வெள்ளி, நவம்பர் 09, 2012

14

1.
வெகு நாட்களாக மணிச்சத்தம் 
கேட்டுக்கொண்டே இருக்கிறது.
சலங்கைச் சத்தம் கேட்டால், 
பின்னால் யானை வரவேண்டும்.
இன்னும் அந்த யானை வரவே இல்லை.
சலசலப்பு ஓய்ந்தபாடும் இல்லை.
யானையை என்ன செய்தீர்கள்.

2.

கட்டிடத்திற்கு உள்ளிருந்து
ஒரு பெண்ணின் கை வெளியேறிக் கொண்டிருக்கிறது
கையிலிருந்த குச்சியை
எறிகிறாள்
நழுவவிடுகிறாள்
பலவகையான கருத்துக்கள்
வாதிக்கப்படுகின்றன.
தெருவில் நடந்து சென்றவரின்
தலையில் குச்சி இறங்கியிருக்கிறது.
தற்போது,
விவாதம் பெண்ணின் கையா
அல்லது ஆணின் கையா என மாறியிருக்கிறது.
வேலை முடிந்ததும்
வந்து கலந்துகொள்கிறேன் எனச் சொல்லி
வீடு வந்தேன்.
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்
216வது பக்கத்திலிருந்து
நாளை வாசிக்கத் தொடங்க வேண்டும்.