வெள்ளி, நவம்பர் 09, 2012

அலிப்


எப்படி உயர்ந்த மலையிலிருந்து விழுந்தாலும்
காப்பாற்ற முடியுமென வைத்துக்கொள்வோம்

அதற்காக,
யாரையேனும் தள்ளிவிட நினைப்பீரா..?

காப்பாற்றும் வரை கொலை என்றும்
காப்பாற்றினால்,
கொலை முயற்சி என்றும் ஆகிவிடும்.

இதிலிருந்து தப்பிக்க வாய்த்தால்,
மலையிலிருந்து குதிக்கச் சொல்ல
அவருக்கு மட்டுமே சாத்தியம்.

சொன்னார்

ஆனந்தமாக
அழகாக
பாடியபடி நதிதான் குதித்தது
அப்போதும், தன்னால் காப்பாற்ற முடியுமென்பதை
நிகழ்திக்காட்ட முடியவில்லை.

வருத்தப்பட்டார்

மரமொன்றின் கீழே
பொறுக்கியபடி
உதிர்ந்து விழும் மலர்களை
காப்பாற்றத் தேவையில்லை என்றார்.

மலையிலிருந்து விழுந்தால்
காப்பாற்ற முடியாதென வைத்துக்கொண்டால்,
இதைக்கூட எழுதியிருக்க முடியாது.