வெள்ளி, நவம்பர் 09, 2012

10

x

புதிய காட்சிகளைப் பிடிக்க ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறேன்.
மலைகளும் வானும் மேகங்களுமென
திரும்பத் திரும்ப அவைதான் குறுக்கிடுகின்றன
புறக்கணிக்க முடியாத நிலையில்
அவைகளை புதிதாக மாற்ற நினைக்கிறேன்
எழுதுகிறேன்.
நீங்களோ அவை கற்பனை என்கிறீர்கள்

y

சிறுவயதிலிருந்தே எனக்குத் தெரிந்த ஒரு மரம்
கதை ஒன்றுக்குள் வசிக்க வந்தபோது,
தண்ணீருக்காக சிரமம்பட வேண்டியதாயிற்று
நட்சத்திரம் தனது கிளையில் அமரும் வசதி
கதையினுள் இருந்தாலும்,
அனைத்துப் பிற்பகலிலும்
தண்ணீர் ஊற்றாமல்
அதன் கீழ் கதைத்திருக்கவே வருகிறார்கள்
என நினைக்குமாதலால்
அந்தக் கதையை வீசி எறிகிறேன்.