வெள்ளி, நவம்பர் 09, 2012

5


1.
ஒரு புத்தகத்திற்குள் இருந்து பேசச்சொன்னால் என்ன பேசுவது என சங்கடமாக இருக்கிறது.ஏதாவது அறிவுரை சொல்லவேணும்.அல்லது துயரங்களை அழுது காட்டனும்.இறந்த காலம் இன்பமானது என சொல்லித் தொலைக்க வேணும்.அதற்காக,முதலாவது அல்லது கடைசி இலக்கமாக புத்தகத்தில் இருக்க விரும்புகிறேன்.இரண்டாவது முறை அசைக்க முடியாத.
2.
மழையை உள்ளே வைத்து மூடியபடி
வானமெங்கும் அலைந்து திரியும் மேகத்தைப் பார்த்து,
சாவியைத் தொலைத்துவிட்டது என யூகிப்பது முட்டாள்தனம்.
ஏற்கனவே அது திறந்துதான் இருக்கிறது
மழைதான் வெளியேறுவதில்லை.
அவள் நினைக்கும்போது மேகம் தும்முகிறது என
தாத்தாக் கவிஞனொருவன் சொல்லியுமிருக்கிறான்.
எழுத்து, சுலபமாக நம்மை மலையில் ஏற்றிவிடுமென்றாலும்
மேகத்தின் சுயசரிதையை கேட்டுப் பார்க்கலாம்.
3.
மிகவும் உயரத்தில் இருக்கும் வானத்தின் கீழே பார்க்கிறேன்.மழை வெளியே போகவேண்டாம் என அறிவித்திருக்கிறது.எப்படிச் சொல்லியும் அவளுக்கு புரியவே இல்லை.நான் தனியாக இருக்கிறேன்.