வெள்ளி, நவம்பர் 09, 2012

9

பறந்து கொண்டிருக்கும்போது,
எனக்கு சமாந்தரமாக எந்தப் பறவையும் சிறகடித்து
துணைக்கு வரவில்லை.
அடுத்து என்ன செய்ய வேண்டும்.
கீழே இறங்க வேண்டும்
இறங்கி நிமிர்கையில்,
நானும் சமாந்தரமாக சில பறவைகளும்
விளையாடிச் செல்லுவதை பார்க்கிறேன்.
வெப்பம் உடைந்து தெருவில் சிதறிக் கொண்டிருக்கிறது
இதற்கிடையில், நடக்காத ஒன்றை
சொல்லக்கூடாது என நினைக்கிறேன்.