வெள்ளி, நவம்பர் 09, 2012

17

1.

கடைசியில் யாரோ வருவாரென்று
மீண்டும் நம்புகிறேன்.
இருவருக்குமான தனிப்பட்ட சுதந்திரத்தை
கூட்டாகப் பொறுப்பேற்கும் ஒருவர்.
முரண்பட்ட இரண்டு திசையை
ஒரு குழந்தை பிறந்ததும்
கடைசியில் யாரோ வருவாரென்று
நம்பமுடியவில்லை.
குழந்தை திசைகளை பிரிக்கும்
புள்ளியாக சிரிப்பிலிருந்து தொடங்கியது.
மேலுள்ள வசனங்கள் குழம்பியிருந்தாலும்
உங்களுக்கு புரியும்.

2.

எனது கவிதையின் உடையணிந்து
அழகுப் போட்டிகளில் மாத்திரம்
கலந்துகொள்ளாதீர்.
உறங்கும்போதும் உள்ளாடைகள் அவசியம்
சில வேளை இது
வெறும் ஆடைதான்
மிக அற்புதமான அம்சங்களை
மறைக்கவும்
வெளிப்படுத்தவும்
இதனால் மாத்திரமே முடியும்.