வெள்ளி, நவம்பர் 09, 2012

8

காதலையும் அதன் துயரையும் நிகழ்த்த
மீன்கள் போல துள்ளிக் குதித்து குடியேறினோம்.
கண்ணாடி மணல்களால் உருவாகியிருந்தது
நீர் பாய்ந்து செல்ல
சுருங்கிய வழிகள் ஏதும் இருக்கவில்லை
தொட்டியில் சிக்கிவிட்டதாக
எங்கள் காதல்,எதையும் நிகழ்த்த தயங்கியது.
சிறகுகளையுடைய விளக்கொன்றுபோல
நிலா எமதருகில் வரவும்
இங்கிருந்து தப்பிச் செல்லவும்
அவசர உதவி தேவை.