1.
பறக்கும் எலி ஒன்று
எனக்கு வாடகைக்கு வேண்டும்
எனது வரிகளுக்குள்
ஓடித்திரியக்கூடிய
மீன் குஞ்சுகள் வேண்டும்
வரிசையிலிருந்து விலகினாலும்
சொற்கள் மிக நெருங்கி நடக்கின்றன
பறக்கும் எலி ஒன்று
எனக்கு வாடகைக்கு வேண்டும்
எனது வரிகளுக்குள்
ஓடித்திரியக்கூடிய
மீன் குஞ்சுகள் வேண்டும்
வரிசையிலிருந்து விலகினாலும்
சொற்கள் மிக நெருங்கி நடக்கின்றன
பூனையா அல்லது மனிதனா என
கண்டுபிடிக்க முடியாமல்
நிழல் ஏமாற்றுகிறது
இதில் ஏதாவதொன்று
கைகூடும்போது உங்களிடம் சொல்லுவேன்
அப்போது நீங்கள் வாசிக்கலாம்.
கண்டுபிடிக்க முடியாமல்
நிழல் ஏமாற்றுகிறது
இதில் ஏதாவதொன்று
கைகூடும்போது உங்களிடம் சொல்லுவேன்
அப்போது நீங்கள் வாசிக்கலாம்.
2.
ஒரு வசதிக்காக
கண்ணாடியை புத்தகமென்று சொன்னேன்
அந்த மூன்று பக்கக் கண்ணாடி
பன் மடங்காக பெருகிக்கொண்டிருக்கிறது
கண்ணாடியை புத்தகமென்று சொன்னேன்
அந்த மூன்று பக்கக் கண்ணாடி
பன் மடங்காக பெருகிக்கொண்டிருக்கிறது
3.
என்க்கொரு ஜன்னல்
வாடகைக்கு கிடைத்தது
அதன் வழியே பார்க்கும்போது,
வாகனங்கள் தடுமாறின
பயணிகள் பதட்டப்பட்டனர்
எப்போதும் மூடியிருக்கும்
ஜன்னல் வழி பார்த்தால்
இப்படித்தானிருக்குமென்றான் நண்பன்
திறந்தால் வாடகை அறவிடப்படும்
மரங்களின் மீது
காற்றின் நடவடிக்கைகளைக்கூட
கவனிக்க தயக்கமாக இருக்கிறது.
வாடகைக்கு கிடைத்தது
அதன் வழியே பார்க்கும்போது,
வாகனங்கள் தடுமாறின
பயணிகள் பதட்டப்பட்டனர்
எப்போதும் மூடியிருக்கும்
ஜன்னல் வழி பார்த்தால்
இப்படித்தானிருக்குமென்றான் நண்பன்
திறந்தால் வாடகை அறவிடப்படும்
மரங்களின் மீது
காற்றின் நடவடிக்கைகளைக்கூட
கவனிக்க தயக்கமாக இருக்கிறது.
4.
இந்தக் கதையை
இங்கே எளிதாகச் சமாளிக்கலாம்,
அதைப் பகிர்ந்து கொள்ள முடியாது
பாம்பு அளவிலான கதை என
நாம் அதை அழைக்கலாம்
படுக்கையiiறையிpலிருந்து
தாமதமாகவே கிடைத்தது அந்த சமிக்ஞை
நேற்று மழை நேரத்தில்
என்னோடுதான் இருந்தாள்
எங்கள் சுவாசங்களுக்கிடையே
இங்கே எளிதாகச் சமாளிக்கலாம்,
அதைப் பகிர்ந்து கொள்ள முடியாது
பாம்பு அளவிலான கதை என
நாம் அதை அழைக்கலாம்
படுக்கையiiறையிpலிருந்து
தாமதமாகவே கிடைத்தது அந்த சமிக்ஞை
நேற்று மழை நேரத்தில்
என்னோடுதான் இருந்தாள்
எங்கள் சுவாசங்களுக்கிடையே
மிகுந்த இடைவெளி இருந்தது
எனக்கு மேலாக
அவள் நதிபோல பயணிக்கும் வழி உருவானது
வழமைக்கு மாற்றமாக நேரம்
ஒரே இடத்தில் நின்று நகராமல் நீண்டது
ஒரு கூட்டை வெற்றாக உருவாக்கினாள்
இரவு உடைந்து
சிற்றுண்டிபோல மேசையில் பரவியது
இரவு ஒரு சமுத்திரம்
அதன் அடிப்பகுதி மிக ஆழமானது
மூழ்கிக் கொண்டிருக்கும்போது
இன்னும் ஆழத்திற்கு இழுத்தாள்
பாம்பு அளவிலான கதை என
சொன்னது தவறாகிவிட்டு
ஏனெனில்,பாம்பாகவே மாறிவிட்டது கதை.
