வெள்ளி, நவம்பர் 09, 2012

3

சுமார் பத்து வருடமாக ஒரு பூனை வளர்க்கிறேன்.
எங்கு கொண்டுபோய்விட்டாலும் கண்டுபிடித்து என்னிடம் வந்துவிடுகிறது.
எக்ஸ் சொன்னதுபோல்,
கவிதையைத்தான் பூனையாக வளர்க்கிறேன்
பூனையோடு விளையாடும் போது
நான்தான் எக்ஸ் ஆக இருக்கிறேன்.
கண்ணைக் கட்டி காட்டில் எறியும்போது
எக்ஸை நான் சந்திப்பதில்லை.
இது உங்களுக்கான தலைப்பு இல்லை என்று
அடிக்கடி எக்ஸ் என்னிடம் கூறுவான்.
தலைப்பு
பூனை திரும்பி வந்தது.