றியாஸ் குரானா, சாஹிப்கிரான் கவிதை தொகுப்பு விமர்சன அரங்கின் போதான சில விவாத துளிகள்...
by Thiru Ji on Tuesday, April 10, 2012 at 6:25pm ·
* தக்கை விமர்சன அரங்கில் நடந்ததை போலவே விவாதத்தை பா.வெங்கடேசன் துவக்கி வைக்க ஆதவன் தீட்சண்யா முடித்து வைக்கும் படலம் தொடர்ந்தது... அன்றைக்கு எல்லா விவாதத்திலும் உற்சாகமாக பங்கேற்று மேற்கொண்டு விவாத பொருளை முன்னெடுத்து சென்ற யவனிகா ஸ்ரீராம் மிஸ்ஸிங். தக்கை கூட்டத்தை போலவே மிக நிறைவாக முடிந்தது. விவாதத்தின் சில முக்கிய துளிகள்.
* வா.மணிகண்டனின் உரை தேர்ந்த வாசிப்பனுபவத்தை உணர்த்துவதாக இருந்தது. றியாஸ் கையாண்டிருக்கும் poetry technologies பற்றிய தன் உரையை தொடங்கும் முன், சமீப கால கவிதை உலகில் மிகப்பெரும் வீச்சை ஏற்படுத்திய கவிதை தொகுப்புகளை வெளியிட்ட "புது எழுத்து" க்கும், அதன் ஆசிரியர் மனோன்மனிக்கும், நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
* ஆதவன் தீட்சண்யாவின் றியாஸ் குரானாவின் கவிதை தொகுப்பின் மீது அவர் வைத்த பார்வை தான் விவாதத்தின் பெரும்பான்மையான எரிபொருளை நிரப்பியது.
*அவர் முன்வைத்த கருத்து. "இந்தியாவில் ஒருவன் எந்த வித அரசியல் சார்பும், புறச்சூழலின் எந்த பாதிப்பும் இல்லாமல் ஒருவன் வாழ்ந்துவிட முடியும். ஆனால் றியாஸ் ஈழத்தில் வாழ்பவர். அங்கே எந்த ஒரு மர மட்டையும் புறச்சூழல்களின் பாதிப்பு இல்லாமல் வாழ்ந்துவிட முடியாது. அப்படி வலியும் வேதனையுமான ஒரு அசாதரணமா சூழலில் வாழ்ந்த றியாஸ் என்ற படைப்பாளியின் இந்த தொகுப்பில் அப்படியான புறவழிபாதிப்புகள் இந்த படைப்பில் இல்லை. தான் வாழும் காலத்தை இந்த கவிதைகள் பிரதிபலிக்கவில்லை. படைப்பாளி என்பவன் தான் வாழும் காலத்தை பிரதிபலிக்கவேண்டும். அது இதில் மிஸ்ஸிங். 50 ஆண்டுகள் கழித்து ஒரு கவிதையை வாசிப்பவன் இந்த கவிதைக்கான காலநிலை இல்லாமல் வாசிக்கப்படும்போது அது வெறும் சாதாரண பிரதியாகத்தான் இருக்கும்" என்கிற அர்த்தத்தில் பேசி முடித்தார். இதை பா.வெங்கடேசன் வரவேற்றார்.
* இதற்க்கு பீர் முஹம்மது கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து. சில கவிதைகளை மேற்கோள் காட்டினார். விவாதம் மேற்கொண்டு தொடர்ந்தது.
* அப்போது குறுக்கிட்ட கவிஞர் பத்மபாரதி(சிவா), றியாஸின் கவிதைகள் காலத்தை பிரதிபலிக்கவில்லை என்றாலும், அவரின் கவிதைகள் பேசும் மொழியாடல்களும், கட்டுடைக்கும் போக்குகளும், மணிகண்டன் மேற்கோள் காட்டிய எதிர்பாரதன்மைகளாலுமே இந்த கவிதைகள் நிலை பெற்று நிற்கும், இந்த கவிதைகள் நிலைபெற இவற்றின் மொழியே போதுமானது என்று ஒரு நீண்ட கவிதையை வாசித்தார்.
* அதற்கு ப.வெங்கடேசன் மொழி மட்டுமே கவிதை ஆகாது, ஒரு படைப்பாளி நிச்சயம் காலத்தை முன் நிறுத்தத்தான் வேண்டும். ஒரு படைப்பாளி எழுதி தான் காலத்தை கடக்கிறான். அவன் வாழும் காலத்தை பதிவு செய்யவேண்டும் என்று விவாதிக்கும் பொழுது. authors death பற்றி பேசி முத்தாய்ப்பாக முடித்தார். ஒரு படைப்பாளி தன் படைப்பை முடிக்கும் போது வாசகனாகவும் தன் படைப்பை பூர்த்தி செய்து சீல் வைக்கவேண்டும். அப்படி வரும் படைப்புகள் தான் வாசக பிரதியாகிறது. மற்றவை வெறும் பிரதிகளாக கடந்து செல்கிறது.
* சாகிப்பின் கவிதைகள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் பேசிய நண்பர்கள். இவரின் கவிதைகள் அது எழுதப்பட்ட காலத்திலேயே தொகுப்பாக வந்திருக்கவேண்டியவை. இப்போது இது சற்றே பழையதாகிவிட்டதாக தெரிவித்தார்கள். இது ஐந்தாடுகளுக்கு முன்பே வந்திருக்கவேண்டிய முக்கியமான படைப்பு. இந்த பிரச்னை கவிதைக்கு தான் இருக்கிறது, கதைகளுக்கு இல்லை என்றார் பா.வெங்கடேசன். இதே ஆபத்து வே.பாபுக்கும் இருப்பதாக ஆதவன் கவலையோடு தெரிவித்தார்.
* பின் விவாதம், புத்தகமாகும் சிரமங்கள், பதிப்பக துறையின் சிக்கல்கள் பக்கம் தாவியது. மனோன்மணியம் அவர் எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும், வியாபாரமாகிவிட்ட இலக்கியம் குறித்தும், கவிதை நுல்களின் தேக்கம் குறித்தும் பேசினார்.
*எந்த பதிப்பகமும் இப்போதெல்லாம் கவிதை தொகுப்பை போட முன்வருவதில்லை என்று தொடர்ந்த விவாதம் இப்போதெல்லாம், ஒரு கவிதை தொகுப்பு 50 பிரதிகள் தான் அச்சிடுகிறார்கள். பின் அதன் விற்பனையை பார்த்து தான் மேற்கொண்டு அச்சிடுகிறார்கள் என்று மனோன்மணி பகிர்ந்துகொண்டபோது, ஒரு வித சோக ரேகை அறையை கவ்வியது. தூரன் குணா தன் கவிதை தொகுப்பிற்கு எழுதிய அஞ்சலி குறிப்பு ஏனோ நினைவுக்கு வந்தது...
* விவாதங்கள் மனதில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஸ்ரீநியை சந்திக்கும் போது மீண்டும் தொடரும். பாலா, குணா கலந்துகொள்ளாதது இழப்பு தான். வேறொரு shade கிடைத்திருக்கும்.
* நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததோடு நின்று விடாமல், அதை முகநூல் நண்பர்களுக்கு பகிரும் வண்ணம் என்னை எழுதவைத்த பெரியசாமிக்கு நன்றி.
நிகழ்வின் புகைப்பட தொகுப்பு : http://www.facebook.com/media/set/?set=a.417737164907891.112866.100000148341466&type=1