எனக்கு மேலாக
அவள் நதிபோல பயணிக்கும் வழி உருவானது
வழமைக்கு மாற்றமாக நேரம்
ஒரே இடத்தில் நின்று நகராமல் நீண்டது
ஒரு கூட்டை வெற்றாக உருவாக்கினாள்
இரவு உடைந்து
சிற்றுண்டிபோல மேசையில் பரவியது
இரவு ஒரு சமுத்திரம்
அதன் அடிப்பகுதி மிக ஆழமானது
மூழ்கிக் கொண்டிருக்கும்போது
இன்னும் ஆழத்திற்கு இழுத்தாள்
பாம்பு அளவிலான கதை என
சொன்னது தவறாகிவிட்டு
ஏனெனில்,பாம்பாகவே மாறிவிட்டது கதை.
5.
கல்லை கடலில்
எறிவதற்கு முன்
அந்த அத்தியாயம் முடியவே முடியாது,
அதே நேரம்
இன்றைய பிற்பகல் மிகவும் சிறது
நான் அஞ்சவில்லை
நெரிசான கடற்கரையில்
பக்கங்களின் வழியாக
கவிதையின் ஆரம்பத்தில்
ஒரு குழந்தை நடந்து செல்கிறது
எறிவதற்கு முன்
அந்த அத்தியாயம் முடியவே முடியாது,
அதே நேரம்
இன்றைய பிற்பகல் மிகவும் சிறது
நான் அஞ்சவில்லை
நெரிசான கடற்கரையில்
பக்கங்களின் வழியாக
கவிதையின் ஆரம்பத்தில்
ஒரு குழந்தை நடந்து செல்கிறது
இரவு இந்தச் சம்பவத்தை
இழந்தபடி வருகிறது
சரியான தூரத்திலிருந்து
குழந்தை ஓடத்தொடங்குகிறது
கல்லை எடுத்து கடலில் வீசுகிறேன்.
குழந்தையின் குடும்பம்
இவை எதையும் அறிந்திருக்கவில்லை.
இழந்தபடி வருகிறது
சரியான தூரத்திலிருந்து
குழந்தை ஓடத்தொடங்குகிறது
கல்லை எடுத்து கடலில் வீசுகிறேன்.
குழந்தையின் குடும்பம்
இவை எதையும் அறிந்திருக்கவில்லை.
6.
எழுதப்பட்ட குறியீட்டை உடைத்து
ரகசியம் கலைத்து
கடைசியில்,
நாயொன்றுக்கு எழுதப்பட்ட
இரங்கற் பா என
அதை வாசித்தபோது
வாலாட்டிக் கொண்டு வந்தது நாய்
விரட்ட மனமின்றி
அந்தப் பிரதியிடம்
பரிதாபகரமாக நான் தோற்கிறேன்.
ரகசியம் கலைத்து
கடைசியில்,
நாயொன்றுக்கு எழுதப்பட்ட
இரங்கற் பா என
அதை வாசித்தபோது
வாலாட்டிக் கொண்டு வந்தது நாய்
விரட்ட மனமின்றி
அந்தப் பிரதியிடம்
பரிதாபகரமாக நான் தோற்கிறேன்.
7.
