வெள்ளி, நவம்பர் 09, 2012

18

மூன்றாவது முறையாகவும் 
அழித்துவிட்டு பார்க்கையில்
நிழல் பெருகிக்கொண்டே இருக்கிறது.
அழித்த நிழலின் பிரதி என
புதிய நிழலை நினக்கிறேன்.
வாழ்வதற்கான தருணங்களை
எப்படியோ உருவாக்கவே முயல்கிறது
இணங்கி
தப்பித்து
சமரசம் செய்து
உயிரைக் காப்பாற்ற அது போராடுகிறது.
வாய்ப்புக்கள் சாதகமாகும்போது மட்டுமே
எதிர்க்கவும் செய்கிறது.
நான்காவது முறை நிழலை
சந்திக்கவில்லை.