பெருக்கெடுக்கிறது. அவள் மிதக்கிறாள். மூச்சுத் திணறியபடி நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். என்னைக் கரையேற்றுவதற்கான எந்த முயற்சியையும் அவள் மேற்கொள்ளவில்லை. இப்போது ஆறு அவளைப் பின்தொடர்ந்து செல்கிறது. இந்தப் பயணத்தின் ஆறாம் நாள் ஒரு மாலைநேரம் எனது எழுத்திலிருந்து அவள் தப்பித்து விட்டாள். ஒருவர் பின் ஒருவராக எனது எழுத்துக்களிலிருந்து தப்பித்தபடி ஆற்றைக் கடந்து சென்றபடி இருக்கின்றனர். அதற்கான காரணங்களை கரையிலடித்து ஆறு சத்தமிடுகிறது. எழுத்துக்களிலிருந்து நான் மெதுவாக தரையிறங்குகின்றேன். அவளுக்குப் பிடித்த அந்த இனிமையான பாடல் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

காடு
201ம் பக்கம்

அடர்ந்த மிகப்பெருங்காடு பயங்கரம் நிறைந்து எங்கும் பரவிக் கிடக்கிறது. ஒளியும் கறுப்பாகவே ஒளிர்கிறது. கைகளை அலசித் தடவிப்பார்க்கிறேன். உதவிக்கு எதுவும் தட்டுப்படுவதாயில்லை. கால்களை எட்டிவைத்து நடக்கிறேன். அது போன போக்கில் ஓடி மறைகிறது. திசைகள் எதுவென்று மனதில் தேடுகிறேன். எவ்வளவு நேரம் என்றறியாத தாகத்தின் பின் அவளுடைய கைகள் தட்டுப்படுகின்றன. அவளும் இப்போது தான் திக்குத் தெரியாத அவ்வனத்தை விட்டு வெளியேறியதாகச் சொன்னாள். தளர்வுற்ற உடல்களோடு நானும், அவளும் கனவுப்படுக்கையறையில்தான் புரண்டு கொண்டிருக்கிறோம். இடைக்கிடையே இருவரும் அவரவருக்குரிய வனத்துக்குள் சென்று வருவது புதிதல்ல.

டடட
உப இணைவு - 03

பத்திரப் படுத்திவைத்திருந்த மறுத்தோடியின் நடை வழிக்குறிப்பேட்டிலிருந்து, புத்தரின் தற்கொலை பற்றிய குறிப்புகள்.

2006.02.10

இன்றுயெனது வாசல் நிலம் வரை, உனது அதிகாரத்தின் பெயரால் புத்தர் மீண்டும் கல்லாய் போனார். இன்னும், அதிகாரங்கொண்டெழும், உனது அரசிடம் முஸ்லீம் தேச அமைச்சர்களிடம் எப்படிச் சொல்வது? அல்லது எனது பிறந்த வீடும், தாய் நிலமும், உன்னிடம் உனது படையிடம், எவ்வாறு பறிபோயின. இன்னும் கடல்தள்ளிய அலையினூடே றப்பர் டையர்களினூடே, நீளமான வாவிகளினூடே, ஆழமான பதுங்கு குழிகளினூடே எனதையும், எனது கனவுகளையும், நீ, உனது அரசு ஒதுக்கியும் விட்டிருக்கலாம். அல்லது காத்திருப்போம் காலம் வருமென அன்னேரம் நிலம் வரண்டு பிணங்களையும், வெட்டிப் புதைக்க ஈரமுமில்லாமலிருக்கலாம். அல்லது உண்மையிலேயே யாரும் யாரையும் காப்பாற்ற முடியாதும் போயிருக்கலாம். இருப்பினும், இவைகளுக்கப்பால் எனது வாசல் நிலம் வரை புத்தர்கல்லாய்ப் போனார். என்பது மட்டுமே இக்காட்சியின் இறுதி உண்மையுமாகிற்று. நடப்பட்ட மாமிசச்சிலைகள் கொஞ்சம் குருதி கசிந்து, ஏரி, கடல் மாதிரி உதிர்ந்து உருகின. அல்லது மாமிசச் சிலைகளைப்போல் திரவமாகி அழுகி அழிந்து தீர்ந்தன. என்னுள்.

2006.02.26

நேற்றிரவு உறக்கத்திலிருக்கும் போதுதான், புத்தர் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக கைது செய்யப்பட்டார். அவருடைய பெயரைக் கொலைகாரன் என்றே மக்களும், அழைக்கத் தொடங்கிவிட்டனர். சம்மந்தப்படாத குற்றச் சாட்டுக்கு எதிரான, அவனுடைய கதைகளெல்லாம் மூடப்பட்டிருந்தன. தற்கொலை செய்து கொண்டவர்களுக்கும், புத்தருக்கும் இடையில் சிறு பராயம் முதல் நிகழ்ந்த வாக்குவாதங்களும், சிறுமுரண்களும் கொலைக்கான காரணங்களாக பெருக்கெடுத்தன. உடம்பால் ஆறு வாள் வெட்டுக்கள் இருப்பதனால், இருவருமேகடைசியாய் ஒன்றாகவேயிருந்தார்கள் என்பதும், திட்டமிட்டு நிகழ்ந்த ஒரு கொலையாக தீர்ப்பளிப்பதற்கு உதவியாக இருந்தது. அவனை தூக்கிலிடுமாறு கட்டளையிடப்பட்டது.அவனது குடும்பம் கதறிக்கதறிக் கதறி அழுது கொண்டேயிருந்தனர்.

2006.03.04

அவனது ஐந்தாவது குழந்தை கைகாட்டி என்னையும் அழைத்தது. என்னால் எதுவும் இனிச் செய்யவே முடியாது. பிழை மஹாபிழை! எழுதுவதற்கு கொலை என்ற தலைப்பைத் தேர்வு செய்தது. மற்றவர்களைப் போலல்லாது இக் கொலையின் பக்கம் எனக்கேன் இவ்வளவு கவனம் என நீங்கள் கேட்கலாம். எக்காரணமுமின்றி இலகுவாக கொன்றுவிடக்கூடிய அடையாளம் எனக்கிருப்பதுதான், இக்காட்சியின் முக்கியத்துவம். உடைக்கப்பட்ட சூரியன் குறித்து தாமரைப்பூக்களுக்கிடையில் உருமாறி உடைந்த சிலைகள் நெளிந்தோடும் மீன் குஞ்சுகளின் நிழலில்; எந்த ஒரு எதிர்பார்ப்புக்கும், நான் உட்பட்டுக் கொண்டு நிற்கவில்லை. கையிலிருக்கும் எனது ரொட்டித் துண்டிற்காக நீயெனது நிலத்தின் அளவையும், தீர்மானிக்க முடிகிறாய். எனது நிலத்திலிருந்து நெல்மணி ஒன்றினையும், அள்ளிக் கொண்டு பல வகையான பறவைகளும் பறந்தன. உனது தேசத்தை நோக்கிய காட்சியாக.

2006.03.25

துயர் தகதகத்த முகத்தில் அமர்கின்றது. உதடுகளும் கரிக்கிறது. ஆனால் பதிலுக்கு அவர் மயங்கி இன்பத்தில் மூழ்கியாகிற்றார். மறுபடியும் கனவு கலையவில்லை. விடியும் வரை ஒரு குழந்தை கண்களில் மிதக்கிறது. நிர்வாணமாய், உயிரற்ற நிலையில், ஒரு இரவு முடிந்து சிட்டுக்குருவிகள் இடத்தை தேடின. மற்றுமெihரு நெடுந்துயரங்கொண்ட காலத்தில் இருட்டு இரவொன்றில் இக்காட்சி பாவம். ஒரு மிடறு நீருக்காக இழக்கப்பட்ட எனது நிலத்திலும், அலைகிறது அம்மிருகம். ஒரு பச்சை நிறப்பட்டாம் பூச்சியும், ஒரு தவளைச் சத்தமும், குருதி உறிஞ்சிய வாயுடன் ஒரு கடுவன் சிங்கமும், வெள்ளி வீதியில் மகிழ்கிறது. தனது தாகத்தை மறந்து அல்லது தாகத்தைத தீர்த்துக்கொண்டு.

2006.03.28

ஆயிரம் ஆயிரம் அழுகுரல்களுக்கப்பால் ஒரு கனாக்கண்டேன். அரபு தேசத்தின் மணல் வெளியில் நீயுமொரு ஒட்டகமாகிட, ஒலிக்குறிப்புகளை ஒரு ஆழ்ந்த இருளில் பத்திரப்படுத்தி, ஒரு நடு வழியில் வைத்திருந்தேன். பெரும் பல சிக்கல் நிரம்பியதாகவுமாகிற்று. துள்ளும் வெள்ளி மீன்களும், நிர்வாணமாய் வருடின என் இரவுகளில் பல உருக்கள், கடுமிருளுள் கரைந்தன. அவ்வுருக்கள் யாரோ? ஒட்டகமாகித் தொலைந்த ஒரு உரு நானாகவுமிருக்கலாம். அல்லாது போயின் தனித்த புலியாகவும், தனித்த சிங்கமாகவும், தனித்த குதிரையாகவுமிருந்திருக்கலாம், அச்சப்படுகிறேன்.

2006.04.02

அடர்ந்த வனத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றேன். எனக்குப்பின்னால் இருள்பாய்ந்து, பாய்ந்து வருகிறது, ஒரு சிங்கத்தை வாக்கியத்தால் எழுதியபடி சிறு நிழலில் அமர்கின்றேன். மரங்களில் தாவி பழங்களைப் பறித்து எனக்குத் தருகின்றது ஒரு பறவை. அது மரங்களில் இடையே உலாவிக்கொண்டிருக்கும். ஆற்றில் குளித்த சிங்கத்திற்கு; வாக்கியத்தாலான தன்னில்; அழியத் தொடங்கும் பிழையாக்க முடியாமல் பின் கோபங்கொண்டு என்மீது பாய்கிறது. சிங்கத்தை எழுதிய வாக்கியத்தை திரும்பவும் எழுதமுடியாமல் எனக்குள்ளிருந்த சொற்களை பிடுங்கி சிங்கத்தின் மீது வீசுகிறேன். பிடித்து மீண்டும் என்மீது எறிகிறது நிறுத்தி விடுகிறேன். சொல்லச் சொல்ல அடர்ந்த பனியிரவினில் மொழி மாற்றியது என்னுடைய கவிதையை.

2006.04.16

புழுதி குடித்துவரும் சங்கு வழலை பாம்பு போல நீள்வெளி நோக்கி நகர்கிறது கனவு. வெள்ளிகள் பூக்கவுமில்லை, இன்றிரவு படு நிலவும் தொங்கவுமில்லை. வான்புகைகிறது. கண்கள் மீழ நாவரண்டு தாகிக்கிறது. நீள் கனா வெளி, இனி எனது இரவைத் தேடுகிறேன். கிட்டாகவில்லை எனது போர்வையைத் தேடுகிறேன் கிட்டாகவில்லை. கங்குப் பாறைகள் மிதக்கும், பெரு இடவெளியில் கூர்மையாய் குடைந்து, அதன் வெளிநோக்கி அடங்கி மார்புக் குவைவுகளில் சுருங்கும் உள் வேட்கைகள் புயலாய் பெருகிப் பறந்தாகிவிட்டது. இப்போ நான் தனிமை.

2006.04.27

இன்று தாமரைப்பூக்களிடையே மல்லாந்து கிடந்தது சூரியன். உருமாறி உடைந்து; நெளிந்தோடும் மீன்களில் தனது பங்கின் அளவை நிர்ணயிக்கமுயல்கிறது. நெல்மணிகளையும், அள்ளிக்கொண்டு பறவைகளும் பறந்தன. பிரியத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய உலகமாகின இன்று. இனி பிணங்களை வெட்டிப்புதைக்க சொந்த நிலங்களுமில்லை. நடப்பட்ட பிணங்கள் குருதி கசிந்து நட்சத்திரங்கள் மாதிரி உதிர்ந்து விழுந்தன. அன்றும்; நடந்தவைகள் பற்றி கண்கள் வெடித்து அழிந்தேன்.

2006.04.29

தயவு செய்து இவ் எழுத்தில் வடியும், இரத்தத்தையும், அதன் துர் நாற்றத்தையும், சகித்துக் கொண்டு வாசிக்கவும். நினைவில் படித்த காட்சியொன்றை அழித்துவிடும். விதிகளை உருவாக்கும் ஒரு தருணத்தில் நினைவையும், காட்சியையும் இரண்டு குழாய்களில் ஊற்றிவைத்து விட்டு; சொற்கள், அகதிவாழ்வுகள் ஆயதங்கள், உயிரிழப்புகள், தொலைக் காட்சி, நாடகங்கள், அரசியல் வாதிகள், அன்புபோன்ற இரசாயனப் பதார்த்தங்கள் என உரிய அளவுகளில் கலந்து, சோதித்துக் கொண்டிருந்தது. பரிசோதனைக் கூடத்தினுள் நானும் நுழைந்து விட்டேன்.

ஒன்றை ஒன்று தாக்கமுறா வண்ணம் பாதுகாப்பாயிருந்த இரசாயனப்பதார்த்தங்கள், தாக்கமுறத் தொடங்கின. பரிசோதனைகள் கூட கட்டுப்பாட்டை மீறி நினைவுகளையும், காட்சிகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தன. அழிக்க முடியாத விதிகள் கூடமெங்கும் நிரம்பின. அதன் காரணத்தை கண்டுபிடித்தவர்கள், என்னை எனது நிலத்திலிருந்தே விரட்டத் தொடங்கினர். பின் அழிக்கத் தொடங்கினர். எனது அடையாளம்; நினைவில் படிந்த காட்சிகள் குவிந்து; அவர்களுடைய ஆயுதங்களை கேலி செய்தன. இக்காட்சிகளிலிருந்து நினைவுகள் திமிறிக் கொண்டெழுந்தன.