நெடு நாட்களுக்குப் பின்
மிக ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தபோது,
பகல் பொழுது
இரண்டாக பிளந்துவிட்டது
ஒரு பகுதியிலிருந்து
மறு பகுதிக்காக காத்திருக்கிறேன்
மீண்டும் இணையும்போதுதான்
எனது நாள் முடிவடையும்
எவ்வளவுதான் நகர்ந்தாலும்
காலம் ஒரே இடத்தில் நிற்கிறது
மிக ஆழமாக உறங்கிக்கொண்டிருந்தபோது,
பகல் பொழுது
இரண்டாக பிளந்துவிட்டது
ஒரு பகுதியிலிருந்து
மறு பகுதிக்காக காத்திருக்கிறேன்
மீண்டும் இணையும்போதுதான்
எனது நாள் முடிவடையும்
எவ்வளவுதான் நகர்ந்தாலும்
காலம் ஒரே இடத்தில் நிற்கிறது
நீ வநடதிருக்காவிட்டால்
பகலை இரண்டாக துண்டாட
பகலை இரண்டாக துண்டாட
அறிந்திராமலே ஒரு நாளைக் கடத்தியிருப்பேன்.
8.
நினைவின் ஒரு முனையில் அவள்
மறு முனையில் புத்தகம்
மற்றுமொரு முனையை எனக்காக
எழுதியபோது,
இராணுவத்தின் சோதனைச் சாவடியைக்
கடப்பதுபோல நினைவின் பாதைகளில்
பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறேன்.
எதிர்பாராத விதமாக
ஒப்பீட்டளவில் முட்டாள்தனமான சுமையாக
புத்தகம் என்னிடம் நகர்ந்து வருகிறது
மறு முனையில் புத்தகம்
மற்றுமொரு முனையை எனக்காக
எழுதியபோது,
இராணுவத்தின் சோதனைச் சாவடியைக்
கடப்பதுபோல நினைவின் பாதைகளில்
பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறேன்.
எதிர்பாராத விதமாக
ஒப்பீட்டளவில் முட்டாள்தனமான சுமையாக
புத்தகம் என்னிடம் நகர்ந்து வருகிறது
பின்வாங்கிச் சென்ற அவள்
கவிதைகளை நம்புவதால்
புத்தகத்தைக் கைப்பற்றுகிறாள்
கடைசியில் எனக்கு என்ன நடந்திருக்கும்
அதை உங்கள் நினைவுகளில்
கேள்விப்படுவீர்கள்.
கவிதைகளை நம்புவதால்
புத்தகத்தைக் கைப்பற்றுகிறாள்
கடைசியில் எனக்கு என்ன நடந்திருக்கும்
அதை உங்கள் நினைவுகளில்
கேள்விப்படுவீர்கள்.
9.
நான் செலவளித்த
அதிக நேரங்களுக்குள்
ராணிகளின் குரல் இருந்தது
முயற்ச்சி செய்து பார்க்கிறேன்
இன்னும் காயமடைந்த நிலையில்தான்
அவை உள்ளன
அந்த வயது,
மீண்டும் என்னை அழைத்து
நீரில் மூழ்கச் செய்து காப்பாற்றிக் காட்டியது
அதிக நேரங்களுக்குள்
ராணிகளின் குரல் இருந்தது
முயற்ச்சி செய்து பார்க்கிறேன்
இன்னும் காயமடைந்த நிலையில்தான்
அவை உள்ளன
அந்த வயது,
மீண்டும் என்னை அழைத்து
நீரில் மூழ்கச் செய்து காப்பாற்றிக் காட்டியது
10.
இந்தப் படம் கற்பனை அல்ல
நிஜ உலகிலும்
இந்தச் சம்பவங்கள் சிறிதுமில்லை
ஒரு கட்டத்தில்
கீறப்பட்ட மனிதர்கள்
அப்பட்டமான உண்மைகளை
தந்தபடி இருந்தனர்
இருட்டில் வீசப்பட்ட கனவுகளை
உரையாடலுக்குள் வசதியா
வாழவைத்திருந்தனர்
நிஜ உலகிலும்
இந்தச் சம்பவங்கள் சிறிதுமில்லை
ஒரு கட்டத்தில்
கீறப்பட்ட மனிதர்கள்
அப்பட்டமான உண்மைகளை
தந்தபடி இருந்தனர்
இருட்டில் வீசப்பட்ட கனவுகளை
உரையாடலுக்குள் வசதியா
வாழவைத்திருந்தனர்
உங்களை தனியே
ஒரு அறையில் விட்டுவைத்திருந்தால்
இந்தப் படத்தைப் பற்றி
நீங்கள் பேசிக்கொண்டிருப்பீர்கள்
நான் படத்திலிருப்பேன்.
ஒரு அறையில் விட்டுவைத்திருந்தால்
இந்தப் படத்தைப் பற்றி
நீங்கள் பேசிக்கொண்டிருப்பீர்கள்
நான் படத்திலிருப்பேன்.
11.
இரண்டு பக்கத்திலிருந்தும்
நம்மைச் சந்திக்க கடல் வருகிறது
அப்போது, நிலத்தில்
உன்னை கற்பனை செய்கிறது நிழல்
ஒரு கோணத்திலிருந்து
பார்க்கும்போது
சரிந்த பாதி நிழலில் இருந்து
நீ வெளியேறிச் செல்கிறாய்
எப்படி நீண்ட காலம் வரை
நகரம் எரிகிறது என ஒருவன் வினவினான்
அவன்தான் குற்றமிழைக்கும் ஆதம்
நம்மைச் சந்திக்க கடல் வருகிறது
அப்போது, நிலத்தில்
உன்னை கற்பனை செய்கிறது நிழல்
ஒரு கோணத்திலிருந்து
பார்க்கும்போது
சரிந்த பாதி நிழலில் இருந்து
நீ வெளியேறிச் செல்கிறாய்
எப்படி நீண்ட காலம் வரை
நகரம் எரிகிறது என ஒருவன் வினவினான்
அவன்தான் குற்றமிழைக்கும் ஆதம்
12.
அவளைப் பின்தொடர்ந்து செல்கிறது நெடுஞ்சாலை
பதற்றத்துடன் திருமபிப் பார்க்கிறாள்
யாருமில்லை
எதுவும் பின்தொடரவுமில்லை
சாலையின் இருமருங்கும் மாறியிருக்கிறது
மெல்ல நடக்கத் தொடங்குகிறாள்
வேகம் அதிகரிக்கிறது
ஓட்டம் பிடிக்கிறாள்
வீட்டை அடைந்ததும்
மூச்சிரைக்க திரும்பி சாலையைப் பார்க்கிறாள்
பதற்றத்துடன் திருமபிப் பார்க்கிறாள்
யாருமில்லை
எதுவும் பின்தொடரவுமில்லை
சாலையின் இருமருங்கும் மாறியிருக்கிறது
மெல்ல நடக்கத் தொடங்குகிறாள்
வேகம் அதிகரிக்கிறது
ஓட்டம் பிடிக்கிறாள்
வீட்டை அடைந்ததும்
மூச்சிரைக்க திரும்பி சாலையைப் பார்க்கிறாள்
செத்த பாம்பைப்போல அசையாமல் கிடக்கிறது
தனது காலடிச் சத்தம்தான்
தன்னைக் கலவரப்படுத்தி துரத்தியதாக
நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைகிறாள்
இப்படி பல சம்பவங்களை உருவாக்கியே
நான் தனிமையைக் கடக்க முயற்சிக்கிறேன்.
தனது காலடிச் சத்தம்தான்
தன்னைக் கலவரப்படுத்தி துரத்தியதாக
நினைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைகிறாள்
இப்படி பல சம்பவங்களை உருவாக்கியே
நான் தனிமையைக் கடக்க முயற்சிக்கிறேன்.
13.
நீண்ட நாட்களாக தனிமையை வெறுத்து
தனது கப்பலின் முற்பகுதியை
சத்தங்களுக்குள் மூழ்கச் செய்கிறாள்
எந்த இரைச்சலையும்
என்னால் எழுப்ப முடியவில்லை
அவளை கடந்து செல்கிறது
ஒரு பேரலை அமைதியாக
தனது வீட்டின் திறந்த ஜன்னலினூடாக
இதை வீதியெங்கும் செய்துகொண்டிருக்கிறாள்.
தனது கப்பலின் முற்பகுதியை
சத்தங்களுக்குள் மூழ்கச் செய்கிறாள்
எந்த இரைச்சலையும்
என்னால் எழுப்ப முடியவில்லை
அவளை கடந்து செல்கிறது
ஒரு பேரலை அமைதியாக
தனது வீட்டின் திறந்த ஜன்னலினூடாக
இதை வீதியெங்கும் செய்துகொண்டிருக்கிறாள்.
14.
மழையில்லை,வித்தியாசமான காற்று
கடந்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை மாற்றுகிறது
எதற்கானதாகவோ இருக்க வேண்டிய
ஒரு வாய்ப்பை இழந்துவிட்டேன்
தற்பொழுது என்ன செய்ய வேண்டும்
என்ன இது ?
நான் என்ன சொல்ல வருகிறேன் ?
எனது அறையின் தோல்வி
அதற்கு வெளியே வந்துவிட்டதாலா
இல்லை உள்ளே இருப்பதாலா
கடந்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை மாற்றுகிறது
எதற்கானதாகவோ இருக்க வேண்டிய
ஒரு வாய்ப்பை இழந்துவிட்டேன்
தற்பொழுது என்ன செய்ய வேண்டும்
என்ன இது ?
நான் என்ன சொல்ல வருகிறேன் ?
எனது அறையின் தோல்வி
அதற்கு வெளியே வந்துவிட்டதாலா
இல்லை உள்ளே இருப்பதாலா
15.
வீட்டினுள் பறவை நின்றால் என்ன செய்வீர்கள்..?
ஜன்னலைத் திறந்து
அது பறக்கட்டும் என முயற்சித்தாலும்
சுவர்களில் முட்டி
பதட்டத்தை உருவாக்கிவிடும்
கூரையை வானமென கருதாமல்
கொலை செய்ய துடிப்பவராக
அது கருதிவடுகிறது
உங்கள் நடமாட்டம் அதை அச்சப்படுத்தும்
என்பதால் அது வெளியேறும்வரை
ஜன்னலைத் திறந்து
அது பறக்கட்டும் என முயற்சித்தாலும்
சுவர்களில் முட்டி
பதட்டத்தை உருவாக்கிவிடும்
கூரையை வானமென கருதாமல்
கொலை செய்ய துடிப்பவராக
அது கருதிவடுகிறது
உங்கள் நடமாட்டம் அதை அச்சப்படுத்தும்
என்பதால் அது வெளியேறும்வரை
வெளியே நீங்கள் காத்திருக்கவும் மாட்டீர்கள்
அப்படி என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..
சொன்னால்,
எப்போதாவது எனது வீட்டுக்குள்
பறவை வந்துவிட்டால் அதை பிரயோகிப்பேன்..
அப்படி என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..
சொன்னால்,
எப்போதாவது எனது வீட்டுக்குள்
பறவை வந்துவிட்டால் அதை பிரயோகிப்பேன்..
16.
வீட்டினுள் பறவை நின்றால் என்ன செய்வீர்கள்..?
ஜன்னலைத் திறந்து
அது பறக்கட்டும் என முயற்சித்தாலும்
சுவர்களில் முட்டி
பதட்டத்தை உருவாக்கிவிடும்
கூரையை வானமென கருதாமல்
கொலை செய்ய துடிப்பவராக
அது கருதிவடுகிறது
உங்கள் நடமாட்டம் அதை அச்சப்படுத்தும்
என்பதால் அது வெளியேறும்வரை
ஜன்னலைத் திறந்து
அது பறக்கட்டும் என முயற்சித்தாலும்
சுவர்களில் முட்டி
பதட்டத்தை உருவாக்கிவிடும்
கூரையை வானமென கருதாமல்
கொலை செய்ய துடிப்பவராக
அது கருதிவடுகிறது
உங்கள் நடமாட்டம் அதை அச்சப்படுத்தும்
என்பதால் அது வெளியேறும்வரை
வெளியே நீங்கள் காத்திருக்கவும் மாட்டீர்கள்
அப்படி என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..
சொன்னால்,
எப்போதாவது எனது வீட்டுக்குள்
பறவை வந்துவிட்டால் அதை பிரயோகிப்பேன்..
அப்படி என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..
சொன்னால்,
எப்போதாவது எனது வீட்டுக்குள்
பறவை வந்துவிட்டால் அதை பிரயோகிப்பேன்..