வெள்ளி, நவம்பர் 09, 2012

15

முதலில் இதை நான் நம்பமாட்டேன்.
எனது நிழல்
தனக்கு பெயர் சூட்டும்படி
இன்று கேட்டுக்கொண்டது.
தவிர்த்துப் பார்த்தேன்
அடம்பிடிக்கத் தொடங்கியது
சூட்டிய பெயர்கள் அனைத்தையும்
நிராகரித்து விட்டு
எனது பெயரை எடுத்துக்கொண்டது
என்னை குறிப்பிடும்படி
எப்படியாவது அழைத்து
என்னைக் காப்பாற்றுங்கள்.
இதன் பின்னும் என்னை அழைத்தால்
நீங்கள் இதை நம்பிவிட்டீர்கள் என அர்த்தம்.
நான் நம்பமாட்டேன்.