மஜீத்
அழுகிச்சிதைந்த பிரேதங்களை
ஆசையோடு தின்னுகிறது
இருளும் இரவும்.
பின் நானே உண்டேன்,
உயிரெல்லாம் பிரேதமானது
அதிசயம்
பிரேதங்களை தின்னாத ஓநாய்களையும்
இன்றுதான் உண்மையாகக் கண்டேன்.
சிதைந்த பிரதத்தின் துர்நாற்றம்
காற்றின் திசையெங்கும்
மனதை இழுத்துச் செல்கின்றது.
இரவு தன் அந்தரங்கங்களை
இருள் சுவர்களின் நிழலில்
புணரும் காட்சிகளே அதிகம்.
மறுநாள் பகலில் பசி அதிகரிக்க
நானே பிரேதங்களை விரும்பி உண்டேன்.
சுவையுமில்லாது போயிற்று.
பிரேதங்களைப் பற்றிய வாழ்வை
இனி எழுத முடியாதுமாகிற்று.
கனவு மனதை இழுத்துச் செல்கிறது.....
சுவர்களின் நிழலில்
இன்னும் அதிக அதிகமான பிரேதங்கள்
வந்தவண்ணமிருந்தன.
நானே விரும்பி சுவைத்துக்கொண்டுமிருந்தேன்.