வெள்ளி, நவம்பர் 09, 2012

12

மேலிருந்து எட்டிப் பார்க்கிறேன்.
இரண்டு வீடுதாண்டி வளைந்துவிடும்
தெருவால் நடப்பேன்
வலது பக்கம் இருக்கும் கடையில்
பகலுணவை வாங்கி
அங்கே சாப்பிடுவேன்
அல்லது வீடு வந்து..
பணம் கிடைக்கும்போது
ஏதாவதொரு நாளின் பகலுணவாக இருக்கலாம்
ஆமாம், நிச்சயமாக பகலுணவிலிருந்து
தொடங்குவேன்.