வெள்ளி, நவம்பர் 09, 2012

6

தண்ணீரின் துளிகளை வரிசைப்படுத்துங்கள்.
சிதறிக் கிடப்பவற்றை
சிறுகோடுகளால் இணையுங்கள்
ஆனால்,துளி என்ற தனது வடிவத்தை இழக்கக்கூடாது
அரிதாகப் பார்க்கக்கூடிய ஒரு காட்சியை
விளிம்பொன்றில் நிறுத்தி
கீழே தள்ளிவிடுங்கள்
வீடு கழுவும்போது 
இப்படியும் விளையாடிப் பார்க்கலாம்
வேறு வேலைகள் அவசரமாக இல்லை எனில்.