வெள்ளி, நவம்பர் 09, 2012

2

கோடுகளைத் திறந்து வைத்துவிட்டு
நாய்க் காதுகளுடன் அவன் அலைந்தான்
கோடுகளினுள் ஏதாவது வந்து நுழையும்
என்று அதிகமாக நம்பினான்
ஏதும் அகப்படாதபோது
வேட்டைக்காரன் கன்னிகளின் ஒழுங்கை மாற்றி
வைப்பதுபோல்,
கோடுகளைக் கலைத்து பின்னிவிட்டான்
மீண்டும் காத்திருக்கத் தொடங்கினான்
கோடுகளினுள் எதுவும் ஊசலாடவில்லை
கடுமையாகச் சலிப்படைந்தபோது
கவிதை எழுதுவதைக் கைவிட்டு
கோடுகளாலான அந்தச் சித்திரத்தின் கீழ்
தனது பெயரை எழுதிவைத்தான்.