வெள்ளி, நவம்பர் 09, 2012

13

1.
இப்போதுதான் நினைவுக்கு வருகிறது
புல் இனிப்பாக இருந்தது
ஆற்றில் மெதுவாக நீர் நழுவிக்கொண்டு இருக்கையில்
மாடுபோல நடித்து
புற்களை சாப்பிட்டேன்
எனதருகில் மேய்ந்த மாடுகளும்
பசி தாங்காதவர்கள் நடித்ததாக
இருக்கக் கூடும்.
புல் இனிக்குமளவு
உங்களில் யாருக்கு வறுமை

2.
ஒருவர் பின் ஒருவராக எனது முகத்தை வரைந்து தோற்பதைவிட,
என்னை வெட்டி தாள்களில் ஒட்டுங்கள்.
ஒரு வசதிக்காக அசையாப் படமாக நிற்கிறேன்
ஒட்டிய பிறகு அசைவேன்.
துள்ளிவந்து மான் தண்ணீர் குடிக்கும்போது
அசைந்தால் அனைத்தும் மாறிவிடுமே
என்ன செய்வதென்று விசாரித்தான்......
என்னையும் காட்டுவாசி என்றுதான் நினைக்கும்
எனச் சொல்pலி முடிப்பதற்குள்
துள்ளித் துள்ளி வருகிறது மான்