வெள்ளி, டிசம்பர் 31, 2010

முட்டையிடும் நாய்கள்பைசல் கவிதை
இதை அனுப்பும்போது
''இந்த கவிதையை வாசித்துவிட்டு கவிதைதான் என்றால்
உங்களின் வலைத்தளத்தில் இடுங்கள்''
என்று சொல்லியிருந்தார்.


மூன்று பன்றிகளுக்கு நடுவில் ஒரு நாய்.
பன்றிகள் இறைச்சியை சாப்பிடுகின்றன
நாயும் இறைச்சி சாப்பிடும்தானே.
ஏன் அது பன்றிக்கு தெரியவில்லை
தெரிந்தும் பங்கு கொடுக்காமல் தான் மட்டும் சாப்பிடுகின்றன.
அப்படித்தான்.


நாய்கள் பசியில் தன் நிழலை சாப்பிடுகின்றன.


வாய்க்குள்ளிருக்கும் இறைச்சியை உண்பதா
நாய் சாப்பிடுகின்றதுபோல் நிழலைச் சாப்பிடுவதா?சில நேரம் நிழல் மிக சுவையாகயிருக்கும் என எண்ணின


சாவின் அறிகுறி தெரியுமா?

அதன் இசை காதுகளுக்குள் இறங்குமா?

இது பற்றி நாயிடமும்இ பன்றிகளிடமும் கேட்போம்


கடைசியாக என் கண்களால் ஒரு காட்சி கண்டேன்
நாய்கள் முட்டையிடுகின்றன
நாய்கள் முட்டையிடுகின்